பிரீத் பராரா

பிரீத் பராரா (Preetinder Singh Preet Bharara, பிறப்பு: அக்டோபர் 13 1968) அமெரிக்க வழக்கறிஞர்.

2009 முதல் 2017 வரை நியூயார்க்கு தெற்கு மாவட்ட  அரசு வழக்கறிஞராகப் பணி புரிந்தார். இவர் இந்திய வம்சாவளியைச்  சேர்ந்தவர் ஆவார். பொது வாழ்வில் நிலவும் ஊழல், வால் ஸ்ட்ரீட் குற்றங்கள் போன்ற தீமைகளை எதிர்த்து வெளிப்படையாகச் செயல்பட்டவர். அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் பராக் ஒபாமா இவரை அரசு வழக்கறிஞராக அமர்த்தினார்.

பிரீத் பராரா
Preet Bharara
பிரீத் பராரா
நியூயார்க் தெற்கு மாவட்ட அரச வழக்கறிஞர்
பதவியில்
13 ஆகத்து 2009 – 11 மார்ச் 2017
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
டோனால்ட் டிரம்ப்
முன்னையவர்லேவ் தாசின் (பதில்)
பின்னவர்சூன் எச். கிம் (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 13, 1968 (1968-10-13) (அகவை 55)
ஃபிரோஸ்பூர், பஞாப், இந்தியா
வாழிடம்(s)நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
முன்னாள் கல்லூரிஹார்வர்டு பல்கலைக்கழகம்
கொலம்பியா சட்டப் பள்ளி
கையெழுத்துபிரீத் பராரா

பிறப்பும் படிப்பும்

சீக்கியத் தந்தைக்கும் இந்து தாய்க்கும் பஞ்சாப் மாநில பிரோஸ்புர் என்னும் ஊரில் பிறந்தார். 1970 இல் இவருடைய பெற்றோர் அமெரிக்காவில் குடியேறினார்கள். நியூ செர்சியில் வளர்ந்த பிரீத் பராரா ஆர்வர்டு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா சட்டப் பள்ளியில் படித்து வழக்கறிஞர் பட்டமும் பெற்றார்.

நீதித்துறைப் பணிகள்

நியுயார்க்கு தென் மாவட்டத்திற்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் பொறுப்பை 2009  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுக் கொண்டார். ஆயுதக்கடத்தல், கஞ்சா கடத்தல், பயங்கரவாதச் செயல்கள் ஆகியவற்றைத் தடுக்கவும் கண்டு ஆராயவும் 25 நாடுகளுக்கு அதிகாரிகளை அனுப்ப உத்தரவிட்டார்.

பங்குச் சந்தைகளில் சட்டத்திற்கு முரணாக உள் வணிகத்தைத் தடுத்து நிறுத்த குற்றம் இழைப்போரைத் தண்டித்தார். சிட்டி பாங்கு, அமெரிக்கன் பாங்கு ஆகியவற்றின் முறையற்ற செயல்களுக்கு விசாரணை நடத்தித் தண்டனைகள் வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் செய்த ஊழல் வழக்குகள் மீது உசாவல் நடத்தி உரிய தண்டனை வழங்கினார்.

இந்தியத் தூதர் தேவயானி கோபர்கடே சம்பவம் நடந்தபோது சட்டப்படி பிரீத் பராரா நடந்துகொண்டார். மேட் ஆப் போன்சி மற்றும் ஜேபி மார்கண் சேஸ் ஆகிய வழக்குகளும் இவர் காலத்தில் ஏற்பட்டன.

பதவிப் பறிப்பு

அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பதவிகளுக்குப் புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வந்தார். இந்நிலையில், பராரா உட்பட முந்தைய அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட 46 அரசு வழக்கறிஞர்களை உடனடியாகப் பதவி விலக துணை சட்டமா அதிபர் உத்தரவிட்டார். இதற்குப் பராரா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பராராவின் பதவி பறிக்கப்பட்டது. அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பதவிகளுக்குப் புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வந்தார். ஆனாலும், பராரா தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கலாம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

பிரீத் பராரா பிறப்பும் படிப்பும்பிரீத் பராரா நீதித்துறைப் பணிகள்பிரீத் பராரா பதவிப் பறிப்புபிரீத் பராரா மேற்கோள்கள்பிரீத் பராரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாவுக்கரசு நாயனார்லியோநந்திக் கலம்பகம்தங்க தமிழ்ச்செல்வன்பொன்னுக்கு வீங்கிமுத்துராஜாசவ்வாது மலைமணிமேகலை (காப்பியம்)ஹதீஸ்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அகோரிகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஸ்ரீடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இராவணன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)குமரிக்கண்டம்மின்னஞ்சல்சோழர்முதுமொழிக்காஞ்சி (நூல்)காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுஓம்வேலு நாச்சியார்சிவன்அம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்கொள்ளுகலித்தொகைகேசரி யோகம் (சோதிடம்)மக்காவினைச்சொல்ஆழ்வார்கள்விண்ணைத்தாண்டி வருவாயாஇந்திய அரசியலமைப்புபெயர்ச்சொல்தேவதாசி முறைஅபினிமுரசொலி மாறன்சங்கம் (முச்சங்கம்)இந்தியத் தேர்தல்கள்பிரான்சிஸ்கன் சபைநயன்தாராஉயிர்ச்சத்து டிநஞ்சுக்கொடி தகர்வுமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்திருப்பூர் மக்களவைத் தொகுதிகருப்பசாமிதமிழ்ப் புத்தாண்டுமூசாகரிகால் சோழன்மாதம்பட்டி ரங்கராஜ்மொழிபெயர்ப்புசிறுபாணாற்றுப்படைஇட்லர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பாண்டியர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இராமலிங்க அடிகள்கிராம நத்தம் (நிலம்)மாடுகல்விகலம்பகம் (இலக்கியம்)எம். ஆர். கே. பன்னீர்செல்வம்தமிழர் கலைகள்குடியுரிமைஇராவண காவியம்வீரப்பன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)விஜயநகரப் பேரரசுமனித மூளைபனிக்குட நீர்திராவிடர்வினோஜ் பி. செல்வம்தொல். திருமாவளவன்ரமலான் நோன்புசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)69 (பாலியல் நிலை)🡆 More