பேத் மா ரா ஹாஹத் போட்

பேத் மா ரா ஹாஹத் போட் (பாரசீகம்: باد ما را خواهد برد‎, Bād mā rā khāhad bord) ஆங்கிலம்: The Wind Will Carry Us) என்பது ஈரானியத் திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு ஈரானிய இயக்குநர் அப்பாஸ் க்யாரஸ்டமியால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவரும் அப்பாஸ் க்யாரஸ்டமி ஆவார். இத்திரைப்படத்தின் தலைப்பான காற்று நம்மை தூக்கிச் செல்லும் என்பது ஈரானின் சமகாலப் பெண் கவிஞர் பெரோக் பெர்ரோகாஷாத்தின் (Forough Farrokhzad) கவிதை வரியாகும். இத்திரைப்படம் வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தங்கச் சிங்கம் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. இத்திரைப்படம் நடுவர்களின் சிறப்புப் பரிசான வெள்ளிச் சிங்கம் விருதினை வென்றது. மேலும் இத்திரைப்படம் பல்வேறு பரிந்துரைகளையும் விருதுகளையும் பெற்றது.

பேத் மா ரா ஹாஹத் போட்
பேத் மா ரா ஹாஹத் போட்
இயக்கம்அப்பாஸ் க்யாரஸ்டமி
தயாரிப்புஅப்பாஸ் க்யாரஸ்டமி
கதைஅப்பாஸ் க்யாரஸ்டமி
நடிப்புபெஹ்ஸாத் டோரனி (Behzad Dorani)
ஒளிப்பதிவுமொஹ்மூத் கலாரி (Mahmoud Kalari)
வெளியீடு6 செப்டம்பர் 1999
ஓட்டம்118 நிமிடங்கள்
மொழிபாரசீக மொழி

கதை

ஈரானின் குர்திஷ் கிராமம் ஒன்றில் மரணத் தறுவாயில் வசிக்கும் முதிய பெண்மணி ஒருவரின் துக்கச் சடங்குகளை ஆவணப்படுத்த பத்திரிகையாளர்கள் குழு ஒன்று பொறியாளர்கள் என்ற போர்வையில் வருகின்றனர். நகரப் பத்திரிகையாளர்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறது இத்திரைப்படம். நகரத்துப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து தினமும் கிராமத்துப் பத்திரிகையாளர் குழுவுக்கு தொலை பேசி மூலம் முதிய பெண் மரணமடைந்துவிட்டாரா எனக் கேட்டுச் செய்தி வருகிறது. பத்திரிகையாளர் குழுவின் தலைவர் கிராமத்து மக்களின் இயல்பான வாழ்வால் மனம் நெகிழ்கிறார். வயதான பெண்மணி உடல் நலம் தேறி நலமடைகிறார். கிராமப் பெண்மணியின் மரணத்தை எதிர் நோக்கும் நகரத்து மனிதர்களின் மனதை இத்திரைப்படம் பேசுகிறது.

பாராட்டுகள்

  • இன்றைய தினத்தில் அப்பாஸ் க்யாரஸ்டமியால் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படம் இது என அமெரிக்கச் சினிமா விமர்சகர் ஜேனத்தன் ரோஸன்பாவ்ம் கூறினார்.
  • இந்த ஆண்டு பார்க்க வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் இது என ஆஸ்திரேலிய அரசியலாளர் மைக்கேல் அட்கின்ஸன் கூறினார்.
  • இத்திரைப்படத்தில் எதுவுமில்லை ஆனால் எல்லாம் இருக்கிறது (nothing and everything) என அமெரிக்கச் சினிமா விமர்சகர் ஜே. ஹோபர்மன் கூறினார்.
  • ஸ்காட் பவுண்டஸ் வெரைட்டி (Scott Foundas variety) மிகச் சிறந்த பத்து திரைப்படங்களுள் ஒன்றாக இதைக் குறிப்பிட்டது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

பேத் மா ரா ஹாஹத் போட் கதைபேத் மா ரா ஹாஹத் போட் பாராட்டுகள்பேத் மா ரா ஹாஹத் போட் வெளி இணைப்புகள்பேத் மா ரா ஹாஹத் போட் மேற்கோள்கள்பேத் மா ரா ஹாஹத் போட்ஆங்கிலம்ஈரான்பாரசீகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பர்மாதம்பட்டி ரங்கராஜ்கருப்பசாமிபழனி பாபாமுகலாயப் பேரரசுதிருநங்கையாதவர்மாடுமுன்னின்பம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)ஆங்கிலம்சித்தர்கள் பட்டியல்தமிழ் மாதங்கள்இந்தியாவின் பொருளாதாரம்உயிர்மெய் எழுத்துகள்வி.ஐ.பி (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழில் கணிதச் சொற்கள்வானிலைஈரோடு மக்களவைத் தொகுதிஇயற்பியல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தேவாரம்ஒப்புரவு (அருட்சாதனம்)பிரீதி (யோகம்)வைப்புத்தொகை (தேர்தல்)பாண்டவர் பூமி (திரைப்படம்)பரதநாட்டியம்நரேந்திர மோதிதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாடு சட்டப் பேரவைதிருப்பூர் மக்களவைத் தொகுதிஐக்கிய நாடுகள் அவைஅஸ்ஸலாமு அலைக்கும்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிராவிட இயக்கம்குடும்ப அட்டைதிருவாசகம்காம சூத்திரம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)நெல்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)இன்னா நாற்பதுதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஜவகர்லால் நேருபுணர்ச்சி (இலக்கணம்)கொங்கு நாடுதிருவள்ளுவர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்திரா காந்திஇசுலாத்தின் ஐந்து தூண்கள்நவக்கிரகம்குறிஞ்சிப் பாட்டுகருப்பைஅரக்கோணம் மக்களவைத் தொகுதிஇந்திய நிதி ஆணையம்மஞ்சும்மல் பாய்ஸ்பாரதிதாசன்யூடியூப்மியா காலிஃபாசேக்கிழார்சுற்றுலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வினைச்சொல்எஸ். ஜெகத்ரட்சகன்வளையாபதிகட்டுரைதிருவோணம் (பஞ்சாங்கம்)மூலம் (நோய்)பெரியாழ்வார்பூரான்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)மருதம் (திணை)திருக்குறள்சுயமரியாதை இயக்கம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஆத்திசூடி🡆 More