தொடர் கொலையாளி

ஒரு தொடர் கொலையாளி (Serial killer) என்பவர் பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொல்பவரைக் குறிக்கிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாக இத்தகைய கொலை குற்றங்கள் நடந்தாலும் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கின்றன. தொடர் கொலைகள் என்பதற்கு மூன்று கொலைகள் என நிர்ணயித்தாலும் சிலர் நான்காக அதிகரிக்கவோ அல்லது இரண்டாகவோ குறைக்கின்றனர்.

தொடர் கொலையாளி
1829 ஆம் ஆண்டு ஐரிய தொடர் கொலையாளி வில்லியம் பர்க் மார்கெரி காம்ப்பெல்லைக் கொலை செய்த படம்.

உளவியல் மனநிறைவு என்பது தொடர் கொலைக்கான வழக்கமான நோக்கமாகும், மேலும் பல தொடர் கொலையாளிகள் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் ரீதியிலான தொடர்பைக் கொண்டிருப்பார்கள். புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) தொடர் கொலையாளிகள், கோபம், சிலிர்ப்பு தேடுதல், நிதி ஆதாயம் மற்றும் கவன ஈர்ப்பு ஆகிய நோக்கங்களினால் கொலைகள்ச் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், மக்கள்தொகை விவரக்குறிப்பு, தோற்றம், பாலினம் அல்லது இனம் ஆகிய ஏதேனும் ஒன்று ஒற்றுமையாக இருக்கலாம் . பெரும்பாலும் புலன் விசாரணைக் காவலர்கள் தொடர் கொலையாளிகள் கொலை செய்யப்பட்ட விதத்தினை அடிப்படையாக வைத்து கொலைகாரர்களைத் தேடுவர்.

சொற்பிறப்பியல் மற்றும் வரையறை

தொடர் கொலையாளி என்ற ஆங்கிலச் சொல்லும் கருத்தும் மேனாள் எஃப்பிஐ சிறப்பு துப்பறிவாளர் ராபர்ட் ரெஸ்லரால் முதன்முதலாகப் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இவர் 1974 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்து, ஹாம்ப்ஷயர், பிராம்சிலில் உள்ள காவலர் பணியாளர் அகாதமியில் நடைபெற்ற ஒரு விரிவுரையில் தொடர் கொலை என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆன் ரூல் தனது 2004 ஆம் ஆண்டு நூலான கிஸ் மீ, கில் மீ யில், 1985 ஆம் ஆண்டில் பியர்ஸ் புரூக்சு இந்தச் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார் எனக் கூறியுள்ளார்.

வரலாறு

தொடர் கொலையாளி 
பின்லாந்தின் தொடர் கொலையாளியான ஜுஹானி ஆட்டமின்போய்கா, "கெர்பெய்க்காரி" என்றும் அழைக்கப்படுகிறார் ('மரணதண்டனை செய்பவர்'), 19 ஆம் நூற்றாண்டின் தொடர் கொலையாளிகளில் ஒருவர், பிடிபடுவதற்கு ஐந்து வாரங்களுக்குள் 12 பேரைக் கொன்றார்.

வரலாற்றுக் குற்றவியல் வல்லுநர்கள் பல காலங்களாக (வரலாறு முழுவதும்) தொடர் கொலையாளிகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர். ஓநாய் மனிதன் மற்றும் வாம்பையர் போன்ற புராணக்கதைகள் நடுக்கால தொடர் கொலையாளிகளால் ஈர்க்கப்பட்டதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவில், சிங்கம் மற்றும் சிறுத்தை மனிதர்களால் அவ்வப்போது கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.

