ஜோன் மால்கம் பிரேசர் (John Malcolm Fraser, 21 மே 1930 – 20 மார்ச் 2015) ஆத்திரேலிய அரசியல்வாதி.
இவர் 1975 முதல் 1983 வரை ஆத்திரேலியாவின் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.
மால்கம் பிரேசர் Malcolm Fraser | |
---|---|
அமெரிக்காவில் மால்கம் பிரேசர் (1982) | |
ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் தேர்தல்கள்: 1975, 1977, 1980, 1983 | |
பதவியில் 11 நவம்பர் 1975 – 11 மார்ச் 1983 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
Governors‑General | ஜோன் கெர் செல்மான் கோவான் நினியன் ஸ்டீவன் |
Deputy | டக் ஆந்தனி |
முன்னையவர் | கஃப் விட்லம் |
பின்னவர் | பொப் ஹாக் |
லிபரல் கட்சித் தலைவர் | |
பதவியில் 21 மார்ச் 1975 – 11 மார்ச் 1983 | |
Deputy | பிலிப் லின்ச் ஜோன் ஹவார்ட் |
முன்னையவர் | பிலி சினெடன் |
பின்னவர் | ஆன்ட்ரூ பீக்கொக் |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 20 ஆகத்து 1971 – 5 டிசம்பர் 1972 | |
பிரதமர் | வில்லியம் மெக்மாகன் |
முன்னையவர் | டேவிட் ஃபயர்பேர்ன் |
பின்னவர் | கஃப் விட்லம் |
பதவியில் 28 பெப்ரவரி 1968 – 12 நவம்பர் 1969 | |
பிரதமர் | ஜோன் கோர்ட்டன் |
முன்னையவர் | ஜோன் கோர்ட்டன் |
பின்னவர் | நைஜல் போவன் |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 12 நவம்பர் 1969 – 8 மார்ச் 1971 | |
பிரதமர் | ஜோன் கோர்ட்டன் |
முன்னையவர் | அலென் பெயர்ஹால் |
பின்னவர் | ஜோன் கோர்ட்டன் |
இராணுவ அமைச்சர் | |
பதவியில் 26 சனவரி 1966 – 28 பெப்ரவரி 1968 | |
பிரதமர் | ஹரல்ட் ஹோல்ட் ஜோன் மெக்கெவன் ஜோன் கோர்ட்டன் |
முன்னையவர் | ஜிம் ஃபோர்ப்சு |
பின்னவர் | பிலிப் லின்ச் |
ஆத்திரேலிய நாடாளுமன்றம் for வானன் | |
பதவியில் 10 டிசம்பர் 1955 – 7 மே 1983 | |
முன்னையவர் | டொன் மெக்லியட் |
பின்னவர் | டேவிட் ஹாக்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜோன் மால்கம் பிரேசர் 21 மே 1930 டூராக், ஆத்திரேலியா |
இறப்பு | மார்ச்சு 20, 2015 மெல்பேர்ண், ஆத்திரேலியா | (அகவை 84)
அரசியல் கட்சி | லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா) (1954–2009) |
துணைவர் | டாமி பிரேசர் |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | மெக்டாலென் கல்லூரி, ஆக்சுபோர்டு |
தொழில் | அரசியல்வாதி |
பிரேசர் 1955 ஆம் ஆண்டில் தனது 25வது அகவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 1969 இல் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். 1972 தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியடைந்தததி அடுத்து மால்கம் பிரேசர் அக்கட்சியின் தலைமைப் பதவிக்குத் தகுந்தவராக அடையாளம் காணப்பட்டார். ஆனாலும், தலைமைப் போட்டியில் பில்லி சினெடனிடம் தோற்றார். பின்னர் மீண்டும் 1975 இல் போட்டியிட்டு லிபரல் கட்சியின் தலைவராக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
1975 ஆம் ஆண்டில் அன்றைய கஃப் விட்லம் தலைமையிலான தொழிற் கட்சி அரசு சர்ச்சைக்குரிய முறையில் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டதை அடுத்து, 1975 நவம்பர் 11 இல் மால்கம் பிரேசர் இடைக்கால அரசின் பிரதமராக ஆளுனர் சேர் ஜோன் கெர் என்பவரால் நியமிக்கப்பட்டார். விட்லம் அரசின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மால்கம் பிரேசர் பெரும் பங்காற்றினார். 1975 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி பெரு வெற்றி பெற்று பிரேசர் பிரதமரானார். 1977, 1980 தேர்தல்களிலும் பிரேசர் தலைமையில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. 1983 தேர்தலில் லிபரல் கட்சி பொப் ஹோக் தலைமையிலான தொழிற் கட்சியிடம் தோல்வியடைந்தது. இதன் பின்னர் சில காலத்தில் பிரேசர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார். 2015 மார்ச் 20 இல் சிறிது கால சுகவீனத்தை அடுத்து 2015 மார்ச் 20 இல் பிரேசர் மெல்பேர்ன் நகரில் காலமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article மால்கம் பிரேசர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.