ஸ்விஃப்ட்

பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ள ஸ்விஃப்ட் எனும் வலைதளம் சேவை அமைப்பாக பயன்படுகிறது.

பன்னாட்டு வங்கிகளுக்கு இடையேயான நிதிசார்ந்த தகவல்தொடர்பு (Worldwide Interbank Financial Telecommunication) என்பதன் சுருக்கமே ஸ்விஃப்ட் என்பதாகும். 1973-ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட் அமைப்பு பெல்ஜியமில் நிறுவப்பட்டது. ஸ்விஃப்ட், 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000 வங்கிகள் மற்றும் நிறுவனங்களை இணைக்கிறது.

ஸ்விஃப்ட் அமைப்பு பாரம்பரிய வங்கி அல்ல. இது ஒரு வகையான உடனடி செய்தியிடல் அமைப்பாகும். மிகச்சிறு பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் போன்று ஸ்விப்ட் மில்லியன் கணக்கில் பணப்பரிமாற்றம் நடத்தப் பயன்படுகிறது. பணம் அனுப்பப்பட்ட பிறகும், பெறப்பட்ட பிறகும் பயனர்களுக்கு ஸ்விப்ட் அமைப்பு தகவல் அளிக்கிறது. பெரும்பாலான பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஸ்விஃப்ட் வலைதளத்தைப் பயன்படுத்துகின்றது. இரண்டு வங்கிகளுக்கிடையேயான நடைபெறும் பணப்பரிமாற்றங்களை சிறிய செய்தி சுருக்கம் மூலம் ஸ்விப்ட் வலைதளம் தொடர்புடையர்களுக்கு அனுப்புவதன் மூலம் நிதிப்பரிமாற்றங்கள் உறுதி செய்யப்படுகிறது.

இரண்டு வங்கிகள் உறவில் இருக்கும்போது (ஒருவருக்கொருவர் வணிகக் கணக்குகள்), ஸ்விப்ட் செய்தி வந்தவுடன் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட கணக்கிலிருந்து பணம் மற்றவரின் கணக்கிற்கு வங்கிகளின் வணிகக் கணக்குகள் வழியாக மாற்றப்படுகிறது. இதற்கு வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்கிறது. நிதிப் பரிமாற்றத்தில் இரண்டு வங்கிகளுக்கும் தொடர்பு இல்லை என்றால், ஒரு இடைநிலை வங்கியாக ஸ்விப்ட் அமைப்பு செயல்படும். இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பரிமாற்றத்தில் இரண்டு வகையான நாணயங்கள் இருந்தால், வங்கிகளில் ஒன்று நாணய பரிமாற்றத்தை செய்யும். ஆனால் ஸ்விப்ட் வலைதளம் உண்மையில் பணத்தை மாற்றாது, குறியீடுகளைப் பயன்படுத்தி நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனை செயல்முறை ஆணைகளை தெரிவிக்கிறது.

உண்மையான நிதி பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) மற்றும் வங்கி அடையாளக் குறியீடு (IBAN) வடிவங்கள் தரப்படுத்தள்ளது. ஸ்விஃப்ட் வலைதளம், ஒவ்வொரு நிதி நிறுவனத்திற்கும் தனிப்பட்ட மற்றும் 8 அல்லது 11 எழுத்துகளைக் கொண்ட ஒரு குறியீட்டை ஒதுக்குகிறது. இந்த ஸ்விஃப்ட் குறியீடு, ISO-9362 அல்லது வங்கி அடையாளக் குறியீடு (BIC) என அழைக்கப்படுகிறது. இது நிறுவனக் குறியீடு, நாட்டின் குறியீடு, இருப்பிடக் குறியீடு (அல்லது நகரக் குறியீடு) மற்றும் தனிப்பட்ட வங்கிக் கிளைகளுக்கான விருப்பக் கிளைக் குறியீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) குறியீடு மற்றும் ஸ்விஃப்ட் குறியீடு ஆகியவை ஒரே மாதிரியானவை அல்ல. ஸ்விஃப்ட் குறியீடு ஒரு வங்கியை மட்டுமே அடையாளப்படுத்துகிறது, சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) குறியீடு மற்றும் வங்கியில் உள்ள குறிப்பிட்ட கணக்கு இரண்டையும் அடையாளம் காட்டுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடு சர்வதேச வங்கிக் கணக்கு எண் பயன்படுத்துவதற்கு பதிலாக, உள்நாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு ABA ரூட்டிங் எண்களையும், சர்வதேச பணப்பரிமாற்றங்களுக்கு ஸ்விப்ட் குறியீடுகளையும் பயன்படுத்துகிறது.

