ஒக்டாவியோ பாஸ்

ஒக்டாவியோ பாஸ் (Octavio Paz Lozano; 31 மார்ச்சு 1914-ஏப்பிரல் 19, 1998) என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற ஓர் இலக்கியவாதி ஆவார்.

இவர் கவிஞர், எழுத்தாளர், நூலாசிரியர், தூதுவர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

இளமைக்காலம்

ஒக்டாவியோவின் தாத்தா ஓர் எழுத்தாளராக இருந்த காரணத்தால் அவருடைய நூலகம் இவருக்குப் பயன்பட்டது. அந் நூலகத்தில் இருந்த நூல்களை எடுத்துப் படித்ததால் ஐரோப்பிய இலக்கியங்களையும் மேக்சிகோ நாட்டு இலக்கியங்களையும் பற்றி அறிய வாய்ப்புக் கிட்டியது. பள்ளியில் சட்டக் கல்வியைப் பயின்றார். பின்னர் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

எழுத்துப்பணி

டி. எச். லாரன்சு எழுதிய நூல்கள் இவரைக் கவர்ந்தன. 1950 இல் 'தி லேபிரிந்த் ஆப் சாலிட்யூட்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இது சுபானிசு மொழியில் எழுதப்பட்ட புகழ் பெற்ற நூல் ஆகும்.மெக்சிகோவின் நாகரிகம், பண்பாடு, வரலாறு, அந்நாட்டு மக்களின் உளவியல் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக இந்த நூலில் எழுதினார். ஒக்டாவியோ தம் கவிதைகளை அமெரிக்கக் கவிஞரான டி எஸ் எலியட் பாணியில் எழுதினார் என்பது குறிக்கத்தக்கது. தனியாக இலக்கிய இதழ்களை நடத்தி வந்த ஒக்டாவியோ பாஸ் சனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வந்தார்.

தூதர் பணி

இந்தியாவுக்கான மெக்சிகோ தூதராகப் பணியாற்றினார். அச்சமயம் 1968 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மெக்சிகோ அரசு தம் இராணுவம் கொண்டு சுட்டுக் கொன்றது. எனவே மெக்சிகோ அரசின் அடக்குமுறையைக் கண்டித்து ஒக்டாவியோ தம் பதவியைத் துறந்தார். 1970 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியை ஏற்றார். நான்கு ஆண்டுகள் அப்பதவியில் இருந்து பணியாற்றினார்.

விருதுகள்

இவருடைய இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1990 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றார். பல நாடுகளுக்கும் பயணம் செய்தார்.

மேற்கோள்

http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/1990/paz-bio.html

http://www.poets.org/poetsorg/poet/octavio-paz

Tags:

ஒக்டாவியோ பாஸ் இளமைக்காலம்ஒக்டாவியோ பாஸ் எழுத்துப்பணிஒக்டாவியோ பாஸ் தூதர் பணிஒக்டாவியோ பாஸ் விருதுகள்ஒக்டாவியோ பாஸ் மேற்கோள்ஒக்டாவியோ பாஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்கர் குருஸஹீஹ் முஸ்லிம் (நூல்)மு. கருணாநிதிகால்-கை வலிப்புஇராமர்மலேசியாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முத்தரையர்சேவல் சண்டைதிராவிட மொழிக் குடும்பம்உமறுப் புலவர்அரபு மொழிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முல்லைப்பாட்டுகுண்டலகேசிதூதுவளைசிறுநீரகம்அன்புதிதி, பஞ்சாங்கம்பொன்னியின் செல்வன் 1திருவிளையாடல் புராணம்நந்திக் கலம்பகம்ராதிகா சரத்குமார்மொழிபெயர்ப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்நேச நாயனார்உ. சகாயம்நாய்பஞ்சாங்கம்மிருதன் (திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்பரதநாட்டியம்சங்கம் (முச்சங்கம்)மகாபாரதம்கீழடி அகழாய்வு மையம்வட சென்னை (திரைப்படம்)நாயன்மார்ரமலான்அன்னை தெரேசாமுகம்மது இசுமாயில்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956வராகிகட்டற்ற மென்பொருள்பாக்யராஜ்வெ. இராமலிங்கம் பிள்ளையூத்நெகிழிபேரிடர் மேலாண்மைகடையெழு வள்ளல்கள்வாலி (கவிஞர்)சிலப்பதிகாரம்கார்லசு புச்திமோன்அன்னி பெசண்ட்குடலிறக்கம்வியாழன் (கோள்)பஞ்சபூதத் தலங்கள்பொருளாதாரம்பார்க்கவகுலம்ஆந்திரப் பிரதேசம்அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்வெள்ளி (கோள்)போக்குவரத்துபணம்திரைப்படம்மேகாலயாதமிழ் படம் (திரைப்படம்)கருக்கலைப்புமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்மணிமேகலை (காப்பியம்)நேர்காணல்தேசிக விநாயகம் பிள்ளைதிரு. வி. கலியாணசுந்தரனார்மலக்குகள்யாதவர்சிறுதானியம்தொழுகை (இசுலாம்)உளவியல்🡆 More