சாம் மானேக்சா: முதல் படைத்துறை உயர்தர தளபதி

சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (Sam Hormusji Framji Sam Bahadur Jamshedji Manekshaw, ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர்.

40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா.

சாம் மானேக்சா
சாம் மானேக்சா: இளமை, இராணுவ சேவை, இந்தியா-பாகிஸ்தான் போர் 1971
சாம் மானேக்சா
எட்டாவது தலைமைத் தளபதி
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-04-03)ஏப்ரல் 3, 1914
அமிர்தசரஸ், பஞ்சாப்
இறப்புசூன் 27, 2008(2008-06-27) (அகவை 94)
வெலிங்டன், தமிழ்நாடு
விருதுகள்பத்ம விபூஷண்
பத்ம பூஷண்
Military Cross
கையெழுத்துசாம் மானேக்சா: இளமை, இராணுவ சேவை, இந்தியா-பாகிஸ்தான் போர் 1971
புனைப்பெயர்"சாம் பகதூர்"
Military service
பற்றிணைப்புவார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இந்தியா (1947 வரை)
சாம் மானேக்சா: இளமை, இராணுவ சேவை, இந்தியா-பாகிஸ்தான் போர் 1971 இந்தியா (1947க்குப் பிறகு)
கிளை/சேவைஇந்திய படை
சேவை ஆண்டுகள்1934–2008
தரம்பீல்டு மார்சல்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப்போர்
1947 இந்திய பாகித்தான் போர்
சீன இந்தியப் போர்
1965,இந்திய பாக்கித்தான் போர்
வங்க விடுதலைப் போர் 1971

இளமை

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏப்ரல் 3, 1914-ல் ஒரு பார்சி குடும்பத்தில் சாம் மானெக்ஷா பிறந்தார் .இவருடைய தந்தை ஹோர்முஸ்ஜி மானெக்சா; தாயார் ஹீராபாய். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க விரும்பினார் மானெக்சா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர். 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்சா.

இராணுவ சேவை

1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த் தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் மாண்டனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது மானெக்சா மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தனது உடல் வயிறு, உள்ளிட்ட 9 இடங்களில் குண்டு காயம் அடைந்தார். ரங்கூனில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுத் தேறினார். இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை மானெக்சா கைப்பற்றினார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்சாவின் உறுதியையும், துணிவையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' என்ற விருதை அளித்தார். 1942, ஏப்ரல் 23 ஆம் நாள் லண்டன் கெசட் இதழ் இச்செய்தியை வெளியிட்டது.

உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். 1946-ல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இராணுவத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் 1971

1969-ம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாகப் பதவியேற்றார். இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்சா. இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. சாம் மானெக்சா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவத் திறமையைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவை வெற்றி பெறச்செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.

சிறப்புகள்

சாம் மானேக்சா: இளமை, இராணுவ சேவை, இந்தியா-பாகிஸ்தான் போர் 1971 
சாம் மானேக்சா உருவம் கொண்ட இந்திய அஞ்சல் தலை
  • பர்மாப் போரில் சிறப்பான சேவைக்காக 1968-ம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது.
  • சாம் மானெக்சாவின் சேவையைப் பாராட்டி 1972-ம் ஆண்டு 'பத்ம விபூஷண்' விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1973, ஜனவடி 1-ம் தேதி அவருக்கு 'பீல்டு மார்ஷல்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இறுதிக் காலம்

ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார். 2007 ஆம் ஆண்டு கோகர் அயூப் என்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் பீல்டு மார்ஷல் மானெக்சாவின் மீது '1965-ல் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவ ரகசியங்களை 20,000 ருபாய்கு விற்று விட்டதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சாம் மானேக்சா: இளமை, இராணுவ சேவை, இந்தியா-பாகிஸ்தான் போர் 1971 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sam Manekshaw
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சாம் மானேக்சா இளமைசாம் மானேக்சா இராணுவ சேவைசாம் மானேக்சா இந்தியா-பாகிஸ்தான் போர் 1971சாம் மானேக்சா சிறப்புகள்சாம் மானேக்சா இறுதிக் காலம்சாம் மானேக்சா மேற்கோள்கள்சாம் மானேக்சா வெளி இணைப்புகள்சாம் மானேக்சா19142008இரண்டாம் உலகப்போர்ஏப்ரல் 3கரியப்பாசூன் 27பாகிஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்காப்பியம்பாதரசம்நீரிழிவு நோய்கதீஜாஇன்று நேற்று நாளைமுன்மார்பு குத்தல்கழுகுமலை வெட்டுவான் கோயில்பாட்டாளி மக்கள் கட்சிஇசுலாமிய நாட்காட்டிமுதலாம் கர்நாடகப் போர்பத்துப்பாட்டுவிஜயநகரப் பேரரசுகழுகுமலைகாதலன் (திரைப்படம்)டி. ராஜேந்தர்மூவேந்தர்புவிஐங்குறுநூறுவெண்பாஅழகிய தமிழ்மகன்திருமணம்நெகிழிவில்லுப்பாட்டுமாணிக்கவாசகர்நம்மாழ்வார் (ஆழ்வார்)ஹரிஹரன் (பாடகர்)கே. என். நேருஎஸ். ஜானகிகபிலர் (சங்ககாலம்)திணைகருமுட்டை வெளிப்பாடுமீன் சந்தைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சுருட்டைவிரியன்போதைப்பொருள்மாநிலங்களவைகணினிகணிதம்என்டர் த டிராகன்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்இமாம் ஷாஃபிஈகுருதிச்சோகைமெட்ரோனிடசோல்நாளிதழ்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இயேசு காவியம்பொன்னியின் செல்வன் 1கன்னி (சோதிடம்)வல்லம்பர்கருப்பை நார்த்திசுக் கட்டிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குஆகு பெயர்இராமர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)யோகக் கலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கருப்பைஇந்திய தேசியக் கொடிமுதுமொழிக்காஞ்சி (நூல்)வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுவன்னியர்இரண்டாம் உலகப் போர்அதியமான் நெடுமான் அஞ்சிஅயோத்தி தாசர்காய்ச்சல்மக்களவை (இந்தியா)குண்டலகேசிகார்த்திக் (தமிழ் நடிகர்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஆய்த எழுத்துவீரப்பன்வேதாத்திரி மகரிசிநெல்இன்ஃபுளுவென்சாஇயோசிநாடிமுதற் பக்கம்கு. ப. ராஜகோபாலன்🡆 More