ஸ்விப்ட் செயல்படும் முறை

ஒரு பொருளை ஏற்றுமதி செய்பவருக்கும், இறக்குமதி செய்பவருக்கும் இடையே பொதுவான ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் இல்லையெனில், ஸ்விப்ட் அமைப்பு இருவரின் வங்கிகளுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக வேலை செய்யும். ஸ்விப்ட் வலைதளம் உண்மையில் பணத்தை மாற்றாது. இது ஸ்விப்ட் குறியீடுகளைப் பயன்படுத்தி நிதி நிறுவனங்களுக்கிடையேயான நிதிப்பரிமாற்ற ஆணைகளை தெரிவிக்கிறது. உண்மையான நிதி பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN ) மற்றும் வங்கி அடையாளக் குறியீடு (BIC) வடிவங்களை தரப்படுத்தியுள்ளது. ஸ்விஃப்ட் ஒவ்வொரு நிதி நிறுவனத்திற்கும் தனிப்பட்ட மற்றும் 8 அல்லது 11 எழுத்துகளைக் கொண்ட ஒரு குறியீட்டை ஒதுக்குகிறது. இந்த ஸ்விப்ட் குறியீடு, ISO-9362 அல்லது வங்கி அடையாளக் குறியீடு (BIC) குறியீடு என அழைக்கப்படுகிறது. இது நிறுவனக் குறியீடு, நாட்டின் குறியீடு, இருப்பிடக் குறியீடு (அல்லது நகரக் குறியீடு) மற்றும் தனிப்பட்ட கிளைகளுக்கான விருப்பக் கிளைக் குறியீடு ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்கி அடையாளக் குறியீடு மற்றும் ஸ்விப்ட் குறியீடு ஆகியவை ஒரே மாதிரியானவை அல்ல. ஸ்விப்ட் குறியீடு ஒரு வங்கியை மட்டுமே அடையாளப்படுத்துகிறது. சர்வதேச வங்கிக் கணக்கு எண் (IBAN) வங்கி மற்றும் வங்கியில் உள்ள குறிப்பிட்ட கணக்கு இரண்டையும் அடையாளம் காட்டுகிறது.

ஸ்விப்ட் அமைப்பை இயக்குபவர்கள்

ஸ்விப்ட் என்பது நாடுகளுக்கு இடையேயான ஒரு கூட்டுறவு முறை அமைப்பாகும். இதை எந்த ஒரு நாட்டாலும் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்தப்படவில்லை. இது 25 பேர் கொண்ட பன்னாட்டு இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் குழு-10 நாடுகளின் மைய வங்கிகளான ரிக்ஸ் பேங்க், சுவிஸ் நேஷனல் பேங்க், பாங்க் ஆஃப் இங்கிலாந்து, யுஎஸ்ஏ பெடரல் ரிசர்வ் அமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் நேஷனல் பேங்க் ஆஃப் பெல்ஜியம் ஆகியவற்றால் மேற்பார்வையிடுவதுடன், நடுநிலையாகவும் செயல்படுகிறது. ஸ்விப்ட் அமைப்பு பெல்ஜியம் நாட்டின் சட்டத்தின் கீழ் செயல்படுவதால், அது தடைகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கும் இணங்க செயல்படவேண்டும்.

ஸ்விப்ட் அமைப்பு தடை செய்த நாடுகள்

2012-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை ஆணையம், இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் நாட்டின் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஈரான் நாடு ஸ்விப்ட் அமைப்பு மூலம் உலக நாடுகளிடையே பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ள இயலாததால், ஈரான் நாட்டின் பொருளாதாரம் வலு இழந்தது.

2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி இறுதி வாரத்தில் துவங்கிய உக்ரைன் மீதான உருசியாவின் போரைக் கட்டுப்படுத்துவதற்கு, ஸ்விப்ட் அமைப்ப்பிலிருந்து ருசியா விலக்கப்பட்டது. இதனால் உருசியா எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு வணிகம் செய்தாலும், அதற்கான நிதியை பெற இயலாது, பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஸ்விஃப்ட் ஸ்விப்ட் செயல்படும் முறைஸ்விஃப்ட் ஸ்விப்ட் அமைப்பை இயக்குபவர்கள்ஸ்விஃப்ட் இதனையும் காண்கஸ்விஃப்ட் மேற்கோள்கள்ஸ்விஃப்ட்பெல்ஜியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரான்சிஸ்கன் சபைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சப்ஜா விதைஇரண்டாம் உலகப் போர்கௌதம புத்தர்குடியுரிமைவெந்தயம்உலா (இலக்கியம்)ஆத்திசூடிபாபுர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருக்குறள்கிராம ஊராட்சிஇயேசுவின் உயிர்த்தெழுதல்பச்சைக்கிளி முத்துச்சரம்கவிதையாதவர்அளபெடைசிவாஜி (பேரரசர்)ஆபிரகாம் லிங்கன்நஞ்சுக்கொடி தகர்வுகுமரி அனந்தன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்மதராசபட்டினம் (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைதொல். திருமாவளவன்வல்லினம் மிகும் இடங்கள்நாமக்கல் மக்களவைத் தொகுதிஅலீசித்தார்த்நவதானியம்மூவேந்தர்மியா காலிஃபாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமூசாநுரையீரல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சத்ய பிரதா சாகுஇசுலாமிய நாட்காட்டிகருத்தரிப்புமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழக வெற்றிக் கழகம்மக்களவை (இந்தியா)மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பறையர்கமல்ஹாசன்நம்மாழ்வார் (ஆழ்வார்)ரோபோ சங்கர்பெண்பங்களாதேசம்பாட்டாளி மக்கள் கட்சிகுதிரைதஞ்சைப் பெருவுடையார் கோயில்பிரேசில்எட்டுத்தொகை தொகுப்புதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அருங்காட்சியகம்நாலடியார்பூலித்தேவன்ஹோலிஅண்ணாமலையார் கோயில்தாராபாரதிநன்னூல்திவ்யா துரைசாமிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிமார்ச்சு 28நரேந்திர மோதிதமிழ் எண்கள்மீனா (நடிகை)மலைபடுகடாம்காரைக்கால் அம்மையார்சித்தர்குலுக்கல் பரிசுச் சீட்டுஎருதுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்உரைநடைமரகத நாணயம் (திரைப்படம்)மாதவிடாய்🡆 More