இலைலா பகலவி: ஈரானின் இளவரசி

இலைலா பகலவி ( Leila Pahlavi ) ( 27 மார்ச் 1970 - 10 ஜூன் 2001) ஈரானின் இளவரசியும் மற்றும் பகலவி வம்சத்தைச் சேர்ந்த ஈரானின் ஷா முகமது ரிசா பகலவியின் மூன்றாவது மனைவி பரா பகலவிவியின் இளைய மகளும் ஆவார்.

இலைலா பகலவி
பிறப்புபாத்திமா பகலவி
(1970-03-27)27 மார்ச்சு 1970
தெகுரான், ஈரான் ஏகாதிபத்திய அரசு
இறப்பு10 சூன் 2001(2001-06-10) (அகவை 31)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
புதைத்த இடம்16 ஜூன் 2001
பாசி கல்லறை, பாரிசு, பிரான்சு
மரபுபகலவி
தந்தைமுகம்மத் ரிசா ஷா பஹ்லவி
தாய்பரா பகலவி

ஆரம்ப கால வாழ்க்கை

லைலா பகலவி, 27 மார்ச் 1970 அன்று ஈரானின் தெகுரானில் பிறந்தார். இவர் ஷா முகமது ரிசா பகலவி மற்றும் பேரரசி பரா பகலவிவியின் நான்காவது மற்றும் இளைய மகளாவார். இவருக்கு மேலும் இரண்டு மூத்த சகோதரர்களும், ஒரு மூத்த சகோதரியும் ஒரு ஒன்றுவிட்ட ஒரு மூத்த சகோதரியும் இருந்தனர்.

நாடுகடத்தப்பட்ட நிலையில்

1979 இல் ஈரானியப் புரட்சியின் விளைவாக இவரது குடும்பம் நாடுகடத்தப்பட்டபோது லைலா பகலவிக்கு ஒன்பது வயது. 1980 இல் குருதிப் புற்றுநோய் காரணமாக இவரது தந்தை எகிப்தில் இறந்ததையடுத்து குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. இவர் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் பள்ளியில் பயின்றார். பின்னர், 1988 இல் ரை கன்ட்ரி டே பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் பாரசீகம், ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு உட்பட எசுப்பானியம் மற்றும் இத்தாலிய மொழிகளையும் சரளமாக பேசினார். கிரீன்விச்சின், கனெக்டிகட் மற்றும் பாரிசிலுள்ள தனது தாயார் வசிக்கும் வீட்டிற்கு இடையே இவர் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார்.

இலைலா பகலவி பிரௌன் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் தத்துவத்தைப் படித்தார். இவர், 1992 இல் பட்டம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர் உடல்நலக்குறைவு காரணமாக பட்டப்படிப்புக்கு முன்பே பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதாக இருப்பினும் சில ஆதாரங்கள் தெரிவிக்கிறது. இவர் ஆடை வடிவமைப்பாளர் வாலண்டினோவுக்கு ஒரு காலத்தில் வடிவழகியாக இருந்தார். மேலும் பசியின்மை நெர்வோசா, நாள்பட்ட குறைந்த சுயமரியாதை, கடுமையான பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு மற்றும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி ஆகியவற்றால் அவதிப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார்.

இறப்பு

இலைலா பகலவி: ஆரம்ப கால வாழ்க்கை, நாடுகடத்தப்பட்ட நிலையில், இறப்பு 
பிரான்சின் பாரிசில் உள்ள பாசி கல்லறையில் லைலா பகலவியின் கல்லறை

இலைலா பகலவி இலண்டனில் உள்ள லியோனார்ட் விடுதியிலுள்ள தனது அறையில் ஞாயிற்றுக்கிழமை 10 ஜூன் 2001 அன்று, இறந்து கிடந்தார். தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பார்பிட்யூரேட் என்ற மருந்தை அதிகளவில் உட்கொண்டதும், உடலில் சிறிதளவு கோக்கைன் இருந்ததும் கண்டறியப்பட்டது.

ஜூன் 17, 2001 அன்று, பிரான்சின் பாரிசிலுள்ள சிமிட்டியர் டி பாசி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இறுதிச் சடங்கில் அவரது தாயார் பேரரசி பரா உட்பட பல அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இலைலா பகலவி: ஆரம்ப கால வாழ்க்கை, நாடுகடத்தப்பட்ட நிலையில், இறப்பு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இலைலா பகலவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

இலைலா பகலவி ஆரம்ப கால வாழ்க்கைஇலைலா பகலவி நாடுகடத்தப்பட்ட நிலையில்இலைலா பகலவி இறப்புஇலைலா பகலவி மேற்கோள்கள்இலைலா பகலவி வெளி இணைப்புகள்இலைலா பகலவிபகலவி வம்சம்பரா பகலவிமுகம்மத் ரிசா ஷா பஹ்லவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவம்சிந்துவெளி நாகரிகம்மக்களவை (இந்தியா)திருவிழாஇசைஇந்திய அரசியல் கட்சிகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஓரங்க நாடகம்திருட்டுப்பயலே 2வைகைஞானபீட விருதுசார்பெழுத்துசிலம்பம்ஆசாரக்கோவைதாய்ப்பாலூட்டல்மொழிபெயர்ப்புமரகத நாணயம் (திரைப்படம்)கைப்பந்தாட்டம்இந்தியாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஜன கண மனபஞ்சாயத்து ராஜ் சட்டம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அஜித் குமார்ஆய்வுகல்விவிசயகாந்துமுத்தரையர்பூரான்மாமல்லபுரம்நந்திக் கலம்பகம்விலங்குபூனைஇராசேந்திர சோழன்வளையாபதிதரணிநாச்சியார் திருமொழிஇந்திய வரலாறுஅன்புமணி ராமதாஸ்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஆசிரியர்எயிட்சுவெள்ளி (கோள்)கேழ்வரகுதாவரம்மு. கருணாநிதிகுடும்ப அட்டைசமரச சுத்த சன்மார்க்க சங்கம்காற்றுஊராட்சி ஒன்றியம்வேதாத்திரி மகரிசிகட்டபொம்மன்முல்லைப்பாட்டுபுறப்பொருள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திராவிசு கெட்இடிமழைஅவுன்சுஆகு பெயர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)புதினம் (இலக்கியம்)சித்தர்ஆயுள் தண்டனைகாசோலைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ம. கோ. இராமச்சந்திரன்தேவநேயப் பாவாணர்அம்மனின் பெயர்களின் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அவிட்டம் (பஞ்சாங்கம்)தெருக்கூத்துபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சங்க காலப் புலவர்கள்🡆 More