ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்

ஜார்ஜ் ஆர்.

ஆர். மார்ட்டின் அல்லது ஆர். மார்டின் (George R. R. Martin, பி. செப்டம்பர் 20, 1948) ஒரு அமெரிக்க கனவுருப்புனைவு எழுத்தாளர். ஜார்ஜ் ரேமண்ட் ரிச்ச்சர்ட் மார்ட்டின் என்பது இவரது முழுப்பெயர். ஜி. ஆர். ஆர். எம் என்று தனது முன்னெழுத்துகளாலும் அறியப்படுகிறார். எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (A Song of Ice and Fire) கனவுருப்புதின வரிசை இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும். கனவுருப்புனைவுகளைத் தவிர திகில் புனைவு, அறிபுனை போன்ற பாணிகளிலும் புத்தகங்களை எழுதியுள்ளார். பல ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களில் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் டொல்கீன் என்று கருதப்படும் மார்ட்டின் தற்போது கனவுருப்புனைவு உலகின் பெரும் புள்ளிகளில் ஒருவராவார்.

ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்
2007ல் மார்ட்டின்
2007ல் மார்ட்டின்
பிறப்புஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்
செப்டம்பர் 20, 1948 (1948-09-20) (அகவை 75)
பயோன், நியூ ஜெர்சி
தொழில்எழுத்தாளர்
வகைஅறிபுனை, திகில் புனைவு, கனவுருப்புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்
இணையதளம்
http://www.georgerrmartin.com/

1970களில் அறிபுனை சிறுகதைகளை எழுதத் தொடங்கிய மார்ட்டின் பல முறை ஹூகோ மற்றும் நெபூலா விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1980களில் தொலைக்காட்சித் துறையில் சேர்ந்து திரைக்கதைகளை எழுதத்தொடங்கினார். தி டிவிலைட் சோன், பியூட்டி அண்ட் தி பீஸ்ட் போன்ற வெற்றிபெற்ற தொடர்களில் திரைக்கதை எழுத்தாளாராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் புத்தகங்களில் தொகுப்பாசிரியாராகவும் வேலை பார்த்தார். 1996ல் எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் வரிசையில் முதல் புதினமான எ கேம் ஆஃப் துரோண்ஸ் (A Game of Thrones) வெளியாகி பெரு வெற்றி பெற்றது. ஏழு புத்தகங்களைக்கொண்ட இந்த வரிசையில் இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டினின் பல படைப்புகள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. தற்சமயம் எ கேம் ஆஃப் துரோண்ஸ் புதினம் அமெரிக்காவின் ஹெச். பி. ஓ நிறுவனத்தால் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. தனது எழுத்துக்காக ஹூகோ, நெபூலா, பிராம் ஸ்டோக்கர் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். வாசகர்களுடன் இணையம் மூலமாகவும், அறிபுனை / கனவுருப்புனைவு கருத்தரங்குகள் மூலமாகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மார்ட்டின் தனது மிகப்பிரபலமான படைப்பான எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் ஐ முடிக்காமல் இழுத்தடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வெளி இணைப்புகள்

Tags:

அறிபுனைஐக்கிய அமெரிக்காகனவுருப்புனைவுஜெ. ஆர். ஆர். டோல்கீன்திகில் புனைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அவுன்சுஜிமெயில்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கொடைக்கானல்தூது (பாட்டியல்)குடும்ப அட்டைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பிரேமலுஆய்த எழுத்துநீர் மாசுபாடுகூகுள்சொல்பெரும்பாணாற்றுப்படைஇரட்டைக்கிளவிகபிலர் (சங்ககாலம்)தமிழ்பூரான்திணைமழைநீர் சேகரிப்புஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)புனித ஜார்ஜ் கோட்டைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)மரகத நாணயம் (திரைப்படம்)அக்பர்பள்ளுகார்ல் மார்க்சுஇல்லுமினாட்டிசச்சின் (திரைப்படம்)கணையம்சுந்தர காண்டம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அகமுடையார்இசைநான் அவனில்லை (2007 திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ் எழுத்து முறைபெண்சென்னைமஞ்சும்மல் பாய்ஸ்வெ. இறையன்புசிறுபஞ்சமூலம்உடன்கட்டை ஏறல்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்இரசினிகாந்துவிசயகாந்துதற்கொலை முறைகள்இரட்டைமலை சீனிவாசன்இயேசு காவியம்கூலி (1995 திரைப்படம்)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்கற்றாழைகருப்பை நார்த்திசுக் கட்டிவெ. இராமலிங்கம் பிள்ளைஈ. வெ. இராமசாமிமலேரியாதீபிகா பள்ளிக்கல்பெண்களின் உரிமைகள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)எஸ். ஜானகிபொது ஊழிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஐங்குறுநூறுகல்விமயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசப்தகன்னியர்தமிழக வெற்றிக் கழகம்முக்கூடற் பள்ளுதமிழ் இலக்கணம்குண்டூர் காரம்மயங்கொலிச் சொற்கள்சீனாதீரன் சின்னமலைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்ர. பிரக்ஞானந்தாபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்🡆 More