ஏஞ்சலா லேன்சுபரி

டேம் ஏஞ்சலா பிரிஜித் லேன்ச்பியூரி (Dame Angela Brigid Lansbury (பிறப்பு அக்டோபர் 16, 1925) என்பவர் அமெரிக்க ஐக்கிய நாடு - அயர்லாந்து நடிகை ஆவார்.

இவர் திரைப்படம், தொலைக்காட்சி நாடகத் தொடர், நாடகத் திரைப்படம் போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர் (திரைப்படம்), பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் ஏழு தசாப்தங்களாக நடித்துக்கொண்டிருந்தார். இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்கத் திரைப்படங்களாகும். இவரின் நடிப்பிற்காக சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.

டேம்
ஏஞ்சலா லேன்ஸ்பியூரி
ஏஞ்சலா லேன்சுபரி
2013 இல் லேன்ஸ் பியூரி
பிறப்புஎஞ்சலா பிரிகித் லேன்ச்பியூரி
16 அக்டோபர் 1925 (1925-10-16) (அகவை 98)
ரீஜென்ட்ஸ் பார்க், இலண்டன், இங்கிலாந்து
தேசியம்அமெரிக்கர், ஐரிஸ் (multiple citizenship)
பணிநடிகை, எழுத்தாளர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1943–தற்போது வரை
பெற்றோர்எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு அரசியல்வாதி
மொயானா மக்கி நடிகை
வாழ்க்கைத்
துணை
ரிச்சர்டு கிராம் வெல் நடிகர்
(தி. 1945; திருமணமுறிவு 1946)

பீட்டர் ஷா (தயாரிப்பாளர்)
(தி. 1949; இற. 2003)
பிள்ளைகள்அந்தோணி பீட்டர் ஷா
அன் ஷா

இவர் மத்திய இலண்டனில் உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு அரசியல்வாதி ஆவார். இவரின் தாய் மொயான மக்கில் அயர்லாந்தைச் சேர்ந்த நடிகை ஆவார். தி பிளிட்ஸ்சில் இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். பின் நியூயார்க் நகரத்தில் நடிப்பு பயின்றார். 1942 ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் 1944 ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் 1945 இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. 1950களில் குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். 1962 இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.

ஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் கலிபோர்னியாவில் இருந்து அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு 1970 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் நாடகத் திரைப்படம் மற்றும் திரைப்படம் போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். 1971 ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்பும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் நடித்தார். புதின எழுத்தாளராக சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரானது 1984 முதல் 1996 ஆண்டு வரையில் 12 பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பான குற்ற நாடகத் தொடர் எனும் சாதனை படைத்தது. 1991 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பியூட்டி அண்ட் பீஸ்ட் எனும் இயங்குபடத்தில் பின்னணிக் குரல் கொடுத்தார்.

சான்றுகள்

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏஞ்சலா லேன்சுபரி

Tags:

1925அக்டோபர் 16அமெரிக்க ஐக்கிய நாடுஅயர்லாந்துதயாரிப்பாளர் (திரைப்படம்)திரைப்படம்தொலைக்காட்சி நாடகத் தொடர்நடிகைநாடகத் திரைப்படம்பின்னணிப் பாடகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குமரகுருபரர்இலிங்கம்காமராசர்சனீஸ்வரன்மயங்கொலிச் சொற்கள்மனித மூளைபெண்சாத்தான்குளம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கரிகால் சோழன்சங்க காலம்ஹாலே பெர்ரிமரியாள் (இயேசுவின் தாய்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஆண் தமிழ்ப் பெயர்கள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உரைநடைகணினிமுலாம் பழம்மதயானைக் கூட்டம்ஆண்டாள்ஆய்த எழுத்து (திரைப்படம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஸ்ரீபிரேசில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஐ (திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்மக்களவை (இந்தியா)பாசிப் பயறுமுடியரசன்பாரதிதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்திருப்போரூர் கந்தசாமி கோயில்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)தமிழ்நாடு சட்டப் பேரவைமுக்கூடற் பள்ளுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சுக்ராச்சாரியார்மங்கோலியாஊராட்சி ஒன்றியம்மறைமலை அடிகள்தேவாரம்சத்குருசட் யிபிடிகோயில்தைப்பொங்கல்தெலுங்கு மொழிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்தண்டியலங்காரம்பாரிதன்னுடல் தாக்குநோய்அறுசுவைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஔவையார் (சங்ககாலப் புலவர்)முத்துராஜாசிதம்பரம் நடராசர் கோயில்கொன்றை வேந்தன்சென்னைபண்ணாரி மாரியம்மன் கோயில்நன்னீர்கருத்தரிப்புவெ. இராமலிங்கம் பிள்ளைசித்தார்த்கட்டுவிரியன்வீரமாமுனிவர்குமரி அனந்தன்ஜெயகாந்தன்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிசூர்யா (நடிகர்)சீமான் (அரசியல்வாதி)பதிற்றுப்பத்துரோபோ சங்கர்கல்லீரல்எயிட்சுமு. கருணாநிதிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மு. வரதராசன்🡆 More