உசா மேத்தா

உசா மேத்தா (Usha Mehta, மார்ச்சு 25, 1920-ஆகத்து 11, 2000) இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஆவார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலகட்டத்தின் போது இரகசிய வானொலியை நிறுவி விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளையும் ஒலி பரப்பினார்.

உசா மேத்தா
உசா மேத்தா
உசா மேத்தா (1996)
பிறப்பு25 மார்ச்சு 1920
குசராத்து
இறப்பு11 ஆகத்து 2000 (அகவை 80)
புது தில்லி
படிப்புமுனைவர் பட்டம்
படித்த இடங்கள்
  • வில்சன் கல்லூரி, மும்பை
பணிகல்வியாளர், செயற்பாட்டாளர்
வேலை வழங்குபவர்
விருதுகள்பத்ம விபூசண்

பிறப்பும் படிப்பும்

உசா மேத்தா குசராத்து மாநிலத்தில் சூரத் மாவட்டத்தில் சரசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு நீதிபதி ஆவார். உசா மேத்தா மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் இளங்கலை தத்துவக் கல்வியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். சட்டம் படிப்பதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பிற்காலத்தில் ஆய்வுப் பட்டம் பெற்று பேராசிரியாகப் பணி புரிந்தார்.

விடுதலைப் போராட்டப் பணிகள்

  • பள்ளியில் பயிலும்போதே அகமதாபாத்தில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்திய நெறியில் நாட்டம் கொண்டார். காந்தி தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
  • 8 அகவைச் சிறுமியாக இருந்தபோதே சைமன் குழுவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
  • கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார்.
  • தம் வாணாள் முழுவதும் கதர்ப் புடைவை மட்டுமே உடுத்தி வந்தார்.
  • 1942 இல் கவாலியா டாங்க் மைதானத்தில் காங்கிரசுக் கொடியை ஏற்றினார்.

இரகசிய வானொலி

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டவும் போராட்டம் தொடர்பான செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் காங்கிரசு ரேடியோ அல்லது இரகசிய ரேடியோவை உசா மேத்தா தொடங்கினார். இதனால் வெள்ளை அரசின் உளவுத் துறையும் காவல் துறையும் உசா மேத்தாவைக் கண்காணித்தது. எரவாடாச் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்பத்திற்கு ஆளானார். இதனால் இரகசிய வானொலி மூன்று மாதகாலம் மட்டுமே இயங்கியது. அவரைச் சிறையில் அடைத்த பிரிட்டிசு அதிகாரிகள் உசா மேத்தாவுடன் போராடிய தோழர்களின் விவரங்களைத் தெரிவிக்கக் கட்டாயப் படுத்தினர். ஆனால் உசா மேத்தா அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. இறுதியாக 1946 ஆம் ஆண்டில் அரசு அவரை விடுதலை செய்தது.

விருது

1998 இல் உசா மேத்தாவின் தொண்டுகளைக் கௌரவித்துப் இந்திய அரசால், பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

உசா மேத்தா பிறப்பும் படிப்பும்உசா மேத்தா விடுதலைப் போராட்டப் பணிகள்உசா மேத்தா இரகசிய வானொலிஉசா மேத்தா விருதுஉசா மேத்தா மேற்கோள்கள்உசா மேத்தாஇந்திய விடுதலை இயக்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மத கஜ ராஜாஆய்த எழுத்து (திரைப்படம்)கிராம சபைக் கூட்டம்ரஜினி முருகன்ஏப்ரல் 30அத்தி (தாவரம்)பெட்டிஇந்திய அரசியல் கட்சிகள்தமிழ் தேசம் (திரைப்படம்)கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்புனித யோசேப்புஅயோத்தி இராமர் கோயில்ந. பிச்சமூர்த்திஜன கண மனபயில்வான் ரங்கநாதன்உயிர்மெய் எழுத்துகள்கம்பராமாயணம்முரசொலி மாறன்சுய இன்பம்வானிலைஇன்று நேற்று நாளைமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்முத்தரையர்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)பிரசாந்த்சங்கம் (முச்சங்கம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பூவெல்லாம் உன் வாசம்ர. பிரக்ஞானந்தாரோகித் சர்மாசூரியக் குடும்பம்குறிஞ்சி (திணை)அகரவரிசைபில் சோல்ட்ஞானபீட விருதுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சமந்தா ருத் பிரபுமண்ணீரல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுனில் நரைன்கில்லி (திரைப்படம்)காம சூத்திரம்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்ஒளிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருவாசகம்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்இரட்டைக்கிளவிதொல். திருமாவளவன்புதுக்கவிதைகம்பர்சிலேடைதமிழ்நாட்டின் நகராட்சிகள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுயானையின் தமிழ்ப்பெயர்கள்தேவாங்குஏக்கர்பணவியல் கொள்கைஅன்னி பெசண்ட்இந்திய மக்களவைத் தொகுதிகள்முக்கூடல்கள்ளழகர் கோயில், மதுரைநாயக்கர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்கட்டுரைதமிழ் இலக்கியப் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காதல் தேசம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முத்தொள்ளாயிரம்நீலகேசிவல்லினம் மிகும் இடங்கள்பிரியா பவானி சங்கர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆந்திரப் பிரதேசம்மருது பாண்டியர்மதுரைக்காஞ்சிஉயர் இரத்த அழுத்தம்சேரன் செங்குட்டுவன்🡆 More