மௌ. கொ. எசர்

மௌரிட்சு கோர்னெலீசு எசர் (Maurits Cornelis Escher; (டச்சு ஒலிப்பு: ; 17 சூன் 1898 – 27 மார்ச்சு 1972) ஓர் இடச்சு வரைகலைஞர்.

இவர் கணிதக் கருத்துக் கோட்பாடுகளால் உந்தப்பட்டு மரத்தில் கீறியும் செதுக்கியும், கல் அல்லது மாழை அச்சுகள் வழியாகவும் (இலித்தோகிராஃபி), சொரசொரப்பூட்டப்பட்ட மாழை வழியாகச் செய்யும் மேசோட்டிண்டு (mezzotint) என்னும் முறைப்படியும் வரைகலை வடிப்புகள் செய்தார்.

மௌ. கொ. எசர்
M. C. Escher
மௌ. கொ. எசர்
1971 இல்
பிறப்புமௌரிட்சு கொர்னெலீசு எசர் (Maurits Cornelis Escher)
(1898-06-17)17 சூன் 1898
Leeuwarden, Netherlands
இறப்பு27 மார்ச்சு 1972(1972-03-27) (அகவை 73)
ஃகில்வெர்சம், நெதர்லாந்து
கல்லறைபாரன், நெதர்லாந்து
தேசியம்இடச்சு
கல்விதெல்ஃப்டு தொழினுட்பப் பல்கலைக்கழகம்
Haarlem School of Architecture and Decorative Arts
அறியப்படுவதுபடம்வரைதல், அச்சாக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Hand with Reflecting Sphere (1935)
சார்பியல் (மௌ.கொ. எசர்) (1953)
அருவி (1961)
வாழ்க்கைத்
துணை
யெட்டா உமிக்கெர் (தி. 1924)
பிள்ளைகள்3
விருதுகள்Knight (1955) and Officer (1967) of the Order of Orange-Nassau

இவருடைய படைப்புகள் கணிதக் கருத்துகளின் உருப்படிகளாகவும் இயக்கங்களாகவும் இருந்தன. இவற்றுள் இருக்கமுடியாத உருப்படிகள், முடிவிலி, எதிரொளிப்பு, ஒற்றியம் (symmetry), உள்வாங்கும் பார்வைக்கோணம், நறுக்கப்பட்ட வடிவம், இருதிரட்சி முத்திரட்சி வடிவங்கள், இலோபாசெவ்சிக்கி வடிவவியல் (Lobachevskian geometry) தரைபாவுமைகள் (tessellations) முதலியன அடங்கும். எசர் தனக்குக் கணித அறிவோ திறமையோ இல்லை என்று கருதினாலும், பல கணிதவியலாளருடன் உறவாட்டத்தில் இருந்தார். அவர்களுள் சியார்ச்சுபோல்யா (George Pólya), ஊரோச்சர் பென்ரோசு (Roger Penrose), ஆரால்டு கோக்சீட்டர் (Harold Coxeter]), படிகவியலாளர் பிரீடிரிச்சு ஃகாகு Friedrich Haag). படிகவியலாளருடன் இவர் தரைபாவுமைகள் பற்றிய தன் சொந்த ஆய்வைச் செய்தார்.

இளமைக்கால வரலாறு

மௌ. கொ. எசர் 
நெதர்லாந்தில் உள்ள பிரீசுலாந்தில் உள்ள இலீவார்டன் என்னும் இடத்தில் உள்ள எசர் பிறந்த இல்லம். இப்பொழுது பிரின்செசெஃகோஃபு சுட்டாங்கல் அருங்காட்சியகம்