சீனாவின் லியு பெங்லி, ஆன் பேரரசர் ஜிங்கின் மருமகன், ஜிங்கின் ஆட்சியின் மத்திய காலத்தின் ஆறாவது ஆண்டில் (கி.மு.144) ஜிடாங்கின் இளவரசராக நியமிக்கப்பட்டார். சீன வரலாற்றாசிரியர் சிமா சியானின் கூற்றுப்படி, அவர் "20 அல்லது 30 அடிமைகளுடன் அல்லது சட்டத்திலிருந்து மறைந்திருக்கும் இளைஞர்களுடன் கொள்ளையடிக்கும் பயணங்களுக்குச் செல்வார், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளை கைப்பற்றுவதனை விளையாட்டாகக் கொண்டிருந்தார்". பலருக்கு இதுபற்றி தெரிந்திருந்தாலும் அந்த மன்னரின் 29 ஆவது வயதில் அவரால் கொல்லப்பட்ட ஒருவரின் தந்தையின் புகாருக்குப் பின்னரே இந்தத் தகவல் வெளியில் வந்தது.இறுதியில், அவர் குறைந்தது 100 பேரைக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அதிகாரிகள் லியு பெங்லியை தூக்கிலிட வேண்டும் என்று கோரினர்; இருப்பினும், தனது சொந்த மருமகன் கொல்லப்படுவதை பேரரசரால் தாங்க முடியாமல் லியு பெங்லி ஒரு சாமானியனாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

9 ஆம் நூற்றாண்டில் (இஸ்லாமிய நாட்காட்டியின் ஆண்டு 257), "பாக்தாத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தவவரைக் கைது செய்தனர். பல பெண்களைக் கொன்று, அவர் வசிக்கும் வீட்டில் புதைத்தது பின்னர் கண்டறியப்பட்டது."

அடிக்குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Tags:

தொடர் கொலையாளி சொற்பிறப்பியல் மற்றும் வரையறைதொடர் கொலையாளி வரலாறுதொடர் கொலையாளி அடிக்குறிப்புகள்தொடர் கொலையாளி வெளியிணைப்புகள்தொடர் கொலையாளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மேகக் கணிமைநன்னன்போக்கிரி (திரைப்படம்)கணையம்மறைமலை அடிகள்தொழிற்பெயர்கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்வாணிதாசன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழ் இலக்கியம்இந்திய தேசியக் கொடிகார்த்திக் (தமிழ் நடிகர்)கள்ளழகர் கோயில், மதுரைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைவைகைதங்கம்பட்டினத்தார் (புலவர்)நீரிழிவு நோய்திராவிட இயக்கம்கலித்தொகைபஞ்சாயத்து ராஜ் சட்டம்வெற்றிக் கொடி கட்டுசெயங்கொண்டார்இந்திய அரசியல் கட்சிகள்அவுன்சுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பிள்ளைத்தமிழ்பெண்களின் உரிமைகள்வெந்து தணிந்தது காடுதமிழர் பருவ காலங்கள்வீரப்பன்தீபிகா பள்ளிக்கல்காளை (திரைப்படம்)புங்கைதெருக்கூத்துகாற்றுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்தியாவில் இட ஒதுக்கீடுமெய்யெழுத்துஇந்து சமயம்வயாகராமயங்கொலிச் சொற்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தேவாங்குவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசூரைதிக்கற்ற பார்வதிசிந்துவெளி நாகரிகம்தமிழர் பண்பாடுமண்ணீரல்கன்னியாகுமரி மாவட்டம்ஜெ. ஜெயலலிதாதிருவாசகம்தமிழக மக்களவைத் தொகுதிகள்முதற் பக்கம்சிலப்பதிகாரம்நம்ம வீட்டு பிள்ளைசெஞ்சிக் கோட்டைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பெருஞ்சீரகம்மு. வரதராசன்தமிழ்நாடு சட்டப் பேரவைபணவீக்கம்வெட்சித் திணைகாதல் கொண்டேன்யாழ்சிதம்பரம் நடராசர் கோயில்இமயமலைஅண்ணாமலை குப்புசாமிவிஜய் (நடிகர்)இந்திரா காந்திகாசோலைஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மூகாம்பிகை கோயில்🡆 More