அலை–துகள் இருமை: பௌதிக விதி

இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும்.

குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.

இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயி டீ பிராக்லி ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.

டே பிராலியின் அலைநீளம்

லூயி டே பிராலி 1924 ஆம் ஆண்டில் அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி பிராலி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட "m" திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் "v" இல் சென்றால், "λ" என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார்.

    அலை–துகள் இருமை: பௌதிக விதி 

இங்கு pஉந்தம், h - பிளாங்க்கு மாறிலி.

பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி புறாக்ளி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது.

டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

அலைஇயற்பியல்கருத்துருகுவாண்டம் பொறிமுறைதுகள்வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ந. பிச்சமூர்த்திவடிவேலு (நடிகர்)தமிழர் அளவை முறைகள்மருது பாண்டியர்மஞ்சள் காமாலைஐம்பூதங்கள்வெள்ளியங்கிரி மலைகா. ந. அண்ணாதுரைஆசாரக்கோவைமுடக்கு வாதம்மலையாளம்பாலை (திணை)அறுவகைப் பெயர்ச்சொற்கள்உத்தரகோசமங்கைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நாயன்மார்புங்கைதமிழர்மருதமலை முருகன் கோயில்தமிழ் மாதங்கள்திருமூலர்புலிபிள்ளைத்தமிழ்வேதாத்திரி மகரிசிகல்விமீனா (நடிகை)பாம்புஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்அவுன்சுதொல். திருமாவளவன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தங்கம்கருக்காலம்செண்டிமீட்டர்குணங்குடி மஸ்தான் சாகிபுகம்பராமாயணத்தின் அமைப்புசுரைக்காய்முத்துலட்சுமி ரெட்டிமூலம் (நோய்)அயோத்தி தாசர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்வைர நெஞ்சம்வடலூர்உமறுப் புலவர்பௌத்தம்சிற்பி பாலசுப்ரமணியம்காமராசர்இட்லர்பித்தப்பைகேள்விதிராவிட இயக்கம்புதுச்சேரிகேழ்வரகுகுலசேகர ஆழ்வார்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்திய இரயில்வேமாத்திரை (தமிழ் இலக்கணம்)இயற்கை வளம்வன்னியர்பெருமாள் திருமொழிதமிழச்சி தங்கப்பாண்டியன்மொழிபெயர்ப்புமுதுமொழிக்காஞ்சி (நூல்)கிராம சபைக் கூட்டம்தேவயானி (நடிகை)ஐங்குறுநூறு - மருதம்டி. என். ஏ.வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கன்னி (சோதிடம்)தாயுமானவர்கழுகுஇசுலாமிய வரலாறுபுவியிடங்காட்டிமூகாம்பிகை கோயில்ஆசிரியப்பாபதினெண் கீழ்க்கணக்குயானைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்🡆 More