கணிதம் சுருள்வு

கணிதத்தில் சுருள்வு (involution) என்பது தனக்குத்தானே நேர்மாறாக அமையும் ஒரு சார்பாகும்.

அதாவது சார்பு f ஆனது சுருள்வுச் சார்பு எனில், f இன் ஆட்களத்திலமையும் அனைத்து x மதிப்புகளுக்கும் கீழுள்ள முடிவை அது நிறைவு செய்யும்:

கணிதம் சுருள்வு
சார்பு ஒரு சுருள்வு எனில், அதனை ஒரு உறுப்பின்மீது இருமுறை தொடர்ந்து செயற்படுத்தும்போது அவ்வுறுப்பானது இறுதியில் எந்தவித மாற்றமும் அடையாது.

பொதுப் பண்புகள்

    பிற எடுத்துக்காட்டுகள்
    எண்கணிதத்தில் −1 ஆல் பெருக்கல், தலைகீழி காணல்
    கணக் கோட்பாட்டில் நிரப்பு கணங்கள் காணல்
    சிக்கலெண் இணையியம் காணல்;
    வட்ட நேர்மாற்றம்
    அரைத்திருப்பச் சுழற்சி
  • n = 0, 1, 2, … உறுப்புகள் கொண்ட ஒரு கணத்தின் மீதான சுருள்வுகளின் எண்ணிக்கையைக் கீழுள்ள மீள்வரு தொடர்பால் காணலாம். இந்த மீளுறவு, கெயின்ரிச் ஆகஸ்ட் ரோத் (Heinrich August Rothe) என்ற ஜெர்மானிய கணிதவியலாளரால் 1800 இல் கண்டறியப்பட்டது:
    a0 = a1 = 1;
    an = an − 1 + (n − 1)an − 2, for n > 1.

இந்தத் தொடர்முறையின் சில தொடக்க உறுப்புகள் 1, 1, 2, 4, 10, 26, 76, 232 (OEIS-இல் வரிசை A000085)

    இந்த எண்கள் தொலைபேசி எண்கள் என அழைக்கப்படுகின்றன.
  • f , g என்ற இரு சார்புகளுக்கு கணிதம் சுருள்வு  என்பது உண்மையாக ’இருந்தால், இருந்தால் மட்டுமே’, அவற்றின் தொகுப்பு கணிதம் சுருள்வு  ஒரு சுருள்வாகும்.
  • ஒற்றையெண்ணிக்கையிலான உறுப்புகளின் மீது நடைவெறும் சுருள்வு ஒவ்வொன்றுக்கும், குறைந்தபட்சம் ஒரு நிலைத்த புள்ளியாவது இருக்கும். பொதுவாக, ஒரு சுருள்வு செயற்படுத்தப்படும் உறுப்புகளின் எண்ணிக்கை, அச்சுருள்வின் நிலைத்த புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டும் ஒன்றுபோல ஒற்றையெண்களாக இருக்கும் அல்லது இரட்டை எண்களாக இருக்கும்.

கணிதக் களங்களில் சுருள்வு

முன் வகைநுண்கணிதம்

சுருள்வின் அடிப்படை எடுத்துக்காட்டுகளாக சார்புகள் உள்ளன.

சுருள்வுகளாக அமையும் சார்புகள்:

    கணிதம் சுருள்வு 
    கணிதம் சுருள்வு 
    கணிதம் சுருள்வு  (மேலுள்ள இரு சார்புகளின் தொகுப்புச் சார்பு)
    கணிதம் சுருள்வு  (கணிதம் சுருள்வு  இல் வரையறுக்கப்பட்டது)

யூக்ளிடிய வடிவவியல்

முப்பரிமாண யூக்ளிடிய வெளியில், ஒரு தளத்தில் நடைபெறும் எதிரொளிப்பு ஒரு சுருள்வாகும். ஒரு புள்ளியை தொடர்ந்து இருமுறை எதிரொளிக்கும்போது இறுதியில் கிடைக்கும் எதிருரு எடுத்துக்கொண்ட புள்ளியாகவே இருப்பதைக் காணலாம்.