மௌரிட்சு கொர்னெலீசு எசர் சூன் 17, 1898 அன்று நெதர்லாந்தில் உள்ள பிரீசுலாந்தில் உள்ள இலீவார்டன் என்னும் இடத்தில் பிறாந்தார். அவர் பிறந்த இல்லம் இன்று பிரின்செசெஃகோஃபு சுட்டாங்கல் அருங்காட்சியகமாகத் ( Princessehof Ceramics Museum) திகழ்கின்றது. குடிசார் பொறியியலாளரான கியார்கு அர்னால்டு எசர் என்பாருக்கும் அவருடைய இரண்டாம் மனைவி சாரா கிளைசுமன் (Sara Gleichman) என்பாருக்கும் கடைசி மகனாக மௌரிட்சு கொர்னெலீசு எசர் பிறந்தார். 1903 இல், இவர் குடும்பம் ஆர்னெம் (Arnhem) என்னும் இடத்துக்குப் பெயர்ந்தனர். இவர் அங்குத்தான் இவர் 1918 ஆம் ஆண்டுவரை அடிப்படைக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக்கல்வியையும் பெற்றார். தன் வீட்டிலும் நண்பர்களிடையேயும் இவர் மௌக்கு ("Mauk") என்று அறியப்பட்டார். இவர் உடல்நலம் குறியவராக இருந்ததால் தன்னுடைய ஏழாவது வயதில் சிறப்பு வசதி தேவைப்படும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவர் தன்னுடைய இரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெறாமல் தோல்வியுற்றார். வரைகலையில் சிறந்து விளங்கினாலும் பொதுவாக மற்ற பாடங்களில் குறைவான மதிப்பெண்களே பெற்றார். இவர் தன் 13 ஆம் வயதுவரை மரவேலை (தச்சுக்கலை), பியானோ இசைக்கருவி ஆகியவற்றில் பாடங்கள் எடுத்துப் படித்தார்.

1918 இல் இவர் தெல்ஃப்டு தொழினுட்பப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார் 1919 முதல் 1922 வரை, எசர் கட்டிடக்கலை அழகுசேர்க்கும் கலை ஆகியவற்றுக்கான ஃகார்லெம் பள்ளியில் சேர்ந்து வரைகலையையும் மரத்தில் கீறியும் செதுக்கியும் செய்யும் கலைப்படைப்புகளையும் கற்றார் இவர் சிறிது காலம் கட்டிடக்கலையும் (architecture) படித்தார். ஆனால் பல பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை. இத்தோல்விகளுக்கு ஒருபங்கு காரணம் தொடர்ந்து அவருக்குத் துன்பம் தந்துவந்த தோல் நோயின் கார்ணம். இவர் அழகுசேர்கலையியலுக்கு (decorative arts) மாற்றிக்கொண்டார், இதில் இவர் வரலைலைஞர் சாமுவேல் யெசுரம் டி மெசுக்கிட்டா (Samuel Jessurun de Mesquita) என்பாரின் கீழ் பயின்றார்.

கணிதத்தால் உந்தப்பட்ட கலைப்படைப்புகள்

எசரின் படைப்புகள் பலவும் தவிர்க்கமுடியாதபடி கணிதத்துடன் தொடர்புடையவை. இதனால் பொதுக் கலையுலகில் இவருடைய படைப்புகள் போதிய அளவு உயர்வாகக் கருதப்படாமல் இருந்தன. இவருடைய புதுமையும், வரைகலை நுட்பங்களின் திறன்களும் மதிக்கப்பட்டிருந்தன, ஆனால் இவருடைய படைப்புகள் மிகவும் கருத்துச்சிக்கலானவையாகவும், சுவைப்புத்தன்மை குறைந்ததாகவும் கருதப்பட்டன. கருத்தியக் கலை (conceptual art) என்னும் இயக்கங்கள் எழுந்தன என்றாலும் அவை எசரை உயர்த்தவில்லை. இவருடைய மாறுதலான பார்வைக்கோணப் படைப்புகள் கலை வல்லுநர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இவை பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டின.

