தமிழறியும் பெருமான் கதை

தமிழறியும் பெருமான் கதை என்பது ஔவையாரோடு தொடர்புடைய கதைகளில் ஒன்று.

தமிழறியும் பெருமான் என்பது ஒரு பெண்ணின் பெயர்.

அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். வில்லன் ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தி முடுக்கிக்கொண்டிருந்தனர். ஒருநாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம்போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று” என்று சொல்லிக்கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஔவையார் அந்தப் பேயின் வரலாற்றை முன்பே அறிந்தவர். அந்தப் பேய் வரும்போது நான்கு பாடல்கள் பாடினார். அவற்றுள் ஒன்று

    வெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை
    கண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி
    பெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)
    எற்றோ,மற்(று) :எற்றோ,மற்(று) எற்று.

இப்படி நான்கு பாடல்கள்.

பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார்.

பேய் நடுங்கி ஔவையின் காலில் விழுந்து வணங்கியது. ஔவை அந்தப் பேயின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துரைத்தார். அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகுவெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக்கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.

  • இங்குக் காட்டப்பட்டுள்ள பாடல் 16-17ஆம் நூற்றாண்டினது ஆகலாம்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

Tags:

ஔவையார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புணர்ச்சி (இலக்கணம்)ஏறுதழுவல்சென்னைதேம்பாவணிஆழ்வார்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தினகரன் (இந்தியா)இந்திய உச்ச நீதிமன்றம்பாத்திமாதமிழ்நாடு சட்டப் பேரவைமுத்துராஜாசுந்தரமூர்த்தி நாயனார்பிலிருபின்பாம்பாட்டி சித்தர்தற்குறிப்பேற்ற அணிமகாபாரதம்ஜலியான்வாலா பாக் படுகொலைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மியா காலிஃபாநாலடியார்மருது பாண்டியர்வறுமைமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்திருவாதிரை (நட்சத்திரம்)சிவன்இசுலாமிய வரலாறுதமிழ் படம் 2 (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)இசைதூதுவளைகூகுள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்இந்தியாவில் இட ஒதுக்கீடுஉரைநடைஇராமாயணம்செவ்வாய் (கோள்)பொன்னியின் செல்வன்விநாயகர் அகவல்நம்ம வீட்டு பிள்ளைநாழிகைகோத்திரம்மரகத நாணயம் (திரைப்படம்)இந்திய புவிசார் குறியீடுவெளிச் சோதனை முறை கருக்கட்டல்வரலாறுவெ. இறையன்புசங்க இலக்கியம்விஷ்ணுகார்லசு புச்திமோன்சமணம்ஹூதுவிடுதலை பகுதி 1பார்க்கவகுலம்மாலை நேரத்து மயக்கம்உலக நாடக அரங்க நாள்வ. உ. சிதம்பரம்பிள்ளைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஔவையார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சமையலறைசிலப்பதிகாரம்சனீஸ்வரன்இரசினிகாந்துபங்குச்சந்தைசெயற்கை அறிவுத்திறன்பரதநாட்டியம்ஒற்றைத் தலைவலிஆந்திரப் பிரதேசம்ஹரிஹரன் (பாடகர்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கலிங்கத்துப்பரணிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மேற்கு வங்காளம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)பெ. சுந்தரம் பிள்ளைரேஷ்மா பசுபுலேட்டிபுதுச்சேரி🡆 More