சி. என். கோபுரம்

சி.

என். கோபுரம்(CN Tower (பிரெஞ்சு மொழி: Tour CN) ), 553.3 மீட்டர் உயரம் (1,815.3 அடி) உயரம் கொண்ட கோபுரமானது கனடாவின் டோரண்டோவில், ஒன்றாரியோ மாகணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர்த்தியாயின. 1976 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், 2010 ஆம் ஆண்டில் புர்ஜ் கலிஃபா என்னும் துபாய் கோபுரம் மற்றும் கன்டொண் கோபுரம் ஆகிய கோபுரங்கள் கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது .

சி. என். கோபுரம்
சி. என் கோபுரம்

மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும்.

1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும்.

வரலாறு

1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர்.

கட்டுமானம்

சி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது.

கட்டிடக் கலைஞர்கள்

WZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன்.

திறப்பு விழா

சி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது.

கட்டுமான நிலைகள்

சான்றுகள்

வெளியிணைப்புகள்

சி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

Tags:

சி. என். கோபுரம் வரலாறுசி. என். கோபுரம் கட்டுமானம்சி. என். கோபுரம் கட்டிடக் கலைஞர்கள்சி. என். கோபுரம் திறப்பு விழாசி. என். கோபுரம் கட்டுமான நிலைகள்சி. என். கோபுரம் சான்றுகள்சி. என். கோபுரம் வெளியிணைப்புகள்சி. என். கோபுரம்19731976அடிஆண்டுஉயரம்ஒன்றாரியோகனடாகன்டொண் கோபுரம்கோபுரம்ஜூன் 26டோரண்டோதுபாய் கோபுரம்பிரெஞ்சு மொழிபுர்ஜ் கலிஃபாபெப்ரவரி 6மீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தேர்தல் பத்திரம் (இந்தியா)மணிமேகலை (காப்பியம்)பக்கவாதம்கட்டுவிரியன்சுற்றுச்சூழல் பாதுகாப்புசிவனின் தமிழ்ப் பெயர்கள்பாசிப் பயறுகுலுக்கல் பரிசுச் சீட்டுதேர்தல்குதிரைஆய கலைகள் அறுபத்து நான்குவேற்றுமைத்தொகைஇயோசிநாடிமுடியரசன்கரிகால் சோழன்சைவத் திருமுறைகள்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிதேர்தல் நடத்தை நெறிகள்தமிழில் சிற்றிலக்கியங்கள்சேலம் மக்களவைத் தொகுதிஅல்லாஹ்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வேதாத்திரி மகரிசிகண்ணே கனியமுதேசீறாப் புராணம்புரோஜெஸ்டிரோன்காடுவெட்டி குரும. கோ. இராமச்சந்திரன்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கோலாலம்பூர்வாதுமைக் கொட்டைகலாநிதி மாறன்ஆனைக்கொய்யாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்முல்லை (திணை)நரேந்திர மோதிதயாநிதி மாறன்இராமர்உமறு இப்னு அல்-கத்தாப்ஜி. யு. போப்ஹர்திக் பாண்டியாமு. வரதராசன்குமரகுருபரர்இயற்பியல்கார்லசு புச்திமோன்மனித வள மேலாண்மைஅருங்காட்சியகம்மொழிசிந்துவெளி நாகரிகம்சிறுகதைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வேளாண்மைஅரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ் இலக்கியப் பட்டியல்பிள்ளைத்தமிழ்நவக்கிரகம்வெ. இராமலிங்கம் பிள்ளைசூரியக் குடும்பம்இந்திய தேசியக் கொடிபொன்னுக்கு வீங்கிதமிழ்கலைச்சொல்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதென் சென்னை மக்களவைத் தொகுதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பால்வினை நோய்கள்இராவண காவியம்அஜித் குமார்கர்மா🡆 More