அறுதி விகிதசம விதி

வேதியியலில், அறுதி விகிதசம விதி (Law of definite proportions), ஒரு வேதியியல் சேர்வையில் அடங்கியுள்ள தனிமங்களின் திணிவு விகிதம் எப்போதும் ஒரேயளவான விகிதத்தையே கொண்டிருக்கும் என்கிறது.

இதையே மாறா விகிதசம விதி அல்லது புரூசுட்டின் விதி (Proust's Law) எனவும் அழைப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, நீர் என்பது ஒட்சிசனும், ஐதரசனும் சேர்ந்த ஒரு சேர்வை. திணிவின் அடிப்படையில் நீரில் உள்ள ஒட்சிசனின் பங்கு 8/9ம், ஐதரசனின் பங்கு 1/9ம் ஆகும். இவ்விதியின் படி நீரின் எந்தவொரு மாதிரியை எடுத்துக்கொண்டாலும், இந்தவிகிதம் எப்போதும் மாறாமல் இருக்கும். இவ்விதியும், பல் விகிதசம விதியும் சேர்ந்து "விகிதவியல்" (stoichiometry) என்னும் துறைக்கு அடிப்படையாக அமைகின்றன.

வரலாறு

1798 ஆம் ஆண்டுக்கும், 1804 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், பிரெஞ்சு வேதியியலாளரான யோசேப் புரூசுட்டு என்பவர் இதை முதன் முதலாகக் கவனித்தார். இக்கவனிப்பை அடிப்படையாகக் கொண்டு 1806 ஆம் ஆண்டில் இவ்விதியை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

தற்கால வேதியியலாளர்களுக்கு அறுதி விகிதசம விதி வேதியியற் சேர்வை என்பதன் வரைவிலக்கணத்தில் இயல்பாகவே பொதிந்திருக்கும் ஐயத்துக்கு இடமற்ற ஒன்றாகத் தோன்றும். ஆனால், வேதியியற் சேர்வை குறித்து முழுமையான விளக்கம் இல்லாதிருந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்விதி புதுமையானதாகவே இருந்தது. முன்மொழியப்பட்ட காலத்தில், இந்த விதி சர்ச்சைக்கு உரியதாக இருந்ததுடன், பல வேதியியலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, புரூசுட்டின் நாட்டுக்காரரான குளோட் லூயிசு பர்தோலே இவ்விதியை ஏற்றுக்கொள்ளாமல், தனிமங்கள் எந்த விகிதத்திலும் சேர முடியும் என்று கூறினார். இந்த விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது அக்காலத்தில், தூய வேதியியல் சேர்வைகளுக்கும், கலவைகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து அதிகம் தெளிவு இருக்கவில்லை என்பது தெரியவருகிறது.

அறுதி விகிதசம விதி, 1803 ஆம் ஆண்டில் ஜான் டால்ட்டன் என்பவரால் முன்மொழியப்பட்ட அணுக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்குப் பங்களிப்புச் செய்ததுடன், அணுக் கோட்பாட்டில் இருந்து தனக்கான உறுதியான கோட்பாட்டு அடிப்படையையும் பெற்றுக்கொண்டது. அணுக் கோட்பாடு, ஒவ்வொரு தனிமமும் தனித்துவமான அணுக்களால் ஆனவை என்றும், பல வகையான அணுக்கள் நிலையான நிலையான விகிதத்தில் சேர்ந்து சேர்வைகள் உருவாகின்றன என்றும் விளக்கியது.

விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள்

நவீன வேதியியலின் உருவாக்கத்தில் மிகப் பயனுள்ளதாக இருந்த போதிலும், அறுதி விகிதசம விதி, எல்லா வேளைகளிலும் உண்மையாக அமைவதில்லை. விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள் என்ற வகைச் சேர்வைகளில் தனிமங்கள் நிலையான விகிதங்களில் சேராமல், வேறுபட்ட விகிதங்களில் சேர்வதைக் காணலாம். எடுத்துக்கட்டாக, வூசுட்டைட்டு இரும்பு ஒட்சைட்டில் ஒவ்வொரு ஒட்சிசன் அணுவுடனும் 0.83 முதல் 0.95 வரையிலான விகிதங்களில் இரும்பு அணுக்கள் சேர்வதைக் காணலாம். இதன்படி, சேர்வையில் 23%க்கும் 25%க்கும் இடைப்பட்ட திணிவு விகிதங்களில் ஒட்சிசன் அளவு வேறுபடுகிறது. இரும்பு ஒட்சைட்டின் முறையான சூத்திரம் FeO, ஆனால், படிகவியல் வெற்றிடங்கள் இருப்பதனால், இது Fe0.95O என அமைகின்றது. இத்தகைய வேறுபாடுகளைக் கண்டறியக்கூடிய வகையில், புரூசுட்டின் அளத்தல் முறைகள் போதிய அளவு துல்லியமானவையாக இருக்கவில்லை.

இத்துடன், எவ்வாறு பெறப்படுகின்றது என்பதைப் பொறுத்து, தனிமங்களில் சமதானிகளின் அளவு வேறுபடக்கூடும். இதனால், தூய விகிதவியல் சேர்வைகளிலும்கூடக் குறித்த தனிமங்களின் திணிவு விகிதங்கள் மாறுபடக்கூடும்.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

  • பல் விகிதசம விதி
  • மறுதலை விகிதசம விதி

Tags:

அறுதி விகிதசம விதி வரலாறுஅறுதி விகிதசம விதி விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள்அறுதி விகிதசம விதி குறிப்புகள்அறுதி விகிதசம விதி இவற்றையும் பார்க்கவும்அறுதி விகிதசம விதிஐதரசன்ஒட்சிசன்சேர்வைதனிமம்திணிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பணவீக்கம்நுரையீரல் அழற்சிசீவக சிந்தாமணிபிரபுதேவாதேர்தல் நடத்தை நெறிகள்புலிமுல்லை (திணை)நவக்கிரகம்பரிபாடல்இராமர்லொள்ளு சபா சேசுடைட்டன் (துணைக்கோள்)இந்திய தேசிய காங்கிரசுகாடுவெட்டி குருஎட்டுத்தொகைபண்பாடுபாண்டவர்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசெண்டிமீட்டர்சித்தர்கள் பட்டியல்நீதிக் கட்சிஜன கண மனசாரைப்பாம்புகெத்சமனிஆரணி மக்களவைத் தொகுதிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிஓ. பன்னீர்செல்வம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஅஸ்ஸலாமு அலைக்கும்சேரர்ஸ்ரீலீலாவாணிதாசன்பிலிருபின்பாடுவாய் என் நாவேமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நாயக்கர்தமிழ்நாடு காவல்துறைகம்பராமாயணம்இலங்கைஅருங்காட்சியகம்கருக்காலம்தென் சென்னை மக்களவைத் தொகுதிஞானபீட விருதுஇந்தியத் தேர்தல் ஆணையம்மக்களவை (இந்தியா)ஆதலால் காதல் செய்வீர்மண் பானைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇலிங்கம்வட சென்னை மக்களவைத் தொகுதிஅதிமதுரம்பத்து தலகண்டம்கரிகால் சோழன்ஸ்ரீவிசயகாந்துஹிஜ்ரத்தேவாரம்கட்டுவிரியன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஜெயம் ரவிசரத்குமார்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பூப்புனித நீராட்டு விழாவிராட் கோலிகுலுக்கல் பரிசுச் சீட்டுதிருப்பூர் மக்களவைத் தொகுதிசங்க இலக்கியம்சு. வெங்கடேசன்கலாநிதி வீராசாமிபோதி தருமன்சூரைபாக்கித்தான்பாசிசம்நாயன்மார் பட்டியல்🡆 More