கீத கோவிந்தம்

கீத கோவிந்தம் (சமஸ்கிருதம்: गीत गोविन्द) (கோபியர் பாடல்) பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

இதனை பொ.ஊ. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.

இதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, நாட்டியங்களிலும் மற்றும் இசை அரங்குகளிலும் இன்றளவும் மிகவும் பிரபலம்.

1792 இல், சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதல்முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இலட்சணம்

கீத கோவிந்தம் 
பால கிருஷ்ணருடன் கோபியர்கள்
கீத கோவிந்தம் 
பால கிருஷ்ணருடன் ராசலீலையில் ஈடுபடும் ராதையும் கோபியர்களும்
  • ராதை, கிருஷ்ணன், சகி ஆகிய மூவரே இக்காவியத்தின் கதாபாத்திரங்கள்.
  • பல விருத்தங்களால் அமைந்து சுலோகங்களால் இக்காவியம் ஆரம்பிக்கின்றது.
  • பல இராகங்களிலும், தாளங்களிலும் வெகு அழகாய் இயற்றப்பட்டுச் சொற்சுவை, பொருட்சுவை ததும்பும் 24 கீர்த்தனைகளே இக்காவியத்தின் முக்கிய பாகமாகும். அழகான சுலோகங்கள் நடுவிலும், முடிவிலும் காணப்படுகின்றன.
  • ஒவ்வொரு கீர்த்தனத்திலும் 8 சரணங்கள் உள்ளன. (இதனால் இது இருப்பதால் அஷ்டபதி எனப் பெயர் பெற்றது).
  • கருணை, வீரம், சாந்தி முதலிய ஒன்பது ரசங்களில் மனோகரமான, மனதுக்கு இரம்மியமான சிருங்கார ரசத்தையே பிரதானமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது வெளிப்பொருளாக சிற்றின்பமே வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பொருளை நோக்கின் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாவாகவும், ஞான குருவாகவும் கொண்டு, ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடைய முயலும் நிலையை விளக்கிக் காட்டுவது தெரிகின்றது.

அஷ்டபதியின் தனிப்பெருமை

இந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் முந்தியதென்று வழங்கும் சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரத்துக்கும் ஏறக்குறைய 200 வருடங்கள்க்கு முந்திய சங்கீத முறையை அஷ்டபதி விளக்குகின்றது. எனவே தென்னிந்தியாவும், வட இந்தியாவும் அடங்கியுள்ள பாரத நாட்டின் வெகு புராதன இசைநூல் இதுவாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

இங்கே ஆங்கில மொழியாக்கமும், அதன் விரிவுரையும் மின்னூல் வடிவில் கிடைக்கிறது பரணிடப்பட்டது 2007-03-08 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

Tags:

கீத கோவிந்தம் இலட்சணம்கீத கோவிந்தம் அஷ்டபதியின் தனிப்பெருமைகீத கோவிந்தம் இவற்றையும் பார்க்கவும்கீத கோவிந்தம் வெளி இணைப்புகள்கீத கோவிந்தம் மேற்கோள்கள்கீத கோவிந்தம்சமஸ்கிருதம்ஜெயதேவர்பொது ஊழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

டார்வினியவாதம்நெடுநல்வாடைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகல்லீரல் இழைநார் வளர்ச்சிஅழகர் கோவில்திருநெல்வேலிஅக்பர்சுக்ராச்சாரியார்மகாபாரதம்முதலாம் இராஜராஜ சோழன்ஐஞ்சிறு காப்பியங்கள்திருவிளையாடல் புராணம்சரத்குமார்ஒற்றைத் தலைவலிபீப்பாய்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)108 வைணவத் திருத்தலங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ரயத்துவாரி நிலவரி முறைசுலைமான் நபிநான் அவனில்லை (2007 திரைப்படம்)ஆற்றுப்படைகிருட்டிணன்சின்னம்மைதாய்ப்பாலூட்டல்நீலகிரி மக்களவைத் தொகுதிஐக்கிய நாடுகள் அவைவே. செந்தில்பாலாஜிஇயேசுவின் சாவுமலக்குகள்திருவாரூர் தியாகராஜர் கோயில்திருப்பதிஅரவிந்த் கெஜ்ரிவால்சஞ்சு சாம்சன்முத்துராமலிங்கத் தேவர்நெசவுத் தொழில்நுட்பம்இயேசு பேசிய மொழிகுண்டலகேசிபுரோஜெஸ்டிரோன்மக்களவை (இந்தியா)திரு. வி. கலியாணசுந்தரனார்நாலடியார்ஆழ்வார்கள்விடுதலை பகுதி 1ஐராவதேசுவரர் கோயில்சுரதாநயினார் நாகேந்திரன்தென்னாப்பிரிக்காஉரிச்சொல்லோ. முருகன்நிர்மலா சீதாராமன்தங்கம்வ. உ. சிதம்பரம்பிள்ளைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நருடோசுற்றுச்சூழல்கணியன் பூங்குன்றனார்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)எஸ். ஜானகிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வெ. இராமலிங்கம் பிள்ளைகோயம்புத்தூர் மாவட்டம்சூரியக் குடும்பம்பத்துப்பாட்டுநாட்டார் பாடல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உவமையணிசிவவாக்கியர்முத்தரையர்நுரையீரல் அழற்சிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமதயானைக் கூட்டம்பால்வினை நோய்கள்மீன்மருதமலை முருகன் கோயில்தமிழர் நெசவுக்கலை🡆 More