அனிமே: சப்பானின் அசைவு படம்

அனிமே (Anime) என்பது சப்பானில் உருவாகும் இயங்குபடங்கள் ஆகும்.

சப்பானுக்கு வெளியே அனிமே என்பது சப்பானிய இயங்குபடத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. அனிமே 1917 ஆம் ஆண்டில் தொடங்கியது. மங்காவைப் போல அனிமேக்களுக்கும், சப்பானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதுடன் உலகம் முழுவதிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதனை விநியோகிப்பவர்கள் இதனைத் தொலைக்காட்சிகளூடாகவும், நேரடியாக நிகழ்படங்களாகப் பதிவு செய்தும், இணையவழியாகவும் வெளியிடுகின்றனர்.

அனிமே: வரையறை மற்றும் பயன்பாடு, வடிவம், வரலாறு
மொமொடாரொஸ் சீ வார்ரியர்ஸ் (1944), முதல் அனிமே திரைப்படம்
அனிமே: வரையறை மற்றும் பயன்பாடு, வடிவம், வரலாறு
ஒரு பெண் அனிமே கதாப்பாத்திரம்

வரையறை மற்றும் பயன்பாடு

அனிமே என்பது ஒரு கலை வடிவம். இது அனிமேஷன் (animation), என்றும் அழைக்கப்படுகிறது. இது திரைப்படத்தில் உள்ளது போன்ற விரிதல், சுழல்தல் எனும் அனைத்து வகை அசைவுகளையும் உள்ளடக்கிய உயிராட்ட விரிசுழற்படம். ஆனால் அது ஒரு வகைமை அல்லது பாணி என்று தவறாக வகைப்படுத்தப்படுகிறது. ஜப்பானிய மொழியில் அனிமே என்பது உலகெங்கிலும் இருந்து அனைத்து வகையான அசைவூட்டங்களையும் குறிக்கிறது.

ஆங்கிலத்தில், அனிமே (/ˈænəˌm/) என்பது பின்வரும் வரையறைகளைக் குறிக்கும் கட்டுப்பாட்டுக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது

  • ஜப்பானிய-பாணி அசைவூட்ட திரைப்படம் அல்லது தொலைக்காட்சி பொழுதுபோக்கு
  • ஜப்பானில் உருவாக்கப்பட்ட அசைவூட்டப் பாணி

டேஸின் அனிமே (dessin animé) என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து அசைவூட்டம் எனும் பொருளுடைய அனிமேஷன் என்ற வார்த்தை பெறப்பட்டதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன

ஆங்கிலத்தில், அனிமே-ஒரு பொதுவாக நிறைவான பெயர்ச்சொல்லாக செயல்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

அசைவூட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, ஜப்பானசைவூட்டம் என்பது 1970 கள் மற்றும் 1980 களில் பரவலாக இருந்தது. 1980 களின் நடுப்பகுதியில், அசைவூட்டமானது, ஜப்பானசைவூட்டத்தைத் தடுக்கத் தொடங்கியது.

தற்போது, குறிப்பிட்ட காலகட்டங்களில் தயாரான ஜப்பானிய அசைவூட்டத்தை வேறுபடுத்தி அடையாளம் காண ஜப்பானசைவூட்டம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

வடிவம்

அசைவூட்டத்தின் முதல் வடிவமைப்பு 1917 ஆம் ஆண்டில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டது. இது முதலில் நாடகக் காட்சி வடிவில் துவங்கியது.

1958 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் நாள், நிப்பான் தொலைக்காட்சியில் "மோலின் சாகச செயல்" எனும் பொருள்படும் "மோகுரா நோ அபன்சுரு (Mogura no Abanchūru)" என்ற தலைப்பில், முதல் தொலைக்காட்சி மற்றும் முதல் வண்ண அசைவூட்டபடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 களில் தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பப்பட்டது முதல் இது ஒரு பிரபலமான ஊடகமாக இருந்து வருகிறது.

அசைவூட்டபட வீடியோ படைப்பு வடிவமைப்புகள்:

  • அசல் வீடியோ அனிமேஷன் (ஓ.வி.ஏ.-OVA)
  • அசல் அனிமேஷன் வீடியோ (ஓ.ஏ.வி.-OAV)

பொதுவாக அசைவூட்டபடங்கள் வீட்டு ஊடக வெளியீட்டிற்கு முன்னர் திரையரங்குகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளியிடப்படவில்லை இணையத்தின் வெளிப்பாடு சில அசைவூட்டபட தயாரிப்பாளர்களை "அசல் இணைய அசைவூட்டம் (ஓ.என்.ஏ.-ONA)" என்ற வடிவத்தில் தங்களின் படைப்புகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் வழிவகுத்தது.

