வானியல் கடிகாரம்

வானியல் கடிகாரம் (Astronomical clock) என்பது சூரியன், சந்திரன், விண்மீன் குழாம்கள், மற்றும் சில சமயங்களில் முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தகவலாக தன்னுடைய முகப்பில் காண்பிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரமாகும்.

வானியல் கடிகாரம்
முகப்பு - பிராகா நகர் வானியல் கடிகாரம்

எல்லா கடிகாரங்களிலும் கடிகாரம் என்ற சொல் ஒரு நாளின் நேரத்தைக் காண்பிப்பதற்கு உபயோகமாதல் போலவேதான் வானியல் கடிகாரத்திலும் உபயோகமாகிறது. ஆனால், சற்றுக் கூடுதலாக நேரம மட்டுமின்றி சில வானியல் தகவல்களையும் காண்பிக்கிறது. வானில் சூரியன் மற்றும் சந்திரனின் இருப்பிடத்தைக் இக்கடிகாரம் காட்டுகிறது. மேலும் நிலவின் வயது, பிறைகளின் வளர்ச்சிக் கட்டங்கள், இராசி நட்சத்திரத்தில் சூரியனின் தற்போதைய நிலை, விண்ணக நேரம் மற்றும் பிற வானியல் தரவுகளான கிரகணத் தோற்றங்கள் அல்லது ஒரு சுழலும் நட்சத்திர வரைபடம் ஆகிய அம்சங்களை இக்கடிகாரம் உள்ளடிக்கியுள்ளது. வானாய்வகத்தில் சாதாரணமாக துல்லியக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் இந்த ஊசல் கடிகாரத்தை கால வானியல் சீராக்கியுடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது.

வானியல் கடிகாரங்கள் பொதுவாக புவிமைய மாதிரியை பயன்படுத்தி சூரியக்குடும்பத்தை முன்னிலைப்படுத்தின. அதாவது இக்கடிகாரத்தின் சுழல் மையத்தில் உள்ள வட்டு அல்லது கோளம் சூரியக் குடும்பத்தின் மையம் பூமியென குறிப்பிடும். ஆண்டிகைதெரா இயங்கு முறையில் உள்ளது போல, சூரியன் பூமியைச் சுற்றி இயங்கும் ஒரு தங்கக் கோளமாகவே இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நம்பப்பட்டது. கோப்பர்நிக்கஸ் காலத்துக்கு முந்தைய ஐரோப்பாவின் தத்துவப்பார்வை வானியல் கடிகாரத்தின் சுழல் மையதில் உள்ள 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சூரியன் பூமியைச் சுற்றிவரும் என்ற நம்பிக்கையை ஒத்திருந்தது.

வெளி இணைப்புகள்

Tags:

கோள்சந்திரன்சூரியன்விண்மீன் குழாம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சட் யிபிடிசைலன்ஸ் (2016 திரைப்படம்)பசுபதி பாண்டியன்காப்பியம்ராதாரவிஇந்தியாவின் செம்மொழிகள்கிறிஸ்தவச் சிலுவைசித்தார்த்சிறுதானியம்மரியாள் (இயேசுவின் தாய்)செண்டிமீட்டர்ஜவகர்லால் நேருமுடக்கு வாதம்ஆற்றுப்படைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழர் அளவை முறைகள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பொது ஊழிஇந்து சமயம்ஜி. யு. போப்சித்திரைபூலித்தேவன்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஇறைமைஅனுமன்பாண்டியர்பீப்பாய்பூக்கள் பட்டியல்அன்னை தெரேசாஇந்தியன் பிரீமியர் லீக்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஆ. ராசாமுகலாயப் பேரரசுரமலான்நாடார்குறுந்தொகைபுவிவெப்பச் சக்திதேவநேயப் பாவாணர்திருநெல்வேலிசெயற்கை நுண்ணறிவுஈரோடு மக்களவைத் தொகுதிம. பொ. சிவஞானம்திராவிசு கெட்மியா காலிஃபாபுலிசூரியக் குடும்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்விவேகானந்தர்ஆய்த எழுத்து (திரைப்படம்)பெயர்ச்சொல்மக்களாட்சிஉயர் இரத்த அழுத்தம்தென் சென்னை மக்களவைத் தொகுதிகுண்டலகேசிதேவாரம்மங்கோலியாவிஷ்ணுஆண்டு வட்டம் அட்டவணைரோபோ சங்கர்பர்வத மலைவீரப்பன்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமுல்லைப்பாட்டுபண்ணாரி மாரியம்மன் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்எஸ். ஜெகத்ரட்சகன்மார்பகப் புற்றுநோய்ஆசிரியர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அயோத்தி தாசர்திருவாசகம்நற்கருணை ஆராதனைநன்னூல்இந்தியப் பொதுத் தேர்தல்கள்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956🡆 More