மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்

மத்தியமேற்கு வளர்ச்சி மண்டலம் (Mid-Western Development Region) (நேபாளி: मध्य-पश्चिमाञ्चल विकास क्षेत्र, மத்தியபஸ்ச்சிமாஞ்சல் விகாஸ் சேத்திரம் ), தெற்காசியாவின் நேபாள நாட்டின் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களில் பரப்பளவில் மிகப்பெரியதாகும்.

மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம்
Madhya-Pashchimānchal
Bikās Kshetraa
நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்
Location of மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம்
நாடுமத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் Nepal
பிராந்தியம்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம்
தலைமையிடம்வீரேந்திரநகர், சுர்கேத் மாவட்டம், பேரி மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்42,378 km2 (16,362 sq mi)
மக்கள்தொகை (2011 Census)
 • மொத்தம்3,546,682
 pop.note
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)

மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின் மேற்கில் அமைந்த மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம், பேரி மண்டலத்தின் சுர்கேத் மாவட்டத்தின் வீரேந்திரநகர் ஆகும்.

நிர்வாகப் பிரிவுகள்

மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாக வசதிக்காக, இப்பிராந்தியம் கர்ணாலி மண்டலம், பேரி மண்டலம், ராப்தி மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் பதினைந்து மாவட்டங்கள் இணைக்கப்பட்ட்டுள்ளது.

ரப்தி மண்டலத்தில் தாங் மாவட்டம், பியுட்டான் மாவட்டம், ரோல்பா மாவட்டம், ருக்கும் மாவட்டம் மற்றும் சல்யான் மாவட்டம் என ஐந்து மாவட்டங்கள் அமைந்துள்ளது.

பேரி மண்டலத்தில் பாங்கே மாவட்டம், பர்தியா மாவட்டம், சுர்கேத் மாவட்டம், தைலேக் மாவட்டம், ஜாஜர்கோட் மாவட்டம் என ஐந்து மாவட்டங்கள் அமைந்துள்ளது.

கர்ணாலி மண்டலத்தில் டோல்பா மாவட்டம், ஹும்லா மாவட்டம், சூம்லா மாவட்டம், காளிகோட் மாவட்டம் மற்றும் முகு மாவட்டம் என ஐந்து மாவட்டங்கள் அமைந்துள்ளது.

எல்லைகள்

மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் வடக்கில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியும், கிழக்கில் மேற்கு வளர்ச்சி பிராந்தியம், தெற்கில் இந்தியாவும், மேற்கில் தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியமும் எல்லைகளாக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

புவியியல்

42,378 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியம், ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களில் பரப்பளவில் மிகப்பெரியதாகும். இப்பிராந்தியத்தின் தெற்கில் தராய் சமவெளிகள், நடுவில் மலைகுன்றுப் பகுதிகள், வடக்கில் இமயமலை பகுதிகள் என மூன்று நிலவியல் அமைப்புகளுடன் கூடியது. இப்பிராந்தியம் கடல் மட்டத்திலிருந்து 160 மீட்டர் முதல் 6,000 மீட்டர் வரை உயரம் கொண்டது. மத்திய மேற்கு பிராந்தியத்தில் கர்ணாலி ஆறு, பேரி ஆறு, ரப்தி ஆறு மற்றும் பபாய் அறு போன்ற முக்கிய ஆறுகள் பாய்கிறது. கஞ்சிரோபா, சிஸ்னே, பட்டராசி கொடுமுடிகள் இப்பிராந்தியத்தின் வடக்கே இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன்#ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை என ஆறு நிலைகளில் காணப்படுகிறது.

சுற்றுலா

பாங்கே தேசியப் பூங்கா, பர்தியா தேசியப் பூங்கா, செ போக்சுந்தோ தேசியப் பூங்கா, மற்றும் ராரா தேசியப் பூங்காக்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. 42,378 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தேசிய பூங்காக்கள், நேபாளத்தின் மொத்த நிலப்பரப்பில் 29.2% ஆகும்.

மக்கள் தொகையியல்

2011-ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 42,378 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் மக்கள் தொகை 35,46,682 ஆகும். மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் பூட்டியாக்கள், அந்தணர்கள், செட்டிரிகள், மஹர்கள், தாரு மக்கள், அவதி மக்கள், நேவார் மக்கள் மற்றும் தாக்கூரிகள் போன்ற முக்கிய இன மக்கள் அதிகம் உள்ளனர்.

இப்பிராந்தியத்தில் நேபாள மொழி, இந்தி மொழி, லிம்பு மொழி மற்றும் ராஜ்பன்சி, நேவாரி மொழி, ராய் மொழி, தமாங் மொழி, மஹர் மொழி, குரூங் மொழி, செபாங் மொழி, சுனுவார் மொழி மற்றும் திபெத்திய மொழிகள் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

வேளாண்மை, பண்ணைத் தோட்டங்கள், கால்நடை வளர்த்தல், சுற்றுலாத் தொழில் இப்பிராந்தியத்தின் முக்கிய தொழில்கள் ஆகும். கோராக்கி, நேபாள்கஞ்ச், பீரேந்திரநகர் பெரு வணிக மையங்கள் ஆகும். நெல், கோதுமை, பருப்பு வகைகள், சிறுதாணியங்கள், சோளம் இப்பிராந்தியத்தின் முக்கிய பயிர்கள் ஆகும்.

இதனையும் காண்க


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் நிர்வாகப் பிரிவுகள்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் எல்லைகள்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் சுற்றுலாமத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் மக்கள் தொகையியல்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் பொருளாதாரம்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் இதனையும் காண்கமத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் மேற்கோள்கள்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம் வெளி இணைப்புகள்மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்நேபாள மொழிநேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்நேபாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலிக்கான் கார்பைடுவேலு நாச்சியார்கெத்சமனிபுணர்ச்சி (இலக்கணம்)மூலம் (நோய்)திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசு. வெங்கடேசன்செம்பருத்திகொன்றை வேந்தன்இலங்கைமெய்யெழுத்துபோக்குவரத்துகர்ணன் (மகாபாரதம்)வேதாத்திரி மகரிசிகா. ந. அண்ணாதுரைநவதானியம்உரிச்சொல்அக்கி அம்மைதஞ்சாவூர்முத்துராஜாவைகோமண் பானைகொல்லி மலைதிராவிட முன்னேற்றக் கழகம்கட்டுவிரியன்புரோஜெஸ்டிரோன்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்எயிட்சுநனிசைவம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2குண்டூர் காரம்பதினெண்மேற்கணக்குநீலகிரி மக்களவைத் தொகுதிஇறைமைஅண்ணாமலையார் கோயில்குருத்து ஞாயிறுதேவாரம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சோழர்திரிசாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆண்டாள்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமுடக்கு வாதம்பதுருப் போர்திருவாரூர் தியாகராஜர் கோயில்பறையர்இஸ்ரேல்விவிலிய சிலுவைப் பாதைஇயேசுதிருவள்ளுவர்விஜய் (நடிகர்)உன்னாலே உன்னாலேதற்கொலை முறைகள்கரணம்அருந்ததியர்ஏலாதிசூரியக் குடும்பம்பெரும்பாணாற்றுப்படைஅளபெடைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உயிர்மெய் எழுத்துகள்கரிகால் சோழன்நருடோபேரூராட்சிஅல்லாஹ்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இந்திய நிதி ஆணையம்பந்தலூர் வட்டம்வட்டாட்சியர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசீமான் (அரசியல்வாதி)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பெரியபுராணம்🡆 More