உடல் குண்டி

குண்டி (buttock) என்பது மனிதன் மற்றும் மனிதக் குரங்கு போன்ற விலங்குகளின் உடலில் பின் பகுதியில், முதுகுப் பகுதிக்குக் கீழாகவும், கால் தொடைப் பகுதிக்கு மேலாகவும் உருண்டையான, சதைப் பிடிப்புடன் காணப்படும் உறுப்புக்கான தமிழ்ச் சொல்லாகும்.

தமிழிலும் பிற திராவிட மொழிகளான கன்னடம் மலையாளத்திலும் குண்டி என்னும் சொல் பள்ளமான பகுதியைக் குறிக்கும். குறிப்பாக, வாயகன்ற பாத்திரம் (இதனைக் குண்டா, குண்டான் என்றும் சொல்வர்), பழங்களில் காம்புள்ள பகுதியில் குழிந்து இருக்கும் பக்கம் (எ.கா. ஆப்பிள், மாம்பழம்) முதலியவற்றைக் குண்டி என்று சொல்வதுண்டு.

குண்டி
உடல் குண்டி
ஓர் பெண்ணின் குண்டியும் (மேல்) ஆணின் குண்டியும் (கீழ்).
தமனி superior gluteal artery, inferior gluteal artery
நரம்பு superior gluteal nerve, inferior gluteal nerve, cluneal nerves
ம.பா.தலைப்பு Buttocks

இலங்கை முஸ்லீம்களின் பேச்சு வழக்கில்

குண்டி எனும் தமிழ் சொல் மனித உடலின் பின்னுறுப்பை குறிக்க பயன்படும் அதேவேளை, இலங்கை முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் குண்டி எனும் சொல் பெண்களின் பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தபடுகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் குண்டி எனும் சொல்லுடன் தொடர்புடைய பல சொல்லாடல்கள், நகைச்சுவைக் கதைகள் உள்ளன.

"குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவ மறுப்பது போன்று", "குளத்தோடு கோபித்துக்கொண்டு குண்டி கழுவ மறுப்பவன் போன்று" எனும் சொல்லாடல்கள் காரணமற்று கோபம் கொள்வதனையும், கோபம் கொண்டவரின் கோபம் பொருளற்றது என்பதை இடித்துரைக்கும் வகையிலும் இச்சொல்லாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அடிக்கடி பயன்படுவதுண்டு. சிலவேளை இச்சொல்லாடல்கள் நகைச்சுவையாக சொல்லப்படுவதும் உண்டு.

நகைச்சுவைக் கதை

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு வண்டில் கட்டி பலநாள் நீண்டநாள் பயணமாக பயணித்த கால கட்டத்தில் "அதுவல்லோ குண்டி, இதுவென்ன குண்டி" என காலைக் கடன் முடிக்க சிரமப்பட்ட ஒரு பக்தர், தனது குண்டியை தானே நொந்துகொண்ட நகைச்சுவைக் கதையொன்றும் உண்டு.

பழமொழி

எது கிடைத்தாலும் மிகுதியாகப் பயன்படுத்துபவரைக் குறிக்க, சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தடவுவான் என்பர்.

இலக்கியப் பயன்பாட்டில்

தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக பெண்களின் இடையின் கீழான பகுதியை "பின்னழகு" என வர்ணனை செய்தெழுதும் வழக்கு பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது.

ஒத்தக்கருத்துச் சொற்கள்

குண்டி என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தும் பிற சொற்களும் அவற்றின் பயன்பாடும்:

  • பின்னழகு - இது பொதுவாக குண்டியை நகைச்சுவையாக குறிப்பிடும் பொழுது பயன்படுத்தப் படுகிறது.
  • சூத்து - தகாத வார்த்தை. பொது இடங்களில் இந்த வார்த்தை பயன்பாட்டை தவிர்க்கவும்.
  • பின் பக்கம் - இது ஒரு இடக்கர் அடக்கல் பயன்பாடாகும். குண்டி என்று நேரடியாக கூறத் தயங்குபவர்கள் இந்த வார்த்தையை பயன் படுத்துவர்.

நாகரிகம்

குண்டி என்பது ஆபாசமில்லாத ஒரு உறுப்பு என்றாலும் நவீன நாகரிகம் இதைப் பெரும்பாலும் மறைக்கவே சொல்லுகிறது. தற்பொழுதுள்ள அனைத்து வகைத் துணிகளும் குண்டியை மறைத்தே வைக்கிறது. இருப்பினும், குண்டி வெளியே தெரியும் ஆடைகள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது (கோவணம் போன்றவை). ஆனால், மக்கள் பொதுவாகக் கூடும் இடங்களில் இவற்றை யாரும் உடுத்துவதில்லை.

மேற்கோள்கள்

Tags:

உடல் குண்டி இலங்கை முஸ்லீம்களின் பேச்சு வழக்கில்உடல் குண்டி யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்உடல் குண்டி பழமொழிஉடல் குண்டி இலக்கியப் பயன்பாட்டில்உடல் குண்டி ஒத்தக்கருத்துச் சொற்கள்உடல் குண்டி நாகரிகம்உடல் குண்டி மேற்கோள்கள்உடல் குண்டிதமிழ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வணிகம்கிராம நத்தம் (நிலம்)பகத் பாசில்மூவேந்தர்வளைகாப்புமு. வரதராசன்வெந்து தணிந்தது காடுஆசாரக்கோவைஇளங்கோவடிகள்கொல்லி மலைபிள்ளையார்மாநிலங்களவைவைதேகி காத்திருந்தாள்குறிஞ்சிப் பாட்டுபலாவிஜய் வர்மாதிருப்பதிஇரண்டாம் உலகப் போர்படையப்பாரஜினி முருகன்காயத்ரி மந்திரம்வட்டாட்சியர்குலசேகர ஆழ்வார்இன்னா நாற்பதுஆல்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பிள்ளைத்தமிழ்மோகன்தாசு கரம்சந்த் காந்திஐங்குறுநூறுபயில்வான் ரங்கநாதன்முகம்மது நபிசமுத்திரக்கனிபாலை (திணை)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தேவநேயப் பாவாணர்குற்றாலக் குறவஞ்சிகருப்பைபுறநானூறுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்ஆந்திரப் பிரதேசம்திருப்பூர் குமரன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிதொடை (யாப்பிலக்கணம்)தமிழ்விடு தூதுஅண்ணாமலையார் கோயில்சுற்றுலாஆறுதமிழ்நாடு காவல்துறைஅக்பர்மஞ்சும்மல் பாய்ஸ்பீப்பாய்மதீச பத்திரனஅத்தி (தாவரம்)தொல். திருமாவளவன்ஆனைக்கொய்யாமாத்திரை (தமிழ் இலக்கணம்)சிந்துவெளி நாகரிகம்வெண்பாகார்த்திக் (தமிழ் நடிகர்)வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய நாடாளுமன்றம்மதுரைஅயோத்தி தாசர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்முதுமலை தேசியப் பூங்காஇந்திய அரசியலமைப்புஅனுஷம் (பஞ்சாங்கம்)போதைப்பொருள்பெண் தமிழ்ப் பெயர்கள்ஊராட்சி ஒன்றியம்நுரையீரல் அழற்சிமுத்தொள்ளாயிரம்ஸ்ரீஆதிமந்தி🡆 More