மூளையுறை அழற்சி

மூளையுறை அழற்சி (Meningitis) என்பது மனித மூளை மற்றும் முள்ளந்தண்டு வடம் ஆகியவற்றைச் சுற்றியிருக்கும் பாதுகாப்புச் சவ்வுகளில் ஏற்படும் தீவிரமான அழற்சியைக் குறிக்கிறது.

இத்தகு அழற்சி, தீ நுண்மங்களினாலோ, பாக்டீரியாக்களினாலோ, அல்லது பிற நுண்ணுயிரிகளினாலோ, அரிதாகச் சில மருந்துகளினாலோ உண்டாகலாம். மூளையுறை அழற்சியில் மூளை மற்றும் தண்டுவடத்திற்கருகில் அழற்சி ஏற்படுவதால் உயிருக்கு அபாயம் விளைவிப்பதாக உள்ளது. எனவே, இந்நிலை மருத்துவ நெருக்கடி நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மூளையுறை அழற்சி
மூளையுறை அழற்சி
தண்டுவட, மூளைச் சவ்வுகள்: வன்னுறை (dura mater), மென்வலையம் (arachnoid), மென்னுறை (pia mater).
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்றுநோய், நரம்பியல்
ஐ.சி.டி.-10G00.–G03.
ஐ.சி.டி.-9320322
நோய்களின் தரவுத்தளம்22543
மெரிசின்பிளசு000680
ஈமெடிசின்med/2613 emerg/309 emerg/390
பேசியண்ட் ஐ.இமூளையுறை அழற்சி
ம.பா.தD008581

மூளையுறை அழற்சியின் பொதுவான அறிகுறிகளாக தலைவலி, கழுத்து விறைப்பு ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல், மனக்கலக்கம் அல்லது சுய நினைவு மாறுபடுதல், வாந்தி, வெளிச்சம், ஒலியைச் சகிக்கும் தன்மைக் குறைவு [ஒளியச்சம் (photophobia), ஒலியச்சம் (phonophobia)] ஆகியவற்றைக் கூறலாம். இந்நோயுள்ள குழந்தைகள் சாதரணமாக குறிப்பிடப்படாத நோய் உணர்குறிகளான எரிச்சல், தூக்கக் கலக்கம் ஆகியவற்றை மட்டுமே வெளிப்படுத்தலாம். வங்குநோய் (சொறி) காணப்பட்டால் ஒரு குறிப்பிட்ட மூளையுறை அழற்சி நோய் உருவாகுவதற்கான காரணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதலாம்; உதாரணமாக, மூளையுறைமணிய பாக்டீரியாவினால் (meningococcal bacteria) உண்டாகும் மூளையுறை அழற்சியின்போது குறிப்பிடும்படியான சொறி நோய் வடிவம் காணப்படலாம்.

முதுகுத் தண்டுவட துளையிடுதல் சோதனை மூலமாக மூளையுறை அழற்சி உள்ளதா அல்லது இல்லையா எனத் தீர்மானம் செய்யப்படுகிறது. முள்ளியக்கால் வழியாக ஒரு ஊசி செலுத்தப்பட்டு மூளை, தண்டுவடத்தைச் சுற்றியுள்ள மூளை முதுகுத் தண்டுவட நீரின் (cerebrospinal fluid) பதக்கூறு பெறப்படுகிறது. மருத்துவ அறுதியீட்டு ஆய்வகங்களில் முதுகுத் தண்டுவட நீர் பரிசோதிக்கப்படுகிறது. தீவிரமான மூளையுறை அழற்சிக்கான முதல் சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளோ, அல்லது சிலநேரங்களில் தீநுண்ம எதிர்ப்பிகளோ கொடுக்கப்படுகிறது. அழற்சியினால் ஏற்படும் அதிகப்படியான சிக்கல்களைக் களைய கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. உடனடியாகச் சிகிச்சையளிக்காவிட்டால், கேள்விக் குறைபாடு, கால்-கை வலிப்பு, மண்டை வீக்கம் (hydrocephalus), உணரறிவியக் குறைபாடுகள் (cognitive deficits) போன்ற கடுமையான நெடுங்கால விளைவுகள் மூளையுறை அழற்சியினால் ஏற்படுகின்றன. பாக்டீரியா, தீநுண்மங்கள் மூலம் ஏற்படும் சில வகையான மூளையுறை அழற்சிகள் நோயெதிர்ப்புத்திறனூட்டல் மூலம் தடுக்கப்பட இயலும். மூளையுறை அழற்சியினால் 1990 - ல் ஏற்பட்ட 464,000 இறப்புகளைக் காட்டிலும் குறைவாக, 2013 - ல் 303,000 இறப்புகள் ஏற்பட்டன.

மேற்கோள்கள்

Tags:

அழற்சிதீ நுண்மம்நுண்ணுயிரிபாக்டீரியாமனித மூளைமருந்துமுள்ளந்தண்டு வடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விவேகானந்தர்குண்டூர் காரம்முதல் மரியாதைதமிழ் தேசம் (திரைப்படம்)வில்லிபாரதம்சிற்பி பாலசுப்ரமணியம்பாளையத்து அம்மன்சங்க இலக்கியம்சீவக சிந்தாமணிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்புறாயாவரும் நலம்ஔவையார்கடவுள்இந்தியாவின் பசுமைப் புரட்சிவிடுதலை பகுதி 1அகரவரிசைசெண்டிமீட்டர்ர. பிரக்ஞானந்தாதமிழ் விக்கிப்பீடியாவெ. இராமலிங்கம் பிள்ளைஅக்கிஅனுமன்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)புவிமுடியரசன்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்கன்னத்தில் முத்தமிட்டால்சனீஸ்வரன்அறுபது ஆண்டுகள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)உத்தரப் பிரதேசம்நரேந்திர மோதிசிறுகதைகருப்பசாமிமுல்லை (திணை)கண்ணகிபகவத் கீதைவசுதைவ குடும்பகம்சிவனின் 108 திருநாமங்கள்பித்தப்பைதமிழக வரலாறுஅரிப்புத் தோலழற்சிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்புங்கைபஞ்சதந்திரம் (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாபொன்னுக்கு வீங்கிகணினிநந்திக் கலம்பகம்இன்னா நாற்பதுகள்ளுஉரிச்சொல்கிராம சபைக் கூட்டம்ஐம்பூதங்கள்இடிமழைஇந்திய மக்களவைத் தொகுதிகள்அழகிய தமிழ்மகன்வைதேகி காத்திருந்தாள்மயங்கொலிச் சொற்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுபட்டினத்தார் (புலவர்)அக்கினி நட்சத்திரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇன்ஸ்ட்டாகிராம்முல்லைக்கலிகூத்தாண்டவர் திருவிழாதமிழச்சி தங்கப்பாண்டியன்முன்மார்பு குத்தல்ஆத்திசூடிஏலகிரி மலைசத்திமுத்தப் புலவர்பரதநாட்டியம்பெ. சுந்தரம் பிள்ளைதிரு. வி. கலியாணசுந்தரனார்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)🡆 More