கிர்ரான் கெர்

கிர்ரான் கெர் (Kirron Kher), எனப்படும் கிர்ரான் அனுபம் கெர் ( கிரண் அல்லது, கிரோன் எனவும் அழைக்கப்படுகிறார்.) ஜூன் 14, 1955இல் பிறந்த ஒரு இந்திய நாடக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

மேலும், இவர் ஒரு தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். மே 2014 இல், சண்டிகரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிர்ரான் கெர்
கிர்ரான் கெர்

குடும்பம்

கிர்ரான் கெர், ஜூன் 14, 1955 அன்று ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். சண்டிகரில் வளர்ந்தார். அவரது பெற்றோரால் அவருக்கு 'கிரண்' என்று பெயரிடப்பட்டது. மற்றும் அவரது முழு பெயர் 'கிரண் தாக்கர் சிங்' என்பதாகும். கௌதம் பெர்ரியுடனான முதல் திருமணத்தின் போது, அவர் 'கிரண் பெர்ரி' என்று அழைக்கப்பட்டார். அவர் அனுபம் கெர் ஐ மணந்தபோது, அவர் தனது முதல் பெயரை மீண்டும் பயன்படுத்த தொடங்கினார். மேலும் தனது சமீபத்திய கணவரின் குடும்பப் பெயரையும் சேர்த்தார். இதனால் அவரது பெயர் 'கிரண் தாக்கர் சிங் கெர்' என்று அறியப்பட்டது. பிற்கால வாழ்க்கையில், அவர் எண் கணிதத்தில் உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். மேலும் 2003 ஆம் ஆண்டில் தனது 48வது வயதில், அவர் தனது பெயரை "கிரண்" என்பதிலிருந்து "கிர்ரான்" என்று எண்ணியல் கணக்கீடுகளின் அடிப்படையில் மாற்றினார். அதனால் தனது முதல் பெயர்களை பயன்படுத்தாமல் 'கிர்ரான் கெர்' என அறியப்பட்டார்.

கிர்ரானுக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது சகோதரர், கலைஞர் அமர்தீப் சிங், 2003 இல் இறந்தார். அவரது சகோதரிகளில் ஒருவர், அர்ஜுனா விருது வென்ற பேட்மிண்டன் வீரர் கன்வால் தாக்கர் கவுர் ஆவார். அவரது மற்றொரு சகோதரி, ஷரஞ்சித் கவுர் சந்து, இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியின் மனைவி ஆவார்.

திருமணங்கள்

கிர்ரான் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பள்ளிக்குச் சென்றார். சண்டிகரில் பள்ளி கல்வியை முடித்தார், பின்னர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இந்திய நாடகத் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் கௌதம் பெர்ரியை 1979 மார்ச் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு ஒரு மகன், சிக்கந்தர் கெர் பிறந்தார்.

மும்பையில், திரைத்துறையில் கால் பதிக்க கிரண் 1980 களில் முயன்றார். ஆனால் வெற்றி பெறவில்லை. திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, தயாரிப்பாளர்களை அணுகும்போது, கிர்ரான் அனுபம் கெர் உடனான தனது அறிமுகத்தை புதுப்பித்தார். அவரும் இதேபோல் திரைப்படத்தில் நடிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். மேலும், சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, அனுபம் கெர், கிர்ரான் கெர்ருக்கு தெரிந்தவர். அதனால், இருவரும் ஒன்றாக திரை அரங்கு வட்டங்களில் வாய்ப்புத் தேடி, சந்த்புரி கி சம்பபாய் என்ற நாடகத்தில் ஒன்றாக வேலை செய்தனர். 1985 ஆம் ஆண்டில், சாரன்ஷுடனான படங்களில் அனுபம் கெர், ஒரு இடைவெளியைப் பெற்ற பிறகு, கிர்ரான் தனது கணவரை விவாகரத்து செய்தார்.

