தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை
உருவாக்கம்1971
வகைஅரசு
நோக்கம்தமிழ் மொழி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட துறை.
தலைமையகம்சென்னை
தலைமையகம்
ஆள்கூறுகள்13°03′56″N 80°15′16″E / 13.065683°N 80.254395°E / 13.065683; 80.254395
சேவை பகுதி
தமிழ்நாடு
அமைச்சர்
மு. பெ. சாமிநாதன்
செயலாளர்
மகேசன் காசிராஜன் இ.ஆ.ப
இயக்குநர்
முனைவர் ந. அருள்
வரவு செலவு திட்டம்
80,26,00,000 (2021-22)
வலைத்தளம்tamilvalarchithurai.tn.gov.in

வரலாறு

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் என். வெங்கடேசன் பொறுப்பேற்றார்.

ஆட்சிமொழிக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.

  1. எஸ்.வெங்கடேசுவரன், இ.கு.ப.(1957-63)
  2. சி.எ. இராமகிருட்டினன், இ.கு.ப.(1963-65)
  3. வி. கார்த்திகேயன், இ.ஆ.ப.(1965-68)

இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும், ஆட்மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு உறுதுணையான ஆட்சிச் சொல் அகராதியினை வளப்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கியது. 1971-ஆம் ஆண்டில் 28.5.1971 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற புதிய துறை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அத்துறையிடம் இப்பணிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி இயக்குநர் தலைமையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.

பணிகள்

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை கீழ்க்காணும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

  1. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
  2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  3. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
  5. அறிவியல் தமிழ் மன்றம்
  6. தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
  7. உலகத் தமிழ்ச் சங்கம்

தமிழ்ச் சாலை செயலி

தமிழ் வளர்ச்சித் துறை செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ்ச் சாலை (Tamil Saalai) என்னும் ஆண்டிராய்டு செயலி 2019 ஆகத்து 24 இல் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ் வளர்ச்சித் துறை வரலாறுதமிழ் வளர்ச்சித் துறை பணிகள்தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்ச் சாலை செயலிதமிழ் வளர்ச்சித் துறை மேற்கோள்கள்தமிழ் வளர்ச்சித் துறை வெளி இணைப்புகள்தமிழ் வளர்ச்சித் துறைஇணைய தளம்தமிழ்தமிழ்நாடுதமிழ்நாடு அரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடக்கு வாதம்மதீச பத்திரனபாவலரேறு பெருஞ்சித்திரனார்இராவணன்உ. வே. சாமிநாதையர்சனீஸ்வரன்பட்டினப் பாலைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவியாழன் (கோள்)பங்குனி உத்தரம்ஜெயம் ரவிதிருமூலர்திருமுருகாற்றுப்படைநாம் தமிழர் கட்சிஐஞ்சிறு காப்பியங்கள்முகம்மது நபிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஇந்திய வரலாறுபாசிப் பயறுஅ. கணேசமூர்த்திஆசாரக்கோவைசைவத் திருமுறைகள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)குண்டலகேசிவே. தங்கபாண்டியன்வெந்தயம்கொங்கு நாடுதமிழ் எழுத்து முறைஔவையார்சூரைசிலப்பதிகாரம்வட்டார வளர்ச்சி அலுவலகம்தண்ணீர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அரசியல்சரத்குமார்மகேந்திரசிங் தோனிதிரு. வி. கலியாணசுந்தரனார்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆப்பிள்நவக்கிரகம்ஆழ்வார்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிவபெருமானின் பெயர் பட்டியல்திருவள்ளுவர்கேசரி யோகம் (சோதிடம்)வாணிதாசன்அருணகிரிநாதர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857முலாம் பழம்பறையர்ம. கோ. இராமச்சந்திரன்பாபுர்அருந்ததியர்தன்னுடல் தாக்குநோய்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகலைதமிழ்நாடுதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிசைவ சமயம்கூகுள் நிலப்படங்கள்கம்போடியாஇந்தியப் பிரதமர்ஐங்குறுநூறுமுல்லைப்பாட்டுகேரளம்திருமலை நாயக்கர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்திய தேசியக் கொடிதமிழர் நிலத்திணைகள்புதுமைப்பித்தன்முதற் பக்கம்ஈ. வெ. இராமசாமிஇனியவை நாற்பதுஇயேசுவின் உயிர்த்தெழுதல்நயன்தாரா🡆 More