எசர் முதன்முதலாகக் கணிதக் கருத்துகளைக் கருதி கலைப்படைப்புகள் செய்தவரல்லர். பார்மிச்சியானினோ ([Parmigianino, (1503–1540)) என்பார் 1524 ஆம் ஆண்டிலேயே உருண்டைவடிவவியல் கருத்துகளையும் எதிரொளிப்புக் கருத்துகளையும் முன்வைத்துப் படைத்தார். இதனைக் "குவியாடியில் தன்படம்" என்று குறிப்பிடுவார்கள். இதேபோல வில்லியம் ஃகோகார்த்து (William Hogarth) என்பாரும் 1754 இல் "பொய்யான உள்வாங்குக்கோணத்தின் அங்கதம் (நையாண்டி)" ஏன்னும் படைப்பில் பார்வைக்கோணத்தில் உள்ள வழுக்களைக் காட்டினார். இது எசரின் படைப்புகளி முற்காட்டுவதுபோல் உள்ளது.

இருப்புநிலைகளின் படிநிலைகள்

எசரின் படைப்புகள் அவருடைய உள்ளத்தில் தோன்றியவை. அவை இயற்கையில் புறவெளியில் பட்டறிவில் நேரடியாகக் கண்டவையல்ல. அவருடைய பல்நிலை இருப்புநிலைகளைக் காட்டுவதாகக் கருதப்படுபனவற்றுள் 1948 ஆண்டின் படைப்பான வரையும் கைகள் (Drawing Hands) என்பதைக் காட்டலாம். இதில் இரு கைகள் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கையும் மற்ற கையை வரைவது போல உள்ள ஓவியம். இதைப்பற்றித் திறனாய்வாளர் இசுட்டீவன் பூல் என்பார் கீழ்க்காணுமாறு கூறினார்:

It is a neat depiction of one of Escher's enduring fascinations: the contrast between the two-dimensional flatness of a sheet of paper and the illusion of three-dimensional volume that can be created with certain marks. In Drawing Hands, space and the flat plane coexist, each born from and returning to the other, the black magic of the artistic illusion made creepily manifest.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

மௌ. கொ. எசர் இளமைக்கால வரலாறுமௌ. கொ. எசர் கணிதத்தால் உந்தப்பட்ட கலைப்படைப்புகள்மௌ. கொ. எசர் அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்மௌ. கொ. எசர்en:Help:IPA for Dutch

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவகுலத்தார்கருப்பசாமிபுனித ஜார்ஜ் கோட்டைம. கோ. இராமச்சந்திரன்அகத்தியர்காம சூத்திரம்முதலாம் உலகப் போர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஆய்வுதமிழர் விளையாட்டுகள்முகலாயப் பேரரசுசுந்தர காண்டம்தமிழ்நாடு காவல்துறைதனிப்பாடல் திரட்டுதாய்ப்பாலூட்டல்திருக்குறள்நீதிக் கட்சிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைபுதினம் (இலக்கியம்)எட்டுத்தொகைந. பிச்சமூர்த்திகபிலர்மனித மூளைஇந்தியன் (1996 திரைப்படம்)ஆயுள் தண்டனைவிளம்பரம்ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழ்விடு தூதுபழமொழி நானூறுதிருவிழாநிலாபறவைக் காய்ச்சல்ஔவையார்முல்லை (திணை)சோமசுந்தரப் புலவர்ஏலாதிபுணர்ச்சி (இலக்கணம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்வேலு நாச்சியார்இன்ஸ்ட்டாகிராம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்காசோலைகுகேஷ்உ. வே. சாமிநாதையர்உவமையணிகலம்பகம் (இலக்கியம்)திணை விளக்கம்மூலம் (நோய்)திக்கற்ற பார்வதிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வே. செந்தில்பாலாஜிவெள்ளியங்கிரி மலைஜே பேபிதேவாங்குநாடகம்சாத்துகுடிபுதன் (கோள்)ஐங்குறுநூறுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பல்லவர்தொழிற்பெயர்பழமுதிர்சோலை முருகன் கோயில்சிவாஜி (பேரரசர்)கரிகால் சோழன்திருமலை நாயக்கர்பெரியாழ்வார்திரு. வி. கலியாணசுந்தரனார்கள்ளுஅஜித் குமார்கலிப்பாபுதிய ஏழு உலக அதிசயங்கள்மனித உரிமைகொன்றைர. பிரக்ஞானந்தாகுருதி வகைராஜா ராணி (1956 திரைப்படம்)பிரேமம் (திரைப்படம்)🡆 More