மைக்குரோனீசியா

மைக்குரோனீசியா (Micronesia, (உதவி·விவரம்), என்பது ஓசியானியாவின் ஒரு பிரிவாகும்.

இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே பிலிப்பீன்ஸ், மேற்கு மற்றும் தெற்கே இந்தோனீசியா, பப்புவா நியூ கினி, மெலனீசியா, கிழக்கே பொலினீசியா ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் கிரேக்க மொழியில் μικρός (சிறிய), νῆσος (தீவு), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது.

மைக்குரோனீசியா
மைக்குரோனீசியாவின் வரைபடம்
மைக்குரோனீசியா
கரொலைன் தீவில் உள்ள பவழத்திட்டு

புவியியலும் வரலாறும்

மேற்கு பசிபிக் பகுதியில் பரந்துள்ள நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை இப்பிரதேசம் கொண்டுள்ளது. மைக்குரோனீசியாவில் தோன்றிய ஒரேயொரு இராச்சியம் யாப் என்ற தீவை மையமாகக் கொண்டிருந்தது.

அரசியல் அமைப்புப் படி மைக்குரோனீசியா முக்கியமாக எட்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

பெரும்பாலான தீவுகள் ஐரோப்பியரின் ஆளுமைக்கு ஆரம்பத்திலேயே உட்பட்டிருந்தன. குவாம், வடக்கு மரியானாக்கள், கரொலைன் தீவுகள் (பின்னர் FSM, பலாவு) ஆகியன ஸ்பானியரின் காலனித்துவ தீவுகளாக ஆரம்பத்தில் இருந்தன. இவை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 1898 வரை ஸ்பானிய கிழக்கிந்தியாவின் பகுதியாக இருந்து ஸ்பானியரின் பிலிப்பீன்சின் நிர்வாகத்தில் இருந்தன. முழுமையான ஐரோப்பிய ஆளுகை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போது இது பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன:

  • ஐக்கிய அமெரிக்கா: 1898 இல் ஸ்பானிய அமெரிக்கப் போரை அடுத்து ஐக்கிய அமெரிக்கா குவாமைக் கைப்பற்றி, வேக் தீவில் குடியேற்றத்தை ஆரம்பித்தது.
  • ஜெர்மனி: நவூருவை தனது ஆளுமைக்கு உட்படுத்தியது. பின்னர் மார்சல், வடக்கு மரியானா, கரொலைன் ஆகியவற்றை ஸ்பெயினிடமிருந்து கொள்வனவு செய்தது.
  • பிரித்தானியா: கில்பேர்ட் தீவுகள் (கிரிபட்டி)யைத் தனது ஆளுகைக்குட்படுத்தியது.

முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் பசிபிக் தீவுப் பகுதி பறிக்கப்பட்டது. நவூரு அவுஸ்திரேலியாவுக்குத் தரப்பட்டதூ. ஏனையவை ஜப்பானுக்கு தரப்பட்டது. இரண்டாம் உலகப் போரை அடுத்து ஜப்பானியரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.

இன்று, குவாம், வேக் தீவு, வடக்கு மரியானா தீவுகள் என்பவை தவிர்த்து அனைத்து தீவுகளும் விடுதலை அடைந்த த்ஹனி நாடுகளாக உள்ளன.

மக்கள்

இங்குள்ள மக்கள் மைக்குரோனீசியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். இது மெலனீசியர்கள், பிலிப்பீனியர்கள், மற்றும் பொலினீசியர்களின் கலாச்சாரங்களின் கலப்பாகும். இக்கலப்பினால் இங்கு வாழும் மக்கள் தம்மை மெலனீசியா, பொலினீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் இனத்தவர்களுடன் ஒத்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இங்குள்ள யாப் இனத்தவர்கள் வடக்கு பிலிப்பீன்சின் ஆஸ்திரனீசிய பழங்குடிகள் ஆவர்.

மொழிகள்

பல்வேறு மைக்குரோனீசிய பழங்குடிகளின் தாய்மொழி ஆஸ்திரனீசிய மொழிக் குடும்பத்தின் ஓசியானிய உபகுழுவைச் சேர்ந்தனவாகும். ஆனாலும், இதற்கு விதிவிலக்காக மேற்கு மைக்குரோனீசியாவின் பின்வரும் இரண்டு மொழிகள் மேற்கு மலாய பொலினீசிய உபகுழுவைச் சேர்ந்தவை:

இந்த மேற்கு மலாய பொலினீசிய உபகுழு இன்று பிலிப்பீன்ஸ், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.

Tags:

1831En-us-Micronesia.oggen:Wikipedia:Media helpஇந்தோனீசியாஓசியானியாகிரேக்க மொழிதீவுபசிபிக் பெருங்கடல்படிமம்:En-us-Micronesia.oggபப்புவா நியூ கினிபிலிப்பீன்ஸ்பொலினீசியாமெலனீசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலை முறைகள்தமிழர் பருவ காலங்கள்வெப்பம் குளிர் மழைதமிழர் கப்பற்கலைஇன்னா நாற்பதுஜே பேபிதேசிக விநாயகம் பிள்ளைவளைகாப்புபறம்பு மலைமுடிஇந்திரா காந்திநாம் தமிழர் கட்சிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கலாநிதி மாறன்சூரரைப் போற்று (திரைப்படம்)நீரிழிவு நோய்சின்னம்மைவன்னியர்சைவத் திருமணச் சடங்குபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்குலசேகர ஆழ்வார்சீரடி சாயி பாபாகுறிஞ்சி (திணை)திருப்பதிஆத்திசூடிவே. செந்தில்பாலாஜிசொல்மருதநாயகம்திருப்பூர் குமரன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வியாழன் (கோள்)இராமலிங்க அடிகள்முடக்கு வாதம்ஊராட்சி ஒன்றியம்காற்றுதிருமங்கையாழ்வார்ஆகு பெயர்சூரைமதுரைகொல்லி மலைஆண் தமிழ்ப் பெயர்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுதமிழக மக்களவைத் தொகுதிகள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்புறநானூறுஇராசேந்திர சோழன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பிரீதி (யோகம்)பிள்ளையார்அறுபது ஆண்டுகள்கார்ல் மார்க்சுஅறம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மூவேந்தர்சடுகுடுமதுரைக் காஞ்சிகோவிட்-19 பெருந்தொற்றுகன்னியாகுமரி மாவட்டம்பெரியபுராணம்தேவிகாகரிகால் சோழன்பறையர்அறுசுவைமலைபடுகடாம்பௌத்தம்வெட்சித் திணைகாளமேகம்தொலைபேசிசிறுநீர்ப்பாதைத் தொற்றுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கர்மாமாணிக்கவாசகர்சாத்துகுடிதினகரன் (இந்தியா)தமிழ் இலக்கியப் பட்டியல்சுயமரியாதை இயக்கம்அழகர் கோவில்மருது பாண்டியர்நாட்டு நலப்பணித் திட்டம்🡆 More