தருணி சச்தேவ்

தருணி சச்தேவ் (Taruni Sachdev) 1998 மே 14 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய விளம்பர நடிகை மற்றும் குழந்தை நட்சத்திரமாவார், சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் அவரது பணிக்காக நன்கு அறியப்பட்டவர்.

ரஸ்னா விளம்பரங்களில் மற்றும் பாலிவுட் திரைப்படமான பா (2009), படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார். வெள்ளிநட்சத்திரம் என்றப் படத்தில் அம்முக்குட்டியாக நடித்ததற்காக மலையாள பார்வையாளர்களிடையே பிரபலமாக உள்ளார்.

தருணி சச்தேவ்
பிறப்புதருணி சச்தேவ்
(1998-05-14)14 மே 1998
மும்பை, இந்தியா
இறப்பு14 மே 2012(2012-05-14) (அகவை 14)
ஜோம்சம், நேபாளம்
இறப்பிற்கான
காரணம்
விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்
மற்ற பெயர்கள்வாயாடிப் பெண்
பணிவிளம்பர நடிகை, நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003 முதல் 2012 வரை
பெற்றோர்ஹரீஷ் சச்தேவ்
கீதா சச்தேவ்

சுயசரிதை

சொந்த வாழ்க்கை

தருணி சச்தேவ் மும்பை நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரான, ஹரீஷ் சச்தேவ் மற்றும் கீதா சச்தேவ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மும்பை, பாந்த்ரா நகரில் பாய் அவபாய் பிரேம்ஜி பெட்டிட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். தருணியின் தாயார் மும்பை ராதா கோபிநாத் கோவிலின் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் பக்தராவார். (ஹரே கிருஷ்ணா இயக்கம்), தருனி கோயிலின் திருவிழாக்களிலும் நாடகங்களிலும் அரங்கேற்றம் செய்துள்ளார்..

தொழில்

ரஸ்னா போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தருணி நடித்தார், மேலும் கோல்கேட் பற்பசை, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன், எல்.ஜி, காஃபி பைட், கோல்ட் வின்னர், சக்தி மாசாலா மற்றும் ஸ்டார் பிளஸ் டிரீம்ஸ் ஆகிய பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தருணி தோன்றியுள்ளார். திரைப்படத்தில் மிகவும் பரபரப்பான நடிக்கும் குழந்தைகளில் ஒருவராகவும், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் வித்யா பாலன் ஆகியோருடன் பா என்ற இந்திப் படத்திலும் (2009) நடித்துள்ளார். இவர் மலையாளப் படங்களான வெள்ளி நட்சத்திரம் (2004) மற்ரும் சத்யம் (2004) என இரு படங்களில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் அதிக ஊதியம் பெறும் குழந்தை நட்சத்திரமாக இருந்தார். சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான தமிழ்த் தொடரன மெட்டி ஒலி என்ற நாடகத்தில் சீதாவின் மகள் மாமினி குட்டி வேடத்தில் 712 வத் அத்தியாயத்தில் இருந்து இறுதி வரை நடித்துள்ளார். இந்தித் தொடரான மூன்று முடிச்சு என்பதில் துர்காராணி வேடத்தில் நடித்துள்ளார். இவருடைய இறப்பிற்கு பின்னர் இந்தத் தொடரில் ருஹானிக்கா தவான் நடித்துள்ளார்

இறப்பு

அவருடைய பிறநத நாளான 2012 மே 14 அன்று நேபாளத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் தருணி சச்தேவ் இறாந்தார். தருணியின் தாயார் கீதா சாக்தேவும் அவருடன் சேர்ந்து விமானத்தில் இறந்தார். நேபாள பயணத்திற்கு முன் 2012 மே 11 அன்று அவருடைய நண்பர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்து, "உங்களை சந்திப்பது இதுவே கடைசி முறை" எனக் கூறியுள்ளார். தருணியின் நண்பர்கள் இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர், ஏனெனில் இதற்கு முன்னர் அவர் விமானத்தில் பறக்கும் போதெல்லாம் யாரையும் கட்டிப்பிடிப்பதில்லை. விமானம் பறப்பதற்கு முன் அவரது சிறந்த நண்பரிடம் அவர் அனுப்பிய ஒரு கடைசி செய்தி "விமானம் நொறுங்கினால் என்ன நடக்கும்" என்று கேட்டார், தொடர்ந்து "நான் உன்னை நேசிக்கிறேன்" என்ற செய்தியுடன். அந்த விமானத்தில் இறக்க அவரது விதி எழுதப்பட்டதாக அவரது நண்பர்கள் நம்புகிறார்கள். தந்தை மற்றும் மகன்களான, அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் அவரது மரணத்தின் மீது தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

தருணி சச்தேவ் சுயசரிதைதருணி சச்தேவ் தொழில்தருணி சச்தேவ் இறப்புதருணி சச்தேவ் குறிப்புகள்தருணி சச்தேவ் வெளி இணைப்புகள்தருணி சச்தேவ்அமிதாப் பச்சன்இந்திய மக்கள்பாலிவுட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினைச்சொல்முத்துராஜாவிஜய் (நடிகர்)சங்க இலக்கியம்விசயகாந்துகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)திருப்பாவைமருதம் (திணை)உ. வே. சாமிநாதையர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)மயில்கிராம சபைக் கூட்டம்இந்திய ரிசர்வ் வங்கிதிருக்குர்ஆன்ரெட் (2002 திரைப்படம்)பாண்டவர்சூல்பை நீர்க்கட்டிதிருப்பதிஐராவதேசுவரர் கோயில்வேற்றுமையுருபுகில்லி (திரைப்படம்)தில்லி சுல்தானகம்வெப்பம் குளிர் மழைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நரேந்திர மோதிவெட்சித் திணைதனுசு (சோதிடம்)செந்தமிழ் பாட்டுபுற்றுநோய்சித்தர்கள் பட்டியல்தமிழர் நிலத்திணைகள்மேற்குத் தொடர்ச்சி மலைநாடகம்இந்தியன் பிரீமியர் லீக்கருமுட்டை வெளிப்பாடுவிந்துபெரியாழ்வார்ஸ்டார் (திரைப்படம்)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைநவதானியம்முக்கூடற் பள்ளுகேசி (அரக்கன்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சவூதி அரேபியாவேதநாயகம் சாஸ்திரியார்சடுகுடுதிரு. வி. கலியாணசுந்தரனார்மத்தி (மீன்)அத்தி (தாவரம்)சிலப்பதிகாரம்சங்க காலம்அம்பேத்கர்சிவபெருமானின் பெயர் பட்டியல்கருக்கலைப்புஇயற்கைசுற்றுச்சூழல் பாதுகாப்புநாலடியார்அறுபது ஆண்டுகள்சிவாஜி கணேசன்ராச்மாநான் அவனில்லை (2007 திரைப்படம்)வெப்பநிலைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்முருகன்நந்திக் கலம்பகம்தமிழ்நாடு சட்டப் பேரவைமரபுச்சொற்கள்தேசிக விநாயகம் பிள்ளைபோதைப்பொருள்நிதி ஆயோக்பித்தப்பைஹரி (இயக்குநர்)ஆண்டாள்சார்பெழுத்துநன்னன்நெய்தல் (திணை)விராட் கோலிபரிபாடல்🡆 More