சிராஜ்கஞ்ச் மாவட்டம்

சிராஜ்கஞ்ச் மாவட்டம் (Sirajganj District) (வங்காள மொழி: সিরাজগঞ্জ জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிராஜ்கஞ்ச் நகரம் ஆகும்.

சிராஜ்கஞ்ச் மாவட்டம்
வங்காளதேசத்தில் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் போக்ரா மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், மேற்கில் பப்னா மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், தெற்கில் பப்னா மாவட்டம் மற்றும் மணிகஞ்ச் மாவட்டமும், கிழக்கில் மணிகஞ்ச் மாவட்டம், ஜமால்பூர் மாவட்டம் மற்றும் தங்காய்ல் மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

2402.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஒன்பது துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உல்லபாரா, சஹத்பூர், சிராஜ்கஞ்ச், பெல்குச்சி, ராய்கஞ்ச் மற்றும் காஜிப்பூர் என ஆறு நகராட்சி மன்றங்களும், 82 உள்ளாட்சி ஒன்றியங்களும், 2016 கிராமங்களும் உள்ளது. மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 6700 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0751 ஆகும்.

பொருளாதாரம்

வேளாண்மைப் பொருளாதாரத்தையே அதிகம் நம்பியுள்ளது இம்மாவட்டம். இங்கு ஜமுனா ஆறு, கர்தோ ஆறு, போரல் ஆறு, இஷாமதி ஆறு, புல்ஜோரா ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே நெல், சணல், கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, கடுகு, மிளகாய் முதலிய பயிர்கள் விளைகிறது.

தட்ப வெப்பம்

இம்மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பம் 34.6° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பம் 11.9° செல்சியஸ் ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1610 மில்லி மீட்டர் ஆகும்.

மக்கள் தொகையியல்

2402.05 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 30,97,489 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,51,368 ஆகவும், பெண்கள் 15,46,121 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1290 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 42.1% ஆக உள்ளது.இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. தாய் மொழியான வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சிராஜ்கஞ்ச் மாவட்டம் மாவட்ட எல்லைகள்சிராஜ்கஞ்ச் மாவட்டம் மாவட்ட நிர்வாகம்சிராஜ்கஞ்ச் மாவட்டம் பொருளாதாரம்சிராஜ்கஞ்ச் மாவட்டம் தட்ப வெப்பம்சிராஜ்கஞ்ச் மாவட்டம் மக்கள் தொகையியல்சிராஜ்கஞ்ச் மாவட்டம் கல்விசிராஜ்கஞ்ச் மாவட்டம் மேற்கோள்கள்சிராஜ்கஞ்ச் மாவட்டம் வெளி இணைப்புகள்சிராஜ்கஞ்ச் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

படையப்பாவடிவேலு (நடிகர்)செவ்வாய் (கோள்)கடல்ஊராட்சி ஒன்றியம்இலக்கியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)ஓரங்க நாடகம்சுபாஷ் சந்திர போஸ்நான்மணிக்கடிகைநுரையீரல்முதுமலை தேசியப் பூங்காவிழுமியம்திருவோணம் (பஞ்சாங்கம்)வேளாண்மைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மயில்தமிழ்அடல் ஓய்வூதியத் திட்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைநீ வருவாய் எனநெசவுத் தொழில்நுட்பம்திருவாசகம்புணர்ச்சி (இலக்கணம்)புலிமு. க. ஸ்டாலின்மரபுச்சொற்கள்விசாகம் (பஞ்சாங்கம்)மெய்யெழுத்துகாளை (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்கிராம நத்தம் (நிலம்)புதுச்சேரிமுகலாயப் பேரரசுதொழிலாளர் தினம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மாத்திரை (தமிழ் இலக்கணம்)மதுரைக் காஞ்சிநீதிக் கட்சிபாம்புதனுசு (சோதிடம்)ஆசாரக்கோவைநவதானியம்பாலின விகிதம்பயில்வான் ரங்கநாதன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தேவேந்திரகுல வேளாளர்யாதவர்வீரமாமுனிவர்சேக்கிழார்சுற்றுச்சூழல்டி. என். ஏ.எஸ். ஜானகிஉத்தரகோசமங்கைமுத்துராமலிங்கத் தேவர்முதுமொழிக்காஞ்சி (நூல்)பால் (இலக்கணம்)சித்தர்கள் பட்டியல்கூகுள்ரத்னம் (திரைப்படம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுநாயன்மார் பட்டியல்உரிச்சொல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஆகு பெயர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தேர்தல்தமிழ்நாடு சட்டப் பேரவைமாசாணியம்மன் கோயில்சிலம்பம்சார்பெழுத்துபாலை (திணை)காதல் தேசம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இந்தியன் பிரீமியர் லீக்பாரதிதாசன்அட்சய திருதியைபெருஞ்சீரகம்🡆 More