வளைமூக்கு உள்ளான்: பறவை இனம்

எரோலியா பெருஜினியா

வளைமூக்கு உள்ளான்
வளைமூக்கு உள்ளான்: விளக்கம், பரவலும் வாழ்விடமும், இனப்பெருக்கம்
இனப் பெருக்கம் செய்யாத காலத்தில் இறகு நிறம்
வளைமூக்கு உள்ளான்: விளக்கம், பரவலும் வாழ்விடமும், இனப்பெருக்கம்
இனப் பெருக்க காலத்தில் இறகு நிறம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேலிதிரிசு
இனம்:
கெ. பெருஜினியா
இருசொற் பெயரீடு
கேலிதிரிசு பெருஜினியா
(பொண்டோபிதான், 1763)
வேறு பெயர்கள்

வளைமூக்கு உள்ளான் (Curlew sandpiper) என்பது ஆர்க்டிக் சைபீரியாவின் தூந்திரத்தில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சிறிய உள்ளான் ஆகும். இது உலகில் பல பகுதிகளிலுக்கு வலசை போகிறது. இவை குளிர்காலத்தில் முக்கியமாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற இடங்களுக்கு வலசை போகிறது. மேலும் வட அமெரிக்காவிலும் இப்பறவைக் காணமுடிகிறது.

விளக்கம்

வளைமூக்கு உள்ளான்: விளக்கம், பரவலும் வாழ்விடமும், இனப்பெருக்கம் 
முட்டை
ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், சிவப்பு கழுத்து உள்ளானுடன் வளைமூக்கு உள்ளான்

சிறிய பறவையான இது குளிர்காலத்தில் பெரும்பாலும் தோற்றத்தில் டன்லின் உள்ளானை ஒத்திருக்கும். ஆனால் அதைவிட சற்று பெரியதான தோன்ற்றம, நீண்ட கீழ்-வளைந்த அலகு, நீண்ட கழுத்து, கால்கள் மற்றும் வெள்ளை பிட்டம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதில் வேறுபடுகின்றன. கோடைக் காலத்தில் இதன் தோற்றம் டன்லின் உள்ளானில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும். இப்பறவை 18–23 செமீ (7.1–9.1 அங்குலம்) நீளமும், 44-117 கிராம் எடையும், 38–41 செமீ (15–16 அங்குலம்) இறக்கை அகலமும் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்தில் முதிர்ந்த பறவைகளின் மேல் பகுதி அடர் சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி செங்கல்-சிவப்பு நிறத்திலும் காணப்படும். குளிர்காலத்தில், இந்த பறவையின் மேல் பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளையாகவும், கண்களின் மேற்பகுதியில் வெள்ளை புருவமும் காணப்படும்.

பரவலும் வாழ்விடமும்

வளைமூக்கு உள்ளான் சைபீரியன் ஆர்க்டிக்கில் யமல் தீபகற்பத்திலிருந்து கொலியுச்சின் விரிகுடா வரை இனப்பெருக்கம் செய்கிறது.

இனப்பெருக்கம்

இவை சூன் முதல் ஆகத்து இறுதி வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர வானில் வட்டமிட்டு பல வித்தைகள் காட்டுகிறது. இவை சதுப்பு நிலம் அல்லது குளத்தின் விளிம்பில் அல்லது தூந்திரத்தின் உலர்ந்த திட்டுகளி கூடு அமைக்கிறது. சராசரியாக 3.8 முட்டைகளை இடும். முட்டைகள் பெண் பறவையால் அடைகாக்கப்பட்டு 19-20 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளை பெண் பறவை 14-16 நாட்கள் பராமரிக்கிறது.

உணவு

இது சதுப்பு நிலத்திலும், கடற்கரையிலும் உள்ள சேற்றில் உணவு தேடுகிறது. முக்கியமாக பார்வை வழியாக உணவை தேடி எடுக்கிறது. இது பெரும்பாலும் பூச்சிகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களை உண்கிறது.

நிலை

தென்னாப்பிரிக்காவில், குறிப்பாக லாங்கேபான் லகூனில் வளைமூக்கு உள்ளான்களின் எண்ணிக்கை, 1975 மற்றும் 2009 க்கு இடையில் 40% சரிவடைந்துள்ளது தெரியவருகிறது. இதேபோன்ற போக்கு ஆத்திரேலியாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் புவி வெப்பமடைதலினால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இருக்கக்கூடும். இது மிகப் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் அதைக் கண்டறிவது மிகவும் கடினம். மேலும் இவற்றின் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகத் தோன்றுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வளைமூக்கு உள்ளான்: விளக்கம், பரவலும் வாழ்விடமும், இனப்பெருக்கம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Calidris ferruginea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வளைமூக்கு உள்ளான்: விளக்கம், பரவலும் வாழ்விடமும், இனப்பெருக்கம் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

வளைமூக்கு உள்ளான் விளக்கம்வளைமூக்கு உள்ளான் பரவலும் வாழ்விடமும்வளைமூக்கு உள்ளான் இனப்பெருக்கம்வளைமூக்கு உள்ளான் உணவுவளைமூக்கு உள்ளான் நிலைவளைமூக்கு உள்ளான் மேற்கோள்கள்வளைமூக்கு உள்ளான் வெளி இணைப்புகள்வளைமூக்கு உள்ளான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பர்மனித மூளைபகத் பாசில்சுரதாபஞ்சாங்கம்பொன்னுக்கு வீங்கிபொருநராற்றுப்படைஊராட்சி ஒன்றியம்முள்ளம்பன்றிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இராமாயணம்அனுஷம் (பஞ்சாங்கம்)வைகைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நீர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)உலா (இலக்கியம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ் எழுத்து முறைதிவ்யா துரைசாமிதிருமலை நாயக்கர்தேர்தல்சேலம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅகத்தியர்நன்னூல்லிங்டின்திருமங்கையாழ்வார்மாணிக்கவாசகர்அயோத்தி இராமர் கோயில்உரிச்சொல்ஆற்றுப்படைதிருநாவுக்கரசு நாயனார்தேவாரம்சுந்தர காண்டம்சடுகுடுவேதம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மூலம் (நோய்)ஈரோடு தமிழன்பன்ஆளுமைஅக்கிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஜவகர்லால் நேருசெஞ்சிக் கோட்டைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஉடுமலைப்பேட்டைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கட்டுவிரியன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நோய்சென்னைம. கோ. இராமச்சந்திரன்போதைப்பொருள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தேசிக விநாயகம் பிள்ளைவிஜய் வர்மாநற்கருணைமொழிசட் யிபிடிஉத்தரகோசமங்கைகற்றாழைகொடைக்கானல்புறநானூறுதிராவிடர்பதினெண் கீழ்க்கணக்குகருத்தரிப்புகைப்பந்தாட்டம்இந்திய தேசிய சின்னங்கள்தமிழ்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)முத்தொள்ளாயிரம்மயக்கம் என்னஇந்திய உச்ச நீதிமன்றம்நிதிச் சேவைகள்🡆 More