சி. நாராயண ரெட்டி: தெலுங்கு எழுத்தாளர்

சிங்கிரெட்டி நாராயண ரெட்டி (ஆங்கிலம்: Cingireddi Narayana Reddy) (பிறப்பு: 29 ஜூலை 1931   - இறப்பு: 12 ஜூன் 2017), சி.

நாராயண ரெட்டி என்றும் நன்கு அறியப்படும் இவர் விருதுகள் பல பெற்ற இந்திய தெலுங்கு கவிஞரும் எழுத்தாளருமாவார். கவிதைகள், உரைநடை நாடகங்கள், பாடல் நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் கசல்கள் உள்ளிட்ட எண்பதுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை ரெட்டி உருவாக்கியிருந்தார். மேலும், இவர் பேராசிரியராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

சிங்கிரெட்டி நாராயண ரெட்டி, 1931 ஜூலை 29, அன்று தெலுங்கானா மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள அனுமாசிப்பேட்டையிலுள்ள மருமுலு என்ற கிராமத்தில், (இப்போது இந்தியாவின் தெலுங்கானாவின் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம்) மல்லா ரெட்டி மற்றும் புச்சாமா ஆகியோருக்கு ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒருவிவசாயி, தாயார் வீட்டு மனைவியாவர். இவர் உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர், 1949 இல் ஐதராபாத்தின் உசுமானியா பல்கலைக்கழகத்தில் படித்தார். நிசாமின் ஆட்சியில் தெலுங்கில் கல்வி கிடைக்காததால் ரெட்டி பட்டம் பெறும் வரை உருது வழியில் படித்தார். அவர் தனது பட்டப்படிப்பின் போது தெலுங்கை தனது முதல் பாடமாக எடுத்துக் கொண்டார். ரெட்டி 1954 இல் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றார். 1955 இல் கல்லூரி விரிவுரையாளரானார். 1962 இல் அவர் "தெலுங்கின் நவீன மரபுகள்" என்பதில் முனைவரானார். 1976 இல் பேராசிரியரானார். :2

அவர் தனது தொடக்கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியில் உருது வழியில் படித்தார். மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த குருக்கள் சதாவதானி சேசாத்ரி ரமணா கவ்லுவின் வழிகாட்டுதலின் கீழ் சிர்சில்லாவில் பள்ளிப்படிப்பின் போதே தெலுங்கைத் தனியாகப் படித்தார். கரீம்நகர் அரசுக் கல்லூரியின் முதல் முதல்வரும் (1959–61) விஜயவாடாவின் புகழ்பெற்ற கவிஞரும், ஞானபீட விருது பெற்றவருமான கவி சாம்ராத் விஸ்வநாத சத்யநாராயணா அவருக்கு வழிகாட்டினார். தனது சொந்த ஊரில் தொடக்கல்வி, இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர், தனது பட்டப்படிப்பைத் தொடர ஐதராபாத் சென்றார். அவர் நவீன தெலுங்கு இலக்கிய பேராற்றல் வாய்ந்தவர்களை அறிந்து குர்ரம் சாசுவா, சிறீ சிறீ, தேவுலப்பள்ளி கிருஷ்ணா சாத்திரி எழுதிய புத்தகங்களையும் படித்தார் .

நாராயண ரெட்டி சுசீலா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு நான்கு மகள்கள் இருந்தனர். நாராயண ரெட்டி தனது மனைவியின் பெயரில் ஒரு விருதை நிறுவினார். இதன்மூலம் ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 1997 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு ரெட்டி பரிந்துரைக்கப்பட்டார்.

விருதுகள்

ரெட்டி தனது இலக்கியப் படைப்புகளுக்காக பல விருதுகளை வென்றார். அதில் 1973 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதும் அடங்கும். மந்தலு மனவாடு என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் விஸ்வாம்பரா என்ற படைப்பிற்காக ஞானபீட விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய கடிதங்களின் அகாதமி வழங்கிய இது மிக உயர்ந்த விருதான சாகித்ய அகாடமி விருதாகும். ரெட்டிக்கு 1978 ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தால் கலா பிரபூர்ணா என்ற கௌரவம் வழங்கப்பட்டது. 1982 இல் சோவியத் ஒன்றியத்தின் நேரு விருதும், சிறீ ராஜா-லட்சுமி அறக்கட்டளையின் ராஜா-லட்சுமி விருதும் 1988 இல் 2011 இல் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம் "விசிட்ட புரசுகாரம்" என்ற விருதினை வழங்கியது. நான்காவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதுகளான பத்மஸ்ரீ (1977) மற்றும் பத்ம பூஷண் (1992) ஆகியவற்றை வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது. சீத்தைய்யா என்றத் திரைப்படத்தில் இடம்பெற்ற "இதிகோ ராயலசீமா கதா" என்ற பாடலுக்காகவும், பிரேமிஞ்சு என்றத் திரைப்படத்தில் இடம்பெற்ற "கன்டேனே அம்மா அனி என்டே எலா?" என்ற பாடலுக்காகவும் இரண்டு முறை சிறந்த பாடலாசிரியருக்கான நந்தி விருதையும் வென்றார்.

இறப்பு

ரெட்டிக்கு உடல்நலம் மோசமடைந்து, மார்பு வலி ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தனது 85 வயதில் 2017 சூன் 12 அன்று காலமானார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

சி. நாராயண ரெட்டி ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்சி. நாராயண ரெட்டி விருதுகள்சி. நாராயண ரெட்டி இறப்புசி. நாராயண ரெட்டி குறிப்புகள்சி. நாராயண ரெட்டி வெளி இணைப்புகள்சி. நாராயண ரெட்டிகசல் (இசை)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசுவாதி (பஞ்சாங்கம்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதைராய்டு சுரப்புக் குறைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)யூதர்களின் வரலாறுசேரர்காடுவெட்டி குருடி. டி. வி. தினகரன்சவ்வாது மலைமேழம் (இராசி)சிறுகதைதங்க தமிழ்ச்செல்வன்குற்றாலக் குறவஞ்சிமீரா சோப்ராஇலிங்கம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமூவேந்தர்கிறிஸ்தவச் சிலுவைதமிழ் எழுத்து முறைஇந்தோனேசியாசென்னைதங்கம் தென்னரசுஎன்விடியாதொல்காப்பியம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதேசிக விநாயகம் பிள்ளைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கௌதம புத்தர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇந்திய உச்ச நீதிமன்றம்நெல்லிவெண்பாநம்ம வீட்டு பிள்ளைமு. வரதராசன்விஷ்ணுசப்ஜா விதைஅகத்தியமலைஅளபெடைகொடைக்கானல்இந்திரா காந்திதமிழில் சிற்றிலக்கியங்கள்சிவனின் 108 திருநாமங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்தேவநேயப் பாவாணர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பரிவர்த்தனை (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்பங்குச்சந்தைஅல்லாஹ்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்தியப் பிரதமர்பரிவுசூரைசித்தர்கள் பட்டியல்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மதீனாஇட்லர்புதிய ஏழு உலக அதிசயங்கள்பாட்டாளி மக்கள் கட்சிவாணிதாசன்விசயகாந்துதமிழர் நிலத்திணைகள்கலிங்கத்துப்பரணிமறைமலை அடிகள்சவூதி அரேபியாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பிரேமலதா விஜயகாந்த்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுமூலம் (நோய்)கலித்தொகைசிதம்பரம் நடராசர் கோயில்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஎம். கே. விஷ்ணு பிரசாத்டார்வினியவாதம்ராதாரவி🡆 More