கொம்புக் குதிரை

கொம்புக் குதிரை என்பது பழங்காலத்து கதைகளில் விவரிக்கப்பட்ட ஒரு பழம்பெரும் உயிரினமாகும்.

இது நெற்றியில் ஒரு பெரிய, கூர்மையான, சுருள் கொம்பு கொண்ட ஒரு குதிரை வடிவம் கொண்ட மிருகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

கொம்புக்குதிரை
(ஒற்றைக் கொம்பு மிருகம்)
கொம்புக் குதிரை
டொமினிக்கோ சம்பியோரியாவினால் ஏ. 1602இல் வரையப்பட்ட கொம்புக் குதிரை, உரோம்)
குழுதொன்மவியல்
ஒத்த உயிரினம்குயிலின், ரீம், இன்ரிக், சத்தாவார், கமகெட்டோ, கர்க்கடன்
தொன்மவியல்உலகளாவியது

ஐரோப்பிய இலக்கியம் மற்றும் கலைகளில், கொம்புக் குதிரை கடந்த ஆயிரம் ஆண்டுகளாக வெள்ளை குதிரை போன்ற அல்லது ஆடு போன்ற விலங்குகளாக சித்தரிக்கப்படுகிறது. இது நீண்ட நேரான கொம்புடன், சில நேரங்களில் ஆட்டின் தாடியுடன் சித்தரிக்கப்படுகிறது. இடைக்காலம் மற்றும் மறுமலர்ச்சி காலத்தில், இது பொதுவாக ஒரு காட்டு வன உயிரினமாக விவரிக்கப்பட்டது. இது தூய்மை மற்றும் கருணையின் சின்னமாக கருதப்பட்டது மற்றும் இதை ஓர் கன்னியால் மட்டுமே பிடிக்க இயலும் என நம்பப்பட்டது. கலைக்களஞ்சியங்களில் அதன் கொம்பு விஷம் கலந்த நீரை சுத்தப்படுத்தும் மற்றும் நோயைக் குணப்படுத்தும் ஆற்றலுடையது என விவரிக்கப்பட்டது. இடைக்கால மற்றும் மறுமலர்ச்சி காலங்களில், தந்தமூக்குத் திமிங்கில தந்தம் சில நேரங்களில் குதிரை கொம்பாக விற்கப்பட்டது.

ஒரு மாட்டை போன்ற கொம்புக் குதிரை வெண்கல வயது சிந்து சமவெளி நாகரிகத்தின் முத்திரைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். கொம்புக் குதிரை வடிவம் பண்டைய கிரேக்கர்களால் இயற்கை வரலாற்றின் கணக்குகளில் பல்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டது. விவிலியம் ரீம் என்ற ஒரு விலங்கை விவரிக்கிறது, அதை சில மொழிபெயர்ப்புகள் கொம்புக் குதிரை என்று கூறுகின்றன.

கொம்புக் குதிரை பிரபலமான கலாச்சாரத்தில் தொடர்ந்து ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இது பெரும்பாலும் கற்பனை அல்லது அரிதான ஒரு சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில், இது ந,ந,ஈ,தி சின்னமாக மாறியுள்ளது.

வரலாறு

கொம்புக் குதிரை 
சிந்து சமவெளி முத்திரை (2600-1900 கி.மு.)

சிந்து சமவெளி

கிமு 2000 நூற்றாண்டுகளில் இருந்து வெண்கல வயது சிந்து சமவெளி நாகரிகத்தின் சோப்புக்கல் முத்திரைகளில் பொதுவாக ஒற்றை கொம்பு கொண்ட ஒரு உயிரித்தின் படம் மிகவும் பொதுவான காணப்படுகின்றன. இது பசுவைப் போன்ற உடலையும், முன்னோக்கிச் செல்லும் வளைந்த கொம்பையும் கொண்டுள்ளது. இந்த கொம்புக்கு குதிரை போன்ற உயிரினம் ஒரு சக்திவாய்ந்த "குலம் அல்லது வணிக சமூகத்தின்" சின்னம் என்று கருதப்படுகிறது.

பழங்காலம்

கொம்புக்கு குதிரை கிரேக்க புராணங்களில் காணப்படவில்லை, மாறாக இயற்கை வரலாற்றின் கணக்குகளில், கிரேக்க எழுத்தாளர்கள் இது இந்தியாவில் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இதன் ஆரம்பகால விளக்கம் இண்டிகா துன்ற புத்தகத்தில் உள்ளது. இதில் இந்த உயிரினங்கள் ஒன்றரை முழ கொம்பு கொண்டு காட்டு கழுதைகள் போல் நீலம் மற்றும் வெள்ளை அல்லது சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் கொண்டவையாக வர்ணிக்கப்பட்டுள்ளன. இதன் இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஈரானில் உள்ள பண்டைய பாரசீக தலைநகரான பெர்செபோலிஸில் உள்ள புடைப்புச் சிற்பங்களில் சிறகுகள் கொண்ட காளைகள் போன்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. அரிஸ்டாட்டில் இரண்டு ஒற்றைக் கொம்பு விலங்குகளை குறிப்பிடுகின்றார், ஓரிக்ஸ் (ஒரு வகையான மான்) மற்றும் "இந்தியக் கழுதை". காரிஸ்டஸின் ஆன்டிகோனஸ் ஒரு கொம்பு "இந்தியக் கழுதை" பற்றி குறிப்பிடுகின்றார். காக்கேசியாவில் ஒற்றைக் கொம்பு குதிரைகள் இருந்தன என்று ஸ்ட்ராபோ கூறுகிறார். மூத்த பிளினி ஓரிக்ஸ் மற்றும் ஒரு இந்திய எருது (ஒருவேளை பெரிய ஒரு கொம்பு காண்டாமிருகம் ) ஒரு கொம்பு மிருகங்கள் என்று குறிப்பிடுகிறார்.

