நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு

நாசீசிச ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக்கூடிய ஆளுமைச் சிதைவு ஆகும்.

இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இந்த நடத்தை பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக வெளிப்படுகிறது.

நாசீசிச ஆளுமைக் குறைபாடு
Narcissistic personality disorder
A man looking into a pool of water
சிறப்புமனநலம்
அறிகுறிகள்அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்கள், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பார்கள்

நாசீசிச ஆளுமைக் குறைபாடிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குறைபாடு உள்ளவராகக் கருதப்படும் நபரை மருத்துவ நிபுணர்கள் நேர்காணல் செய்வது மூலம் பாதிகப்பட்டுள்ளாரா என்பது கண்டறியப்படுகிறது. இதற்கான சிகிச்சைகள் இன்னும் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. குறைபாடு கொண்டிருக்கும் நபர்கள் தங்களிடம் ஒரு பிரச்சனை இருப்பதாக கருதிக் கொள்ளாததால், சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. சுமார் ஒரு சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்த குறைபாட்டிற்கு பாதிக்கப்படுகின்றனர். இது பெண்களை விட ஆண்களில் அடிக்கடி வெளிப்படுகிறது மேலும் இது முதியவர்களைவிட இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. இந்த ஆளுமை குறைபாட்டினை 1925ம் ஆண்டு ராபர்ட் வேய்ல்டர் என்பவர் முதன் முதலில் விவரித்தார்.

அறிகுறிகள்

நாசீசிச ஆளுமைக் குறைபாட்டின் அறிகுறிகள், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து விறுவிறுப்புடன் செயல்படுவார்கள், தங்களுக்கு அதிக பாராட்டுகள் வேண்டும் என விரும்புவார்கள், அலட்சியமாக இருப்பார்கள். அதேபோல் மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அகந்தை வெளிப்படும், மற்றவர்களிடம் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் நிறுவ முற்படுவார்கள். தன்னம்பிக்கைக் குணமும் நாசீசிச ஆளுமைக் குறைபாடும் வேறுபட்டது. இந்தக்குறைபாடு உள்ளவர்கள் மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் வெளிப்படையாகப் புறக்கணித்து, அவர்களின் உண்மையான நிலை அல்லது சாதனைகளைப் பொருட்படுத்தாமல் தங்களை உயர்ந்ததாகக் கருதவேண்டும் என்று விரும்புவார்கள். நாசீசிச ஆளுமைக் குறைபாடு கொண்ட நபர் வழக்கமாக ஒரு அகங்காரம் கொண்டிருப்பார், விமர்சனத்திற்கான சகிப்புத்தன்மை இல்லாமை, மற்றும் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு ஆகியவற்றை வெளிப்படுத்துவார்.

காரணங்கள்

நாசீசிச ஆளுமைக் குறைபாட்டிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. வல்லுநர்களின் ஆய்வுப்படி சுற்றுச்சூழல், சமூக, மரபணு மற்றும் நரம்பியல் காரணிகளின் கலவையே இந்த ஆளுமைக் கோளாறை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு பாரம்பரியமாக இருக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. குடும்ப வரலாற்றில் இந்தக் குறைபாடு இருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு இந்தக் குறைபாடு உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகளும் இந்தக் குறைபாடு ஆரம்பிக்க காரணமாக கருதப்படுகிறது.

சிகிச்சை

நாசீசிச ஆளுமைக் குறைபாட்டிற்காக மனநல மருத்துவ சிகிச்சையை விரும்பும் மக்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் பொதுவாக மனத்தளர்ச்சி சீர்குலைவு, பொருள் பயன்பாடு சீர்குலைவுகள், இருமுனை சீர்குலைவு, உணவு சீர்குலைவுகள் போன்ற மற்ற பிரச்சனைக்காகவே வருகிறார்கள். அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலியுறுத்தலின் பெயரில் வருகிறார்கள். அவர்கள் பொதுவாக மோசமான நுண்ணறிவு பெற்றிருப்பதோடு அவர்களது கருத்துக்களையும் உணர்ந்துகொள்ளத் தவறி விடுகின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 000934

Tags:

நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு அறிகுறிகள்நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு காரணங்கள்நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு சிகிச்சைநாசீசிஸ ஆளுமைக் குறைபாடு மேற்கோள்கள்நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு வெளி இணைப்புகள்நாசீசிஸ ஆளுமைக் குறைபாடுஆளுமைச் சிதைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ம. பொ. சிவஞானம்மரம்முடியரசன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பரிதிமாற் கலைஞர்பாண்டியர்கம்பராமாயணம்சீமான் (அரசியல்வாதி)தேர்தல்ஓ காதல் கண்மணிகேட்டை (பஞ்சாங்கம்)மழைநீர் சேகரிப்புதேனீதிருவள்ளுவர் ஆண்டுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)விஜய் (நடிகர்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)அவுரி (தாவரம்)நான்மணிக்கடிகைஊராட்சி ஒன்றியம்இராமாயணம்சுகன்யா (நடிகை)பனைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கிழவனும் கடலும்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆந்திரப் பிரதேசம்கன்னி (சோதிடம்)மக்களவை (இந்தியா)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இமயமலைஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலையார் கோயில்கள்ளழகர் கோயில், மதுரைஉயிர்ச்சத்து டிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்பிரியா பவானி சங்கர்திருமந்திரம்திராவிட முன்னேற்றக் கழகம்சிவபெருமானின் பெயர் பட்டியல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிவவாக்கியர்காவிரி ஆறுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கல்லீரல்உப்புச் சத்தியாகிரகம்ஆய கலைகள் அறுபத்து நான்குவீரப்பன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சூரியக் குடும்பம்நாயன்மார்உத்தரப் பிரதேசம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மெய்ப்பொருள் நாயனார்தேவயானி (நடிகை)விருமாண்டிஇரண்டாம் உலகப் போர்தினகரன் (இந்தியா)அக்கிமதீச பத்திரனபனிக்குட நீர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பாளையத்து அம்மன்முன்மார்பு குத்தல்தங்கம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கர்மாதிருவாசகம்தமிழர் கப்பற்கலைமொழிபெயர்ப்புஎயிட்சுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைவெள்ளி (கோள்)ஆழ்வார்கள்விளம்பரம்கரிகால் சோழன்🡆 More