ஞானபீட விருது: விருது

ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும்.

இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.

ஞான பீட விருது
இலக்கியத்திற்கான தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான விருது 1961 இல் நிறுவப்பட்டது
விளக்கம்இந்திய இலக்கியத்திற்கான விருது
இதை வழங்குவோர்பரதிய ஞானபீடம்
வெகுமதி(கள்)11 இலட்சம் (2020 இல் நிகர மதிப்பு 12 lakh or US$16,000)
முதலில் வழங்கப்பட்டது1965
கடைசியாக வழங்கப்பட்டது2019
தற்போது வைத்துள்ளதுளநபர்கிருஷ்ணா சோப்தி
Highlights
மொத்த விருதுகள்58
முதலில் வெற்றி பெற்றவர்ஜி. சங்கர குருப்
இணையதளம்http://jnanpith.net/index.html Edit on Wikidata

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.

இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.

1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.

2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் புரோதம் புரோதிசுருதி (பொருள்: முதல்சத்தியம்) எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

பிண்ணனி

ஞானபீட விருது: பிண்ணனி, விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள், ஞான பீட விருது பெற்றோர் பட்டியல் 
முதல் ஞானபீட விருது பெற்ற சங்கர குருப்

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு சைனக் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. மே 1961 இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் காகா காலேல்கர், ஹரிவன்சராய் பச்சன்,ராம்தாரி சிங் திங்கர் , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி 1962 இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது.

ஏப்ரல் 2, 1962 இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை புதுதில்லிக்கு அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது மார்ச் 16, 1963 இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் பெப்ரவரி 28, 1963 இல் இறந்தார். எனவே காகா காலேல்கர் மற்றும் சம்பூர்ணநந்தர் ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழு நிர்ணயம் செய்தது.

முதல் தேர்வுக் குழு உறுப்பினர்கள்

முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணாநந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர்.

விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள்

விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

தேர்வுக்குழுவானது சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான ஏழு முதல் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகள் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.தேவையேற்படின் அந்தக் காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்யலாம். பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் பகுதி அல்லது முழுவதுமாக இந்தி அல்லது ஆங்கிலம்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதனை ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்வர். ஒரு குறிப்பிட்ட ஆண்டிக்கான தேர்வு பெற்றவர் பற்றிய அறிவிப்பை தேர்வுக் குழு வெளியிடும். இதற்கான முழு அதிகாரமும் தேர்வுக் குழுவிற்கே உள்ளது.

ஞான பீட விருது பெற்றோர் பட்டியல்

(ஆண்டு - பெயர் - ஆக்கம் - மொழி)

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

Tags:

ஞானபீட விருது பிண்ணனிஞானபீட விருது விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள்ஞானபீட விருது ஞான பீட விருது பெற்றோர் பட்டியல்ஞானபீட விருது மேற்கோள்கள்ஞானபீட விருது வெளியிணைப்புகள்ஞானபீட விருதுஇந்தியாசைனம்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருத்தரிப்புஎடப்பாடி க. பழனிசாமிபாரதிய ஜனதா கட்சிஆங்கிலம்தருமபுரி மக்களவைத் தொகுதிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஐம்பெருங் காப்பியங்கள்மு. அ. சிதம்பரம் அரங்கம்கல்லீரல்குண்டூர் காரம்தேனீபி. கோவிந்தராஜ்சிவம் துபேபுரோஜெஸ்டிரோன்சித்தர்திணையும் காலமும்இந்தியன் பிரீமியர் லீக்மருதமலைபெண்களின் உரிமைகள்காதல் மன்னன் (திரைப்படம்)கம்பர்மண் பானைவாழைப்பழம்சித்த மருத்துவம்மார்ச்சு 27தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவிடுதலை பகுதி 1ரமலான்தமிழ்நாடு சட்டப் பேரவைவ. உ. சிதம்பரம்பிள்ளைபனைநெசவுத் தொழில்நுட்பம்இதழ்சீமான் (அரசியல்வாதி)வேற்றுமைத்தொகைமயக்கம் என்னஇளையராஜாகோத்திரம்பாசிசம்கருப்பை நார்த்திசுக் கட்டிகுறுந்தொகைதேவாங்குஅரசியல்முன்மார்பு குத்தல்கடல்கேரளம்லோ. முருகன்சனீஸ்வரன்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)ஒற்றைத் தலைவலிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கண்ணனின் 108 பெயர் பட்டியல்உணவுபத்து தலதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிவயாகராஜெயம் ரவிபெண்தேம்பாவணிதினேஷ் கார்த்திக்மதுரை முத்து (நகைச்சுவையாளர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)வானிலைகுமரகுருபரர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)அரக்கோணம் மக்களவைத் தொகுதிவிபுலாநந்தர்வால்வெள்ளிசிவாஜி கணேசன்அன்னை தெரேசாதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கல்விமரகத நாணயம் (திரைப்படம்)சைவத் திருமுறைகள்நவக்கிரகம்வௌவால்நா. முத்துக்குமார்🡆 More