சிமா சியான்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் சிமா (司馬).

சிமா சியானின் பெயர்கள்
குடும்பப் பெயரும்
கொடுத்த பெயரும்
Style name
மரபுவழி 司馬遷 子長
எளிமையாக்கியது 司马迁 子长
பின்யின் Sīmǎ Qiān Zǐcháng
வேட்-கைல்சு Ssŭma Ch'ien Tzu-ch'ang
சிமா சியான்
சிமா சியான்

சிமா சியான் (Sima Qian) (கிமு 145 அல்லது 135 – கிமு 86) என்பவர், சீன வம்சக் காலத்துப் பெரிய எழுத்தர்களுக்குத் தலைவராக இருந்தார். மஞ்சள் பேரரசர் தொடக்கம் பேரரசர் ஆன் வூடி வரையான 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியை உட்படுத்திய பெரும் வரலாற்றாளர்கள் பற்றிய பதிவுகள் என்னும் இவரது சீன வரலாறு பற்றிய நூல் பெரிதும் போற்றப்படுவது. இதனால், இவர் சீன வரலாற்றுவரைவியலின் தந்தை எனப்படுகின்றார். இவரது ஆக்கங்கள் பிற்காலத்தின் சீன வரலாற்றுவரைவியலுக்கு அடிப்படையாக அமைந்தன.

இளமைக் காலமும் கல்வியும்

சிமா சியான் இன்றைய சாங்சியின், ஆன்செங்குக்கு அருகின் இருந்த லாங்மென் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது குடும்பம் வரலாற்று வரைவாளர் குடும்பம் ஆகும். இவரது தந்தையாரும் பேரரசர் ஆன் வூடியின் அரசில் பெரிய எழுத்தர்களுக்குத் தலைவராக இருந்தார். இவரது பணி அரச நூலகத்தை மேலாண்மை செய்வதும், நாட்காட்டி கவனித்தலும் ஆகும். தந்தையின் செல்வாக்கு காரணமாக சிமா சியான் தனது 10 ஆவது வயதிலேயே பழைய எழுத்தாக்கங்களைப் படித்திருந்தார். இவர் அக்காலத்தில் பெயர் பெற்ற கான்பூசியப் பெரியார்களான கொங் ஆங்குவோ, டொங் சொங்சூ ஆகியோருக்கு மாணவராக இருந்தார். இருபதாவது வயதில் அவரது தந்தையாரின் உதவியுடன் சிமா சியான் நாடு தழுவிய பயணம் ஒன்றைத் தொடங்கினார். இப் பயணத்தின்போது இவரது முதன்மை ஆக்கமான சிசிக்காக பல பயனுள்ள நேரடி வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார். பழைய கதைகள் வதந்திகள் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வதும், பழைய நினைவுச் சின்னங்களுக்குச் செல்வதுமே இவரது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சாண்டொங், யுனான், எபெய், செசியாங், சியாங்சு, சியாங்சி, உனான் ஆகிய இடங்களுக்கு இவர் பயணம் செய்தார்.

Tags:

zh:司马姓சீனப் பெயர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பச்சைக்கிளி முத்துச்சரம்வரலாறுஆறுமுக நாவலர்யூதர்களின் வரலாறுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இந்தியத் தேர்தல் ஆணையம்கட்டபொம்மன்இந்திய தேசிய காங்கிரசுபர்வத மலைஉ. வே. சாமிநாதையர்பித்தப்பைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருவண்ணாமலைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கான்கோர்டுவைகோமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇட்லர்சு. வெங்கடேசன்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024மியா காலிஃபாபெண் தமிழ்ப் பெயர்கள்மகேந்திரசிங் தோனிபூட்டுபுலிநீலகிரி மக்களவைத் தொகுதிபௌத்தம்டார்வினியவாதம்சித்தர்கள் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ் மன்னர்களின் பட்டியல்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்பீப்பாய்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்தமிழ்ப் பருவப்பெயர்கள்தைராய்டு சுரப்புக் குறைம. பொ. சிவஞானம்வி.ஐ.பி (திரைப்படம்)மூசாபிரித்விராஜ் சுகுமாரன்மலைபடுகடாம்இரட்சணிய யாத்திரிகம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)பந்தலூர் வட்டம்குருதி வகைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திரிசாஆசாரக்கோவைபெண்மருதமலை முருகன் கோயில்2022 உலகக்கோப்பை காற்பந்துசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்எஸ். ஜானகிநயன்தாராஅறிவியல்மேற்குத் தொடர்ச்சி மலைசீரடி சாயி பாபாஜெயகாந்தன்பணவீக்கம்இந்திமாதவிடாய்முன்னின்பம்குத்தூசி மருத்துவம்நன்னீர்அனுமன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956இராமச்சந்திரன் கோவிந்தராசுகணியன் பூங்குன்றனார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2ஆசியாஇயேசுவின் உயிர்த்தெழுதல்மதராசபட்டினம் (திரைப்படம்)ஆடு ஜீவிதம்கட்டுரை🡆 More