இந்தியத் திரைப்படத்துறை

இந்தியத் திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைக் குறிக்கும்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியாவில் திரைப்படத்துறை மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1800 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்திய மொழிகள்களில் இல் தயாரிக்கப்படுகின்றன. சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி. போன்ற நகரங்கள் இந்தியத் திரைப்பட உற்பத்திக்கு மிக முக்கியமாக விளங்குகின்றது. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி வருடாந்திர திரைப்பட வெளியீட்டில் நைஜீரியா நாட்டை விட இந்தியா முதலிடதில் உள்ளது.

இந்தியத் திரைப்படத்துறை
150px
திரைகளின் எண்ணிக்கை6,780 ஒற்றை திரைகள் (2017)
2,100பல திரைகள்(2016)
 • தனிநபருக்கு9 ஒரு மில்லியனுக்கு (2015)
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2019)
மொத்தம்2446
Number of admissions (2016)
மொத்தம்20,000,000 (2020)
 • தனி நபருக்கு1.69
தேசியத் திரைப்படங்கள்1,713,600,000
நிகர நுழைவு வருமானம் (2017)
மொத்தம்₹158.9 பில்லியன்
$58.9 பில்லியன்
தேசியத் திரைப்படங்கள்$2.1 பில்லியன் (2015)

2000 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியத் திரைப்படத்துறையின் ஒட்டுமொத்த வருவாய் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். மொழி வாரியாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி திரைப்படத்துறை வசூல் ரீதியாக 43 சதவீதம் வருவாய் ஈட்டியது. தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை 36 சதவீத வருவாய் ஈட்டியது. தென்னிந்தியத் திரைப்படத்துறை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு ஆகிய ஐந்து திரைப்படத் துறையை உள்ளடக்கியது.

இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.

இந்தியாவில் திரைப்படத்தின் அறிமுகம்

1896-1910

திரைப்படம் இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி (Lumiere Brothers' Cinematography) என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. டைம்ஸ் ஆஃப் இண்டியா இது பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் (Madras Photographic Store) அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் (Meadows Street Photography Studio) அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

நுழைவுச் சீட்டு

நுழைவுச் சீட்டுக்களின் விற்பனை மற்றும் ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், இந்தியத் திரைப்படத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும். உலகிலேயே குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுக்கள் கிடைப்பது இந்தியாவிலேயே என்று கூறப்படுகின்றது. ஆசியா-பசிபிக் பகுதியின் 73% திரைப்படம் பார்ப்பவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதுடன் ஆண்டுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி, பெருமளவிலான படம் பார்க்கும் இந்திய மக்களிலேயே தங்கியுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification of India) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு மூன்று மாதமும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் திரைப்பட அரங்குகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி, இந்திய மக்கள் பெருமளவில் வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

திரைப்படத்துறைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியத் திரைப்படத்துறை இந்தியாவில் திரைப்படத்தின் அறிமுகம்இந்தியத் திரைப்படத்துறை நுழைவுச் சீட்டுஇந்தியத் திரைப்படத்துறை திரைப்படத்துறைகள்இந்தியத் திரைப்படத்துறை மேற்கோள்கள்இந்தியத் திரைப்படத்துறை வெளி இணைப்புகள்இந்தியத் திரைப்படத்துறைஇந்திஇந்திய மொழிகள்இந்தியாஐதராபாத்து (இந்தியா)கன்னடம்கவுகாத்திகொல்கத்தாசென்னைதமிழ்திருவனந்தபுரம்திரைப்படத்துறைதெலுங்கு மொழிநைஜீரியாபுவனேஸ்வர்பெங்களூருபோஜ்புரிமலையாளம்மும்பைவங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெய்யெழுத்துதிராவிட முன்னேற்றக் கழகம்விண்டோசு எக்சு. பி.வாழைப்பழம்அக்கி அம்மைசிலுவைப் பாதைதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்உப்புச் சத்தியாகிரகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மாதேசுவரன் மலைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிபூரான்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சவ்வாது மலைஇன்ஸ்ட்டாகிராம்அவிட்டம் (பஞ்சாங்கம்)நுரையீரல் அழற்சிபிரபுதேவாவெ. இராமலிங்கம் பிள்ளைபாண்டியர்முலாம் பழம்திருப்போரூர் கந்தசாமி கோயில்அருணகிரிநாதர்கம்பராமாயணம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகம்பர்வி. சேதுராமன்வல்லினம் மிகும் இடங்கள்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019அணி இலக்கணம்மதுரைநபிவிளம்பரம்தட்டம்மைநெல்லியாளம்உன்னாலே உன்னாலேஏ. ஆர். ரகுமான்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசப்தகன்னியர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முப்பத்தாறு தத்துவங்கள்அரபு மொழிசூர்யா (நடிகர்)கூகுள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வெண்பாசீறாப் புராணம்நாளந்தா பல்கலைக்கழகம்சிவாஜி (பேரரசர்)செயற்கை நுண்ணறிவுதென் சென்னை மக்களவைத் தொகுதிஆனைக்கொய்யாபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபிள்ளைத்தமிழ்அதிதி ராவ் ஹைதாரிநியூயார்க்கு நகரம்பேரூராட்சிதங்க தமிழ்ச்செல்வன்அல் அக்சா பள்ளிவாசல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்காடைக்கண்ணிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பயண அலைக் குழல்தமிழர் விளையாட்டுகள்யானைசிங்கம்டி. டி. வி. தினகரன்கருப்பை நார்த்திசுக் கட்டிஆரணி மக்களவைத் தொகுதிலியோஅண்ணாதுரை (திரைப்படம்)வரிபண்ணாரி மாரியம்மன் கோயில்அண்ணாமலை குப்புசாமிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிமாநிலங்களவை🡆 More