குவலய மங்கலடைதல்

குவலய மங்கலடைதல் (Global dimming) என்பது  பூகோள   மேற்பரப்பில்  விழுகின்ற நேரடி ஒளிக்கதிரின் அளவில் ஏற்படும் குறைவுபடலாகும். இது 1950 களில் முதன்முதலாக முறைப்படி  அளவிடப்பட்டது.  இதன் தாக்கம் இடத்திற்கு இடம் மாறுபடுமாயினும், கடந்த மூன்று பதின்மங்களில், அதாவது 1960 முதல் 1990 வரை உலகளாவிய இதன் குறைவுபடல் 4% ஆகக் காணப்படுகின்றது.  எவ்வாறாயினும் 1991 இல்  பின்னாறுபோ எரிமலையின் வெளிக்கிளம்பலுக்குப் பின் இந்த சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது.

குவலய மங்கலடைதல்
மேற்பரப்பில் உள்ள பல எரிதல்கள் (சிவப்பு புள்ளிகள்) அடர் புகை மற்றும் துகள்கள் (நரை புள்ளிகள்)நிறைந்துள்ள கிசக்குஸ் சீனாவின் மேந்தலை வான்பகுதி. புகை மாசு மற்றும் மற்றைய துகள்கள் குவலய மங்கலடைதலுடன்தொடர்புபட்டவை. படம்: மோடிசு NASA's Aqua satellite.

மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் சேரும் சல்பேட் தூசிப்படலம் முதலான துகள்களின் அதிகரிப்பினால் குவலய மங்கலடைதல் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. இது ஆவியாதலைக் குறைப்பதனால் நீரியல் வட்டம் பாதிப்புக்குள்ளவதுடன் மழை வீழ்ச்சியும் குறைகின்றது. குவலய மங்கலடைதல் பூகோள குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றது, இது பசுங்குடில் வாயு விளைவுகளுக்கு மறுதலையான விளைவுகளைத் தரக் கூடியது.

காரணங்களும் பாதிப்புகளும்

மனித நடவடிக்கைகள் காரணமாக வளிமண்டலத்தில் சேரும் தூசிப்படலம் மற்றும் துகள்களின் அதிகரிப்பினால் குவலய மங்கலடைதல் ஏற்படுவதாக நம்பப்படுகின்றது. தூசிப்படலம் மற்றும் ஏனைய துகள்கள் சூரிய சக்தியை அகத்துறுஞ்சி வான்வெளிக்கு மீண்டும் தெறிப்படையச் செய்கின்றது. இந்த மாசாக்கிகள் முகில் நுண்துளிகளில் முகில் ஒடுக்கமுற்ற கருவாக அமைகின்றது. முகில்களில் உள்ள நீர்த்துளிகள் இத்துகள்களுடம் பிணைவு விசையல் இணைகின்றன. இவ்வாறு மாசாக்கம் அதிகரிக்கும் போது அதிகளவு துகள்கள் ஏற்படுவதால் அதிக எண்ணிக்கையான துளிகளாக மாறுகின்றது (அதாவது ஒரே அளவு நீர் அதிக துளிகளில் பரவிக் கணப்படுதல்). இந்த துளிகள் அதிகளவு சூரிய ஒளியைத் தெறிப்படையச் செய்வதால் புவியை வந்தடையும் ஒளியின் அளவு குறைவடைகின்றது. அதன் தாக்கம் காரணமாக சூரியக் கதிர்வீச்சும் கீழ் வளிமணடலத்தில் பிடிக்கப்படுகின்றது. மாதிரிகளில் இத்தகைய சிறு துளிகள் மூலம் கிடைக்கும் மழைவீழ்ச்சியும் குறைவாகும்.

முகில்கள் சூரியனிலிருந்து புவிக்கு வெப்பம் வன்தடைவதை தடுக்கும் அதே வேளை புவியிலிருந்து வெப்பம் கதிர்ப்பு மூலம் வெளியேறுவதையும் தடுக்கின்றது. இதன் தாக்கம் சிக்கலானதாகவும் நேரம், இடம், உயரம் என்பவற்றைப் பொறுத்து மாறுபடுவதாகவும் இருக்கும். பகல் நேரத்தில் சூரிய ஒளியைத் தடுத்து குளிர்ச்சியைத் தரும், இரவில் மீளக் கதிர்ப்படைந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுப்பதால் வெப்ப அதிகரிப்பு காரணமாக ஏற்படும் காற்றுச் சுழற்சி அதிக மழையால் வெள்ளம் ஏற்பட ஏதுவாகின்றது.

