முதலமைச்சர்

முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி ( அவுஸ்திரேலியா), தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார்.

தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.

ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.

அமைச்சரவை முதலமைச்சர்

மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.

முதலமைச்சர் நியமனம்

மாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கபப்டுகிறார். சட்டப்பேரவையில் எந்தக் கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அணியின் தலைவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிக்கிறார். எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லையெனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப்பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் பதவியில் இருக்கலாம். முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும். பொதுவாக முதலமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும்

மாநில நிருவாகத்தின் உண்மையான தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார். அவரின் பணிகள்

  • அமைச்சரவையை அமைத்தல்
  • அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது.
  • கடமை தவறும் போது அமைச்சர்களைப் பதவி விலகக் கோருதல்
  • ஆளுநர் அறிவிக்கையின் படி துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்தல்
  • அமைச்சரவையின் தலைவராய் இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.
  • ஆளுநர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே தொடர்பாளராக செயல்படுதல்
  • பதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.

நாடுகள் சிலவற்றின் முதலமைச்சர்கள்

வெளியிணைப்புகள்

உசாத்துணை

Tags:

முதலமைச்சர் அமைச்சரவை முதலமைச்சர் நியமனம்முதலமைச்சர் முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும்முதலமைச்சர் நாடுகள் சிலவற்றின் கள்முதலமைச்சர் வெளியிணைப்புகள்முதலமைச்சர் உசாத்துணைமுதலமைச்சர்அரசு தலைவர்அவுஸ்திரேலியாஇந்தியாஐக்கிய இராச்சியம்பாகிஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாலை (திணை)காதல் (திரைப்படம்)சப்தகன்னியர்பர்வத மலைரவிசீனிவாசன் சாய் கிஷோர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சிறுகதைமக்களாட்சிசெக் மொழிநஞ்சுக்கொடி தகர்வுகொங்கு வேளாளர்பள்ளுகில்லி (திரைப்படம்)சொல்தினகரன் (இந்தியா)சூளாமணிஎட்டுத்தொகை தொகுப்புகிராம ஊராட்சிமதுரைக்காஞ்சிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்ராஜா சின்ன ரோஜாகணையம்காடுகலம்பகம் (இலக்கியம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சித்திரகுப்தர் கோயில்ஆறுமுக நாவலர்பணவீக்கம்நாயக்கர்கருக்கலைப்புதலைவி (திரைப்படம்)பொது ஊழிதமிழ் இலக்கியம்மகாபாரதம்வேலு நாச்சியார்கபிலர் (சங்ககாலம்)வெப்பம் குளிர் மழைதங்கம்அரண்மனை (திரைப்படம்)இலங்கையின் மாவட்டங்கள்கா. ந. அண்ணாதுரைதேவாரம்சங்ககால மலர்கள்இரா. இளங்குமரன்ஏப்ரல் 24கண்ணனின் 108 பெயர் பட்டியல்மயில்அகத்தியர்பொன்னுக்கு வீங்கிஇந்தியத் தேர்தல் ஆணையம்விண்ணைத்தாண்டி வருவாயாவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ் எண்கள்புதுச்சேரிமங்கலதேவி கண்ணகி கோவில்திருச்சிராப்பள்ளிசித்தர்மதராசபட்டினம் (திரைப்படம்)அன்புமணி ராமதாஸ்இணையத்தின் வரலாறுதிராவிடர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பகிர்வுகாதல் தேசம்அவதாரம்சாருக் கான்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ்நாடு காவல்துறைகாளமேகம்வடிவேலு (நடிகர்)புறநானூறுஉடுமலை நாராயணகவிஇராமாயணம்இல்லுமினாட்டிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சுப்மன் கில்கேரளம்பச்சைக்கிளி முத்துச்சரம்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்🡆 More