எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி

வி.

கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014) சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

வி. கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு(1925-04-21)ஏப்ரல் 21, 1925
இறப்புசூன் 12, 2014(2014-06-12) (அகவை 89)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி, கௌசிகன்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுகுழந்தை எழுத்தாளர்
பெற்றோர்வேங்கடராமன், காந்திமதி

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் அந்தணக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வாண்டுமாமா. இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கௌசிகன் என்ற புனைபெயரில் பெரியவர்களுக்கு எழுதி வந்தார். ஆனந்த விகடன் இதழின் ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகளை எழுதத் தூண்டினார். வாண்டுமாமா என்ற புனைபெயரை இவருக்கு சூட்டியவரும் இவர் தான். ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்னர் திருச்சியில் இருந்து வெளிவந்த சிவாஜி என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார். அவ்விதழின் சிறுவர் மலர் பகுதியில் சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.

பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள் இதழிலும் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் குழந்தைகளிடையே புகழ் பெறத் தொடங்கியது. கோகுலம் பத்திரிகை வெளியீடு நிறுத்தப்பட்ட பின்னர் 1984 ஆம் ஆண்டில் பூந்தளிர், "பூந்தளிர் அமர் சித்திரக் கதைகள்" ஆகிய குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. பூந்தளிர் மீண்டும் 1990 இல் வாண்டுமாமாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

வாண்டுமாமா 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ஓநாய்க்கோட்டை போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.

படைப்புகள்

அகரவரிசையில் . . .

சிறுகதைகள்

  • நூறு கண் ராட்சதன்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்

இவர் எழுதிய பல நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கைக் குறிப்புஎழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி படைப்புகள்எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி சிறுகதைகள்எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி இவற்றையும் பார்க்கஎழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி மேற்கோள்கள்எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி வெளி இணைப்புகள்எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்திஓவியம்கல்கி (இதழ்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்திருப்பாவைசுக்ராச்சாரியார்சிங்கம் (திரைப்படம்)எல். முருகன்அரவிந்த் கெஜ்ரிவால்தமிழ் எண்கள்தமிழில் சிற்றிலக்கியங்கள்இங்கிலாந்துஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்நீக்ரோதமிழ் எழுத்து முறைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஆரணி மக்களவைத் தொகுதிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஓ. பன்னீர்செல்வம்விபுலாநந்தர்நீர் மாசுபாடுவெ. இறையன்புபால் கனகராஜ்சிவனின் தமிழ்ப் பெயர்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிருநெல்வேலிசிறுபஞ்சமூலம்புதுச்சேரிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஜோதிமணிசென்னை சூப்பர் கிங்ஸ்கருக்கலைப்புஇந்திய நாடாளுமன்றம்குப்தப் பேரரசுபெ. சுந்தரம் பிள்ளைமஜ்னுசெயங்கொண்டார்ஜி. யு. போப்கர்நாடகப் போர்கள்ராசாத்தி அம்மாள்திருமூலர்பால்வினை நோய்கள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்குடும்பம்ஹஜ்நிர்மலா சீதாராமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஈரோடு தமிழன்பன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)புதுமைப்பித்தன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பரணி (இலக்கியம்)தாயுமானவர்நாயன்மார் பட்டியல்பித்தப்பைம. பொ. சிவஞானம்திருமணம்சிறுதானியம்அன்புமணி ராமதாஸ்ஆறுமுக நாவலர்ஐங்குறுநூறுகன்னியாகுமரி மாவட்டம்ஆப்பிள்குணங்குடி மஸ்தான் சாகிபுசீர் (யாப்பிலக்கணம்)மணிமேகலை (காப்பியம்)வளர்சிதை மாற்றம்பொன்னுக்கு வீங்கிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சுமேரியாதிருநங்கைஆசாரக்கோவைநாடகம்சப்தகன்னியர்இலங்கையின் மாகாணங்கள்கடலூர் மக்களவைத் தொகுதிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்அணி இலக்கணம்மஞ்சும்மல் பாய்ஸ்🡆 More