தட்டு ஆவியாதல் தரவு

கடந்த 50 ஆண்டுகளாக தட்டு ஆவியாதல் அவதானிக்கப்பட்டது. பல பதிம ஆண்டுகளாக தட்டு ஆவியாதல் அளவீடுகள் பற்றி யாரும் கருத்திலெடுக்கவில்லை.[சான்று தேவை]. ஆனால்1990களில் ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் வட அமெரிக்காவில் அறிவியலாளர்கள் பெரியதொரு மாற்றத்தைச் சுட்டிக் காட்டினர். அதாவது ஆவியாதல் வீதம் பூகோள வேப்பமடைதலுடன் அதிகரிப்பது எதிர்பார்க்கப்பட்ட அதே வேளை அதில் வீழ்ச்சி காணப்பட்டது. இதே காலப் பகுதியில் ஒத்த போக்குகள் சீனாவிலும் அவதானிக்கப்பட்டது. சூரிய கதிர்வீச்சு குறைவுபட்டமை ஒரு செலுத்து விசையாகக் காட்டப்பட்டது. ஆயினும் உலகின் மாற்றப் பகுதிகளைப் போலல்லாது சீனாவின் குறைந்த ஒளிவீச்சு முகில்களின் மூடல் அதிகரிப்புடனோ மழைவீச்சியுடனோ தொடர்பு படவில்லை. இதனால் வளிமண்டல தூசு சீனாவில் சூரிய ஒளியை குறைவுபடச் செய்வதில் முக்கிய ஏதுவாகப் பார்க்கப்பட்டது.பிபிசி கொறைசன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் டேவிட் சிங்டன் பல்வேறு கால நிலை மாற்றம் சார் அறிவியலாளார்கள் குவலய மங்கலடைதலில் தட்டு ஆவியாதல் தரவு ஒரு முக்கிய ஆதாரமாக நம்புகிறார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயேசு பேசிய மொழிமோசேதங்கர் பச்சான்பால்வினை நோய்கள்மக்களாட்சிசனீஸ்வரன்முடியரசன்வடிவேலு (நடிகர்)இரவு விடுதிதமிழ்நாடு அமைச்சரவைமண்ணீரல்பெயர்ச்சொல்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிவாழைப்பழம்சங்க இலக்கியம்ரஜினி முருகன்திருப்பாவைபுதுச்சேரிபுதிய ஏழு உலக அதிசயங்கள்குற்றியலுகரம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிநானும் ரௌடி தான் (திரைப்படம்)உயிர்மெய் எழுத்துகள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வரலாறுகட்டபொம்மன்இனியவை நாற்பதுஆனந்தம் விளையாடும் வீடுகார்லசு புச்திமோன்ஹாலே பெர்ரிசங்க காலம்வியாழன் (கோள்)நருடோபண்ணாரி மாரியம்மன் கோயில்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மீரா சோப்ராசிற்பி பாலசுப்ரமணியம்பரிபாடல்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுமகாபாரதம்இன்ஸ்ட்டாகிராம்சிங்கம்பதினெண்மேற்கணக்குடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இந்தியாஇறைமைவேதம்சுபாஷ் சந்திர போஸ்பரிதிமாற் கலைஞர்மாதவிடாய்ஜன கண மனசிவவாக்கியர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஹதீஸ்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தினகரன் (இந்தியா)துரைமுருகன்மரகத நாணயம் (திரைப்படம்)கட்டுவிரியன்காதல் கொண்டேன்அறுபது ஆண்டுகள்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)ராதிகா சரத்குமார்தட்டம்மைசடுகுடுவானிலைபங்குச்சந்தைஅல் அக்சா பள்ளிவாசல்ராதாரவிவி. சேதுராமன்ஆதலால் காதல் செய்வீர்அல்லாஹ்மாதேசுவரன் மலைகம்பராமாயணம்ஐங்குறுநூறு🡆 More