நவநீதம் பிள்ளை

நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: செப்டம்பர் 23, 1941) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார்.

இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செப்டம்பர் 1, 2008 முதல் நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் பணியாற்றுவார்.

நவநீதம் பிள்ளை
நவநீதம் பிள்ளை
பிறப்பு23 செப்டெம்பர் 1941 (அகவை 82)
டர்பன்
படிப்புமுனைவர் பட்டம்
படித்த இடங்கள்
  • நதால் பல்கலைக்கழகம்
வேலை வழங்குபவர்
நவநீதம் பிள்ளை
நவநீதம் பிள்ளை

வாழ்க்கைக் குறிப்பு

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழரான நவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர். ஜனவரி 1965 இல் இவர் காபி பிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார்1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அவர், தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், அவரது கணவர் உட்பட்ட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

புவியிடம் அடிப்பிடையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் ”சமத்துவம் இப்போது” (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப் பெண்மணி இவரே.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

ஜூலை 24, 2008 இல், ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால் நவநீதம் பிள்ளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியில் இருந்து விலகும் லூயிஸ் ஆர்பர் இற்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்டார். ஜூலை 28, 2008 இல் இடம்பெற்ற ஐநா பொது அவையின் சிறப்பு அமர்வில் இவரது நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 2008 இலிருந்து நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்.

விருதுகள்

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

நவநீதம் பிள்ளை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Navanethem Pillay
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

நவநீதம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்புநவநீதம் பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்நவநீதம் பிள்ளை விருதுகள்நவநீதம் பிள்ளை மேற்கோள்கள்நவநீதம் பிள்ளை வெளி இணைப்புகள்நவநீதம் பிள்ளை194120032008ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்செப்டம்பர் 1செப்டம்பர் 23தென்னாபிரிக்காபன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமலுநயினார் நாகேந்திரன்தேவயானி (நடிகை)ஆய கலைகள் அறுபத்து நான்குகலிங்கத்துப்பரணிவிசயகாந்துசப்ஜா விதைஅழகர் கோவில்இராமலிங்க அடிகள்ஞானபீட விருதுமகாபாரதம்திருப்போரூர் கந்தசாமி கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)மாணிக்கவாசகர்மாமல்லபுரம்கீர்த்தி சுரேஷ்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திய வரலாறுஅட்சய திருதியைஇந்திய மக்களவைத் தொகுதிகள்புதுமைப்பித்தன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மருதமலை முருகன் கோயில்சென்னைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிமனித வள மேலாண்மைமலைபடுகடாம்மொழிபெயர்ப்புபணவீக்கம்மெய்ப்பொருள் நாயனார்நரேந்திர மோதிதமிழ்ப் புத்தாண்டுகல்விக்கோட்பாடுபரிபாடல்சா. ஜே. வே. செல்வநாயகம்தொல்லியல்சிங்கம் (திரைப்படம்)எட்டுத்தொகைபுதினம் (இலக்கியம்)இட்லர்அம்மனின் பெயர்களின் பட்டியல்சங்கம் மருவிய காலம்திருமூலர்ஆடை (திரைப்படம்)மியா காலிஃபாஉப்புச் சத்தியாகிரகம்தமிழ் மன்னர்களின் பட்டியல்கருத்தரிப்புசுரதாமூலம் (நோய்)வெந்து தணிந்தது காடுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சதுரங்க விதிமுறைகள்கருத்துசன்ரைசர்ஸ் ஐதராபாத்அளபெடைதண்டியலங்காரம்பெருங்கதைசிறுநீர்ப்பாதைத் தொற்றுஏப்ரல் 27இரண்டாம் உலகம் (திரைப்படம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழ்வெட்சித் திணைமத கஜ ராஜாசைவத் திருமுறைகள்கர்மாசிறுகதைமூவேந்தர்இந்தியத் தலைமை நீதிபதிபயில்வான் ரங்கநாதன்மறவர் (இனக் குழுமம்)திருப்பாவைசிலம்பம்🡆 More