இச்சை: உணர்வு

இச்சை அல்லது ஆசை என்பது ஒரு பொருள் அல்லது ஓர் உணர்வைத் தீர்ப்பதற்கான சூழ்நிலைக்கு ஆழ்ந்த ஆர்வத்தை அல்லது ஏக்கத்தை உருவாக்குகின்ற ஓர் உளவியல் சக்தியாகும்.

இச்சை என்பது பாலியல், காதல், பணம் அல்லது சக்தி போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும். சாதாரணமாக உணவின் மீதான இச்சை என்பது தேவைக்கான உணவைத் தேடுவதிலிருந்து வேறுபட்டதாகும்.

இச்சை: உணர்வு
ஆசை -ஏழு கொடிய பாவங்கள், ஐயரானிமஸ் பாஸ் என்ற ஜெர்மானியரது ஓவியம்

சமயங்களில் இச்சை

சமயங்கள் குறிப்பாக கிறித்துவமானது பெருவிருப்பம், இச்சை இவற்றுக்கிடையே ஒரு வேறுபாட்டை வரையறுக்கின்றது. இச்சை என்பது ஓர் ஆசை அல்லது பொருத்தமற்ற ஆசையாகும். மேலும் இது வலுவானதும், நீதியற்ற வகையிலும் வரும் ஒழுக்கமற்றது என வகைப்படுத்துகிறது. அதே நேரம் சரியான நோக்கத்திற்காகக் கொள்ளும் ஆசையானது கடவுளால் கொடுக்கப்பட்ட ஒழுக்கமானதாகக் கருதப்படுகிறது

பௌத்தம்

பௌத்த மெய்யியல் தத்துவங்களின் அடிப்படையில், இச்சையானது ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கொண்டுள்ளது. புத்தமதம் கூறும் அடிப்படையான நான்கு உண்மைகளில் இரண்டாவதாக இச்சை குறிப்பிடப்படுகிறது.

அனைவரது வாழ்விலும் துன்பம் என்பது இயற்கையானது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
ஒருவருடைய வாழ்விலும் இயற்கையிலேயே துன்பத்தை அறுக்கும் வழி உள்ளது.
ஆசையை அறுத்தல் என்பதே ஒருவருடைய வாழ்வில் துன்பத்தைப் போக்கும் வழியாகும்.

இச்சையானது ஒரு குறிப்பிட்ட பொருள் மீதான, அதனோடு இணைந்திருத்தல், அதனைக் குறிப்பாகச் சுட்டுதல் ஆகிய உள்ளார்ந்த உண்ர்ச்சிகரமான விருப்பமாகும். இது வடிவு, உணர்ச்சி, அறிவு (ஞானம்), மனப்பான்மை, உணர்வுநிலை எனப்படும் ஐந்து ஸ்கந்தங்கள் என்பவற்றுடன் தொடர்புடையதாகும். இந்த விடயங்களின் சில சேர்க்கைகளால் நமக்குள் ஆசை உருவாகின்றன. எனவே ஆசையே ஒருவரது இழிநிலைக்கு பொதுவான இறுதியான காரணமாக இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட துன்பத்திற்கான உடனடி வேர்க்காரணமாகவும் ஆசையே இருக்கின்றது.

இச்சை: உணர்வு 
முடிவற்ற முடிச்சு

ஆசையை இல்லாமல் ஆக்குதல் அல்லது ஆசையிலிருந்து விடுபடுதல் என்பது பொதுவாகத் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. முக்திநிலையை அல்லது ஏழு கொடிய பாவங்களிலிருந்து விடுபட விருப்பம் கொள்ளாமல் அவரது இச்சையுடன் இறந்துபோதலால், ஒருவர் தன் சுய திருப்திக்காக செய்த தலையாய கர்மாவானது அவரது ஒவ்வொரு பிறவியிலும் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அதனால் மீண்டும் மீண்டும் வாழ்க்கைச் சக்கரத்தில் முடிவே இல்லாமல் பிறவி எடுக்க வேண்டியதாகிறது. அவ்வாறின்றி சரியான வழியில் வாழ்தல், வாழ்க்கையைப் பற்றிய சரியான விழிப்புணர்வு ஆகியவை சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு வாழ்வில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

ஸ்ரீ வத்சம் என்று சொல்லக்கூடிய ஒரு முடிவற்ற முடிச்சுக் குறியீடு ஒன்றை சரியான உலக கண்ணோட்டத்தோடு ஒப்பிடும்போது, அது முடிவற்ற இந்த வாழ்க்கையைப் பற்றிய குறியீடாகும். இது ஒருவர் உலக இச்சையிலிருந்து விடுபட்டு விடுதலையடைய விரும்பும் அந்த நபரைக் குறிப்பதாகும் பிரதிபலிப்பதாகும். இவ்வுலக வாழ்வின் மீதான பற்றுகளுக்கு நான்கு விடயங்கள் காரணங்களாய் உள்ளன. சடங்குகள், உலகப்பற்று, மகிழ்ச்சி, மற்றும் சுயம் ஆகியவையே அவையாகும். இந்த நான்கினையும் விழிப்புணர்வுடன் அறிந்து, நன்னெறியைப் பின்பற்றி வாழ்பவர்களை, அருகத நிலையை அடைந்தவர் என பௌத்தம் கூறுகிறது.

ஆசையை அறுக்கவேண்டுமெனில், அதன் திட்டமிடப்படாத விளைவுகளை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் விழிப்புணர்வுடன் கூடிய நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான நடத்தை, வாழ்வாதாரங்கள், நேர்மையான முயற்சி ஆகியவற்றுடன் ஆசை அமர்ந்துள்ள இடத்தினையும் அறிந்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய காங்கிரசுரஜினி முருகன்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நம்பி அகப்பொருள்மதுரைசுபாஷ் சந்திர போஸ்பஞ்சாங்கம்ரச்சித்தா மகாலட்சுமிநேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்இங்கிலாந்துகடவுள்தேசிக விநாயகம் பிள்ளைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்புவிநவரத்தினங்கள்கருப்பசாமிமாதேசுவரன் மலைரோகிணி (நட்சத்திரம்)பெண்ஆடை (திரைப்படம்)தமிழ்நாடுமோகன்தாசு கரம்சந்த் காந்திதிருமந்திரம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்உவமையணிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திராவிட மொழிக் குடும்பம்இந்தியக் குடியரசுத் தலைவர்கன்னத்தில் முத்தமிட்டால்முதலாம் உலகப் போர்பாரதிய ஜனதா கட்சிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்காரைக்கால் அம்மையார்மேற்குத் தொடர்ச்சி மலைவெள்ளியங்கிரி மலைகண்ணதாசன்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்காதல் (திரைப்படம்)உணவுஏப்ரல் 27தமிழர் நிலத்திணைகள்தன்னுடல் தாக்குநோய்உயர் இரத்த அழுத்தம்பறவைரயத்துவாரி நிலவரி முறைலால் சலாம் (2024 திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நுரையீரல் அழற்சிதாவரம்கருட புராணம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆனைக்கொய்யாஅகத்திணைதிருத்தணி முருகன் கோயில்அகநானூறுஐங்குறுநூறுநல்லெண்ணெய்போக்கிரி (திரைப்படம்)புதினம் (இலக்கியம்)வல்லினம் மிகும் இடங்கள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கன்னி (சோதிடம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஆங்கிலம்கும்பகோணம்இந்தியத் தேர்தல்கள் 2024காமராசர்முலாம் பழம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிதமிழர் கப்பற்கலைநற்றிணை🡆 More