ராஜு நாரிசெட்டி: தொழில் முறை பத்திரிகையாளர்

ராஜு நாரிசெட்டி (Raju Narisetti; பிறப்பு 1966) ஒரு தொழில் முறை பத்திரிகையாளரும் முக்கிய சர்வதேச செய்தித்தாள்களில் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

இவர் 2020 முதல் மெக்கின்சி & நிறுவனத்தில் உலகளாவிய வெளியீட்டு இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜூலை 2018 முதல் டிசம்பர் 2019 வரை, கொலம்பியா பலகலைகழகத்தின் இதழியல் பள்ளியில்தொழில்முறை பயிற்சிப் பேராசிரியராகவும், நைட்-பேக்ஹாட் நிதியுதவித் திட்டத்தின் இயக்குநராகவும் இருந்தார். அக்டோபர் 2017 இல், நாரிசெட்டி விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டார். உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார்

ராஜு நாரிசெட்டி
ராஜு நாரிசெட்டி: தொழில் முறை பத்திரிகையாளர்
2015இல் பெருகியாவில் நடந்த சர்வதேச ஊடகவியலாளர்களின் திருவிழாவில் ராஜு நாரிசெட்டி
பிறப்பு26 ஜூன் 1966
ஐதராபாத்து, இந்தியா
கல்விஇந்தியானா பல்கலைக்கழகம்

தொழில்

நாரிசெட்டி உசுமானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், ஊரக மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும், புளூமிங்டனின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் டேடன் டெய்லி நியூஸ் என்ற பத்திரிக்கையில் தனது அமெரிக்க வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவில் தி எகனாமிக் டைம்ஸில் பத்திரிகையாளராகத் தொடங்கினார். அங்கு 1991 முதல் 1994 வரை பணியாளர் நிருபராக இருந்தார்.

1994 இல் உலகளாவிய ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளின் போக்குகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிருபராக இவர் முதலில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் சேர்ந்தார்; அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில், இவர் அமெரிக்க பதிப்பின் துணை தேசிய ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்; தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஐரோப்பாவின் நிர்வாக ஆசிரியர் (2003-2004) மற்றும் ஆசிரியர் (2004-2006); மற்றும் துணை நிர்வாக ஆசிரியர் (2005-2006) செய்தித்தாளின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியநாடுகளுக்கு பொறுப்பாகவும் இருந்தார். 2006 முதல் 2009 வரை மின்ட்டின் நிறுவன ஆசிரியராக இருந்த போது அதனை இந்தியாவின் இரண்டாவது பெரிய வணிகப் பத்திரிகையாக வெளிவருவதற்கு உதவினார். இது எச்டி மீடியாவிற்கு சொந்தமானது. இது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையையும் வெளியிடுகிறது.

2012 இல் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ( தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் டிஜிட்டல் நெட்வொர்க்கின் தலைவராக) மீண்டும் சேர்வதற்கு முன்பு 2009 முதல் 2012 வரை தி வாஷிங்டன் போஸ்டின் டிஜிட்டல் ஆசிரியராக நாரிசெட்டி இருந்தார். 2013 முதல் 2016 வரை நியூஸ் கார்ப்பரேஷனின் வளர்ச்சி மற்றும் மூலோபாயத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்த இவர், குறிப்பாக ஆசியாவில் புதிய வருவாய் வாய்ப்புகளை வளர்ப்பதற்கு ஊடகக் குழுவிற்கு உதவினார்.

செப்டம்பர் 2016 இல் யூனிவிஷன் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து கிஸ்மோடோ மீடியா குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2018 வரை இவர் அந்தப் பதவியில் இருந்தார் தி டெய்லி பீஸ்ட்செய்தியின்படி, ஊழியர்களை வெளியேற்றும் நிகழ்வுகளுக்கு மத்தியில் யூனிவிஷனால் வெளியேற்றப்பட்டார்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

உலக பொருளாதார மன்றம்கொலம்பியா பல்கலைக்கழகம்பத்திரிக்கையாளர்விக்கிமீடியா நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெருங்கடல்ஆறுமுக நாவலர்சிலம்பரசன்செம்மொழிஅலீகோயில்கண்ணாடி விரியன்வல்லினம் மிகும் இடங்கள்தேம்பாவணிபால்வினை நோய்கள்கேழ்வரகுமக்களவை (இந்தியா)நாயன்மார்தென் சென்னை மக்களவைத் தொகுதிபாசிசம்மண் பானைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019சாரைப்பாம்புநெல்லிபாவலரேறு பெருஞ்சித்திரனார்காதல் (திரைப்படம்)சைவத் திருமுறைகள்மயங்கொலிச் சொற்கள்நெல்லியாளம்கொங்கு வேளாளர்சிலுவைசாத்தான்குளம்புணர்ச்சி (இலக்கணம்)அயோத்தி தாசர்தமிழில் சிற்றிலக்கியங்கள்சாகித்திய அகாதமி விருதுஎயிட்சுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தாய்ப்பாலூட்டல்விண்ணைத்தாண்டி வருவாயாநிதி ஆயோக்பிள்ளைத்தமிழ்ரமலான் நோன்புபெரிய வியாழன்தேவேந்திரகுல வேளாளர்கிறித்தோபர் கொலம்பசுஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956லைலத்துல் கத்ர்வெந்தயம்யுகம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்நபிசடுகுடுசுற்றுச்சூழல் பாதுகாப்புஇரட்டைக்கிளவிகினி எலிஅம்பேத்கர்ஜவகர்லால் நேருபஞ்சபூதத் தலங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமேழம் (இராசி)செயற்கை நுண்ணறிவுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சிவனின் 108 திருநாமங்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தைராய்டு சுரப்புக் குறைஅத்தி (தாவரம்)வீரப்பன்செம்பருத்திபெரும்பாணாற்றுப்படைகிரிமியா தன்னாட்சிக் குடியரசுஹாட் ஸ்டார்அக்பர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைநெடுநல்வாடைபெரும் இன அழிப்புதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருநெல்வேலிதிராவிடர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பழனி பாபா🡆 More