புள்ளி எதிரொளிப்பும் ஒரு சுருள்வாகும். (புள்ளி எதிரொளிப்பு சுருள்வு மட்டுமே, அது ஒரு எதிரொளிப்பு இல்லை)

இந்த உருமாற்றங்கள் இரண்டும் கேண்மை சுருள்வுகளுக்கு (affine involution) எடுத்துக்காட்டுகளாகும்.

குலக் கோட்பாடு

ஒரு குலத்தில் ஒரு உறுப்பின் வரிசை 2 ஆக இருந்தால் அந்த உறுப்பு சுருள்வாகும்.

குலத்தின் ஒரு உறுப்பு a பின்வருமாறு இருந்தால் அது ஒரு சுருள்வு :

மேற்கோள்கள்

  • Todd A. Ell (2007), "Quaternion involutions and anti-involutions", Computers & Mathematics with Applications, 53 (1): 137–143, doi:10.1016/j.camwa.2006.10.029

மேலும் வாசிக்க

  • Knus, Max-Albert; Merkurjev, Alexander; Rost, Markus; Tignol, Jean-Pierre (1998), The book of involutions, Colloquium Publications, vol. 44, With a preface by J. Tits, Providence, RI: American Mathematical Society, ISBN 0-8218-0904-0, Zbl 0955.16001

Tags:

கணிதம் சுருள்வு பொதுப் பண்புகள்கணிதம் சுருள்வு கணிதக் களங்களில் சுருள்வுகணிதம் சுருள்வு மேற்கோள்கள்கணிதம் சுருள்வு மேலும் வாசிக்ககணிதம் சுருள்வுசார்புநேர்மாறுச் சார்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுரைடைட்டன் (துணைக்கோள்)திருநாவுக்கரசு நாயனார்அகத்தியமலைஇயற்கை வளம்சூரைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மலையாளம்புற்றுநோய்முக்கூடற் பள்ளுஈரோடு தமிழன்பன்நஞ்சுக்கொடி தகர்வுமணிமேகலை (காப்பியம்)ஜெயம் ரவிம. கோ. இராமச்சந்திரன்விசயகாந்துசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅக்பர்கரூர் மக்களவைத் தொகுதிகுறுந்தொகைரோபோ சங்கர்வேற்றுமையுருபுஇரட்சணிய யாத்திரிகம்பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு சட்டப் பேரவைமதுராந்தகம் தொடருந்து நிலையம்எலுமிச்சைமெய்யெழுத்துநாயன்மார் பட்டியல்சைலன்ஸ் (2016 திரைப்படம்)பதிற்றுப்பத்துஇன்னா நாற்பதுநாலடியார்இலவங்கப்பட்டைதமிழ் தேசம் (திரைப்படம்)குருதிருத்தணி முருகன் கோயில்இரவு விடுதிபெருங்கடல்செஞ்சிக் கோட்டைமியா காலிஃபாசீறாப் புராணம்காதல் மன்னன் (திரைப்படம்)தண்டியலங்காரம்மொழிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகொன்றைதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சினைப்பை நோய்க்குறிமுத்துராஜாமாணிக்கம் தாகூர்சித்தர்கள் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்நீதிக் கட்சிகரும்புற்றுநோய்கோயில்தமிழ்ப் பருவப்பெயர்கள்செம்பருத்திகீர்த்தி சுரேஷ்கா. ந. அண்ணாதுரைநெடுநல்வாடை (திரைப்படம்)கோயம்புத்தூர் மாவட்டம்மதுரை மக்களவைத் தொகுதிபரிதிமாற் கலைஞர்அயோத்தி தாசர்நுரையீரல் அழற்சிசுந்தர காண்டம்சோழர்லியோதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024எம். ஆர். ராதாகணையம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஹஜ்போயர்விண்ணைத்தாண்டி வருவாயாநெல்லிசிலம்பம்பெரியபுராணம்🡆 More