த ரோலிங் ஸ்டோன்ஸ்

த ரோலிங் ஸ்டோன்ஸ் (The Rolling Stones) ஒரு ஆங்கில ராக் இசைக்குழு.

1962 ஆம் ஆண்டு இலண்டன் நகரில், இதன் தொடக்கத் தலைவரான பிரையன் ஜான்சுடனும், பியானோக் கலைஞரான இயன் ஸ்டுவார்டுடனும், பாடகர் மைக் ஜாகரும், கிட்டார் கலைஞர் கீத் ரிச்சார்டும் இணைந்தபோது இக் குழு உருவானது. ஜாகர், ரிச்சார்டு ஆகியோரது பாட்டு எழுதும் நிறுவனத்தின் பங்களிப்பு பின்னாளில் இவ்விருவரும் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு வரக் காரணமாகியது. "பாஸ்" இசைக் கலைஞர் பில் வைமன், டிரம் கலைஞர் சார்லி வாட்ஸ் ஆகியோரும் பின்னர் இணந்து கொண்டனர். 1963ல் இயன் ஸ்டுவார்டு, குழுவின் உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், 1985ல் அவர் இறக்கும்வரை அக்குழுவில் பணியாற்றி வந்தார்.

த ரோலிங் ஸ்டோன்ஸ்
The Rolling Stones
த ரோலிங் ஸ்டோன்ஸ்
த ரோலிங் ஸ்டோன்ஸ், 2006.
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்இலண்டன், இங்கிலாந்து
இசை வடிவங்கள்ராக் அண்ட் ரோல், ரிதம் அண்ட் புளூஸ், புளூஸ், ராக்
இசைத்துறையில்1962–present
வெளியீட்டு நிறுவனங்கள்டெக்கா, ரோலிங் ஸ்டோன்ஸ், வேர்ஜின், ABKCO, இன்டர்ஸ்கோப், பாலிடார்
இணையதளம்www.RollingStones.com
உறுப்பினர்கள்மைக் ஜகர்
கீத் ரிச்சார்ட்ஸ்
சார்லி வாட்ஸ்
பொனி வூட்ஸ்
முன்னாள் உறுப்பினர்கள்பிரையன் ஜான்ஸ்
இயன் ஸ்டுவார்டு
டிக் டெய்லர்
மைக் டெய்லர்
பில் வைமன்

குழுவின் தொடக்க காலப் பதிவுகள், அமெரிக்க புளூஸ், ரிதம் அண்ட் புளூஸ் போன்ற வகைகளைச் சேர்ந்த பாடல்களை உள்ளடக்கியிருந்தன. முதலில் ஐக்கிய இராச்சியத்தில் புகழ் பெற்ற இக் குழு பின்னர் 1960களின் முற்பகுதியிலேயே ஐக்கிய அமெரிக்காவிலும் பெயர் பெற்றது. 1965ல் இக்குழு வெளியிட்ட பாடல் ஒன்றின் மூலம், த ரோலிங் ஸ்டோன்ஸ், ராக் அண்ட் ரோல் இசையின் முன்னணிக் குழுவானது. ஜாகர், ரிச்சார்டு ஆகியோரின் பாடலுடனும், ஜான்சின் இசையுடனும், 1966ல் வெளியான இவர்களது இசைப்பாடல் தொகுதியான ஆஃப்டர்மாத் இவர்களுக்கு மேலும் புகழ் தேடிக் கொடுத்தது. 1969 ஆம் ஆண்டில் குழுவிலிருந்து நீக்கப்பட்ட சிலகாலத்தின் பின் ஜான்ஸ் காலமானார். இவருக்குப் பதிலாக மைக் டெய்லர் என்பவர் குழுவில் இணைந்தார். இக் குழுவுக்காக ஐந்து பாடல் தொகுப்புக்களைப் பதிவு செய்த டெய்லர், 1974 ஆம் ஆண்டில் குழுவிலிருந்து விலகினார். பின்னர் கிட்டார் இசைக் கலைஞர் ரோனி வூட் குழுவில் இணைந்து கொண்டார். 1993ல் வைமன் குழுவிலிருந்து விலகினார். 1994 ஆம் ஆண்டிலிருந்து டரில் ஜான்ஸ் என்பவர் குழுவுடன் பணிபுரிந்தார்.

"த ரோலிங் ஸ்டோன்ஸ்" குழுவினர், ஐக்கிய இராச்சியத்தில் 22 இசைத் தொகுப்புக்களையும், ஐக்கிய அமெரிக்காவில் 24 இசைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 200 மில்லியன்களுக்கு மேற்பட்ட இவர்களது தொகுப்புக்கள் விற்பனையாகி உள்ளன.

Tags:

இலண்டன்பியானோராக் இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கல்லணைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005செயங்கொண்டார்முல்லைக்கலிமூலம் (நோய்)திணைதிருநெல்வேலிவைகைஆசாரக்கோவைதிருவாசகம்அத்தி (தாவரம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்பயில்வான் ரங்கநாதன்வளையாபதிவல்லினம் மிகும் இடங்கள்சூர்யா (நடிகர்)தெருக்கூத்துகுகேஷ்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சித்ரா பௌர்ணமிவரலாற்றுவரைவியல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மலையாளம்நவக்கிரகம்ஔவையார்வெட்சித் திணைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஆளி (செடி)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பூரான்நீதிக் கட்சிமகாபாரதம்பெரும்பாணாற்றுப்படைசீமான் (அரசியல்வாதி)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)யாதவர்சேரன் செங்குட்டுவன்நந்திக் கலம்பகம்ஐஞ்சிறு காப்பியங்கள்திருவண்ணாமலைபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்திய அரசியலமைப்புபி. காளியம்மாள்திருப்பதிதிருமலை (திரைப்படம்)சென்னைமாற்கு (நற்செய்தியாளர்)கொன்றை வேந்தன்விஜய் (நடிகர்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்முக்குலத்தோர்சைவத் திருமுறைகள்பிரேமம் (திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சப்ஜா விதைகடலோரக் கவிதைகள்சூரரைப் போற்று (திரைப்படம்)நீரிழிவு நோய்புவியிடங்காட்டிஆண்டு வட்டம் அட்டவணைகாச நோய்இயற்கைஜோக்கர்தமிழர் அணிகலன்கள்கடையெழு வள்ளல்கள்தாஜ் மகால்போக்கிரி (திரைப்படம்)யானைவௌவால்மதுரை நாயக்கர்கம்பராமாயணம்காந்தள்ஓரங்க நாடகம்திராவிட இயக்கம்உடன்கட்டை ஏறல்🡆 More