இடைக்காலம்

கொம்புக் குதிரைகளின் இடைக்கால அறிவு விவிலியம் மற்றும் பழங்கால ஆதாரங்களில் இருந்து உருவானது. மேலும் கொம்புக் குதிரைகள் ஒரு வகையான காட்டு கழுதை, ஆடு அல்லது குதிரை என பலவிதமாக குறிப்பிடப்படுகின்றன. கொம்புக் குதிரை கலைப் பொருட்களில் விவரிக்கப்பட்டன. கொம்புக் குதிரை புத்தரின் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட இடைக்கால புராணமான பாற்லாமும் யோசபாத்தும் இல் தோன்றுகிறது. கன்னிப் பெண்ணால் மட்டுமே இவைகளை பிடிக்க முடியும் எனவும், இவை யானைகளை விட மிகவும் சிறியவை, எருமையின் முடி மற்றும் யானையின் கால்கள் மற்றும் ஒரு பெரிய கருப்பு கொம்பு கொண்டவை என மார்கோ போலோ கூறுகிறார். மேலும் காட்டுப்பன்றியின் போன்ற தலையை உடைய அவை சேற்றில் தத்தளித்துக் கொண்டே நேரத்தைக் கழிக்கின்றன எனவும் நாம் நினைப்பது போல் அல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமான மிருகங்கள் என மேலும் விவரிக்கிறார். இந்த விளக்கத்தை பொறுத்து மார்கோ போலோ ஒரு காண்டாமிருகத்தை விவரிக்கிறார் என்பது தெளிவாகிறது.

தற்போதைய கலாச்சாரம்

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கொம்புக் குதிரைகள் ஒரு ந,ந,ஈ,தி சின்னமாக மாறியது. 1970கள் மற்றும் 1980களில் ஓரினச்சேர்க்கை உரிமைப் போராட்டங்களின் போது, நேஆ. நேபெ. இ. மா. சமூகத்தின் பன்முகத்தன்மையின் மகிழ்ச்சியான அடையாளமாக கொம்புக் குதிரை இருந்தது. விக்டோரிய காலத்திலிருந்தே வானவில்களுடன் உள்ளார்ந்த இணைக்கப்பட்ட யூனிகார்ன்கள், வினோத சமூகத்தின் அடையாளமாக மாறியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

கொம்புக் குதிரை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Unicorns
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கொம்புக் குதிரை வரலாறுகொம்புக் குதிரை தற்போதைய கலாச்சாரம்கொம்புக் குதிரை மேற்கோள்கள்கொம்புக் குதிரை வெளி இணைப்புக்கள்கொம்புக் குதிரைகுதிரைபாரம்பரியக் காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகவத் கீதைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கிருட்டிணன்தனுஷ் (நடிகர்)அரசியல் கட்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்போக்கிரி (திரைப்படம்)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மாநிலங்களவைஇலங்கைகுமரகுருபரர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்காற்றுஇலங்கை தேசிய காங்கிரஸ்சதுரங்க விதிமுறைகள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்லால் சலாம் (2024 திரைப்படம்)ஏப்ரல் 26தமிழ் தேசம் (திரைப்படம்)ஆந்தைமுல்லைக்கலிகொடுக்காய்ப்புளிதமிழர் கப்பற்கலைஅகரவரிசைதடம் (திரைப்படம்)சோழர்கல்லணைஅறிவுசார் சொத்துரிமை நாள்பொன்னுக்கு வீங்கிஅன்னை தெரேசாதிருநாள் (திரைப்படம்)நான்மணிக்கடிகைசிவபெருமானின் பெயர் பட்டியல்மருது பாண்டியர்கோயம்புத்தூர்சீனாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்திருமலை (திரைப்படம்)மண் பானைபரிதிமாற் கலைஞர்ஆண் தமிழ்ப் பெயர்கள்வேதநாயகம் பிள்ளைமண்ணீரல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சபரி (இராமாயணம்)பிள்ளையார்யுகம்வைதேகி காத்திருந்தாள்திருவையாறுஇந்து சமய அறநிலையத் துறைவீரமாமுனிவர்சிலம்பரசன்சிறுபஞ்சமூலம்திருமங்கையாழ்வார்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆனைக்கொய்யாஅமலாக்க இயக்குனரகம்எண்மே நாள்கிளைமொழிகள்ஓ காதல் கண்மணிஇந்திய மக்களவைத் தொகுதிகள்முத்தரையர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்அவதாரம்விஷ்ணுஅரவான்ஜெயகாந்தன்ஆகு பெயர்கேள்விமுத்துராமலிங்கத் தேவர்காதல் கோட்டைதமிழ்விடு தூதுஅக்கிநம்மாழ்வார் (ஆழ்வார்)நீர்ப்பறவை (திரைப்படம்)இந்திய ரிசர்வ் வங்கிநஞ்சுக்கொடி தகர்வு🡆 More