தொழில்

கிர்ரான் கெர் 1983 ஆம் ஆண்டில் பஞ்சாபி திரைப்படமான ஆஸ்ரா பியார் டா திரைப்படத்தில் அறிமுகமானார். இதற்குப் பிறகு, அவர் 1996 வரை படங்களில் இருந்து இடைவெளி எடுத்தார். 1983 மற்றும் 1996 க்கு இடையில், அவர் பெஸ்டன்ஜி (1987) என்ற ஒரு படத்தில் தோன்றினார். அதில் அவர் தனது இரண்டாவது கணவர் அனுபம் கெருடன் இணைந்து ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

1990 களின் நடுப்பகுதியில், திரை அரங்கு மூலம், நாடக ஆசிரியர் ஜாவேத் சித்திகி எழுதிய ஃபெரோஸ் அப்பாஸ் கான் இயக்கிய சல்கிரா நாடகத்துடன் அவர் நடிப்புக்கு திரும்பினார். ஜீ தொலைக்காட்சியில் குறுகிய கால புருஷ்கேத்ராவுடன் தொடங்கி மூன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கினார், இது முதல் முறையாக மாற்று பாலியல் பற்றிய விவாதத்தை வெளிக்கொணர்வதில் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் பெண்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டுகிறது. கிரண் கெர் டுடே மற்றும் ஜக்தே ரஹோ, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் கிரோன் கெர் தொகுத்து வழங்கினார்.

அவரது மறுபிரவேச திரைப்படம் ஷியாம் பெனகலின், சர்தாரி பேகம் (1996) ஆகும். இது 1997 தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை வென்றது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

கிர்ரான் கெர் குடும்பம்கிர்ரான் கெர் தொழில்கிர்ரான் கெர் குறிப்புகள்கிர்ரான் கெர் வெளி இணைப்புகள்கிர்ரான் கெர்இந்திய நாடாளுமன்றம்சண்டிகர் மக்களவை உறுப்பினர்பாரதிய ஜனதா கட்சிமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிசு கெட்கரகாட்டம்போதைப்பொருள்முல்லைக்கலிசிறுகதைமங்கலதேவி கண்ணகி கோவில்சித்திரகுப்தர் கோயில்தமிழக வரலாறுசன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆண்டு வட்டம் அட்டவணைநவரத்தினங்கள்வன்னியர்மதுரைதனுஷ்கோடிஉயிர்மெய் எழுத்துகள்விலங்குஆற்றுப்படைகொடைக்கானல்இந்திய தேசிய சின்னங்கள்இந்திரா காந்திவேளாண்மைபத்து தலஅரண்மனை (திரைப்படம்)இந்தியன் பிரீமியர் லீக்சிவாஜி (பேரரசர்)திருநங்கைகரிகால் சோழன்வாட்சப்தொடை (யாப்பிலக்கணம்)விசயகாந்துஆந்திரப் பிரதேசம்மியா காலிஃபாகுறுந்தொகைமதராசபட்டினம் (திரைப்படம்)தசாவதாரம் (இந்து சமயம்)செம்மொழிமுத்துராஜாபுணர்ச்சி (இலக்கணம்)இராமாயணம்பசுமைப் புரட்சிஅஸ்ஸலாமு அலைக்கும்ஜெ. ஜெயலலிதாபஞ்சாயத்து ராஜ் சட்டம்சீரகம்உ. வே. சாமிநாதையர்தொல். திருமாவளவன்மத கஜ ராஜாசிற்பி பாலசுப்ரமணியம்அபினிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பிள்ளைத்தமிழ்அழகர் கோவில்நீக்ரோகுற்றியலுகரம்அங்குலம்கங்கைகொண்ட சோழபுரம்நுரையீரல் அழற்சிஉரிச்சொல்முடிதிரிசாதிருவாசகம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நம்மாழ்வார் (ஆழ்வார்)சரத்குமார்மழைநீர் சேகரிப்புகொல்லி மலைகமல்ஹாசன்கர்மாவிருமாண்டிசங்க காலப் புலவர்கள்அறுசுவைஐக்கிய நாடுகள் அவைஇராமர்கலைநுரையீரல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுவிநாயகர் அகவல்திருமலை நாயக்கர்சோழர்கால ஆட்சி🡆 More