1980 களில் அசைவூட்ட வெளியீடுகளின் வீட்டு விநியோகம் விஎச்எஸ் (VHS) மற்றும் சீரொளிக் குறுந்தகடு வடிவமைப்புகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சீரொளிக் குறுந்தகடு மற்றும் விஎச்எஸ் வடிவங்களில் டிவிடி (DVD) வடிவமைப்பு மூலம் பல்வேறு தனித்துவ மேற்செல் நன்மைகள் வழங்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கூறுகள்:

  • திரைப்படநிகழ்வுகளில் துணைத் தலைப்பு / துணைவாசகம் சேர்த்தல்
  • காணொளி காட்சிகளில் ஒலிப்புத் தடங்களைச் சேர்த்தல்

டிவிடி வடிவமைப்பில் உள்ள பின்னடைவுகள்:

  • மண்டல / வட்டார குறியிடல் பயன்பாட்டு இடர்ப்பாடுகள்
  • டிவிடி வடிவமைப்பில் சுட்டிக்காட்டப்பட்ட உரிமம் சார்ந்த பிரச்சினைகள்
  • காணொளி காட்சிப் பதிவுத் திருட்டுக் குறைபாடு
  • ஏற்றுமதி சிக்கல்கள்
  • தடைசெய்யப்பட்ட பிராந்தியத்தில் ஏற்படும் பயன்பாட்டு சிக்கல்கள்

வரலாறு

ஆரம்பகால ஜப்பானிய அசைவூட்ட படம் கட்சுடோ ஷாஷின் (Katsudo Shashin) ஆகும். இது அறியப்படாத படைப்பாளரால் உருவாக்கப்பட்ட நாளிடப்படாத தயாரிப்பு ஆகும்.

அசைவூட்டப்படத் தயாரிப்பாளர்கள், ஓடன் ஷிமோகவாவும் (Öten Shimokawa), சைதரௌ கிடாயாமாவும் (Seitarou Kitayama) பல அசைவூட்டப் படைப்புகளைத் தயாரித்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

  • கௌச்சியின் (Kouchi) நாமகுரா கதானா (Namakura Gatana) என்ற பழைய உயிரோட்டமுள்ள திரைப்படம்
  • சாமுராய் வீரன் தன்னுடைய புதிய வாளை சோதிக்க முயற்சிக்கும் இரண்டு நிமிட துண்டுப் படம்

1923ஆம் ஆண்ட்டின் மாபெரும் காந்தோ (Kantō) பூகம்பம் ஜப்பானின் உள்கட்டமைப்பில் பரவலான அழிவை ஏற்படுத்தியது. அதில் ஏற்பட்ட ஷிமோகாவா கிடங்கின் அழிவால் ஆரம்பகால அசைவூட்டப் படைப்புகளில் பெரும்பாலானவை அழித்தன.

1930 களில் அசைவூட்டப் படத்துறை ஜப்பானில் நேரடி-தொழிற்துறைக்கு ஒரு மாற்று வடிவமாக உருவெடுத்தது. இத்துறை பல வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் வரவாலும், பல அசைவூட்டப்படதயாரிப்பாளர்களின் போட்டியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நோபுரோ ஓபூஜியும் (Noburō Ōfuji), யாசுஜி முரடாவும் (Yasuji Murata), செல் (cel) அசைவூட்டத்தை விட வெட்டுருக்களின் உதவியுடன் இயக்கப்படும் தொடரறுகருவி (cut out) எனும் மலிவான அசைவூட்டத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அதிக அளவு அசைவூட்டத் தயாரிப்புகளை மேற்கொண்டனர்.

மற்ற படைப்பாளிகள், கென்சோ மசோகாவும் (Kenzō Masaoka), மிட்சுயோ ஸியோவும் (Mitsuyo Seo), அசைவூட்டத் தொழில்நுட்பத்தில் இராட்சத அடி எடுத்து வைத்தனர். அரசாங்கம் இவர்களை கல்விக் குறும்படங்களையும், கல்விசார் பிரச்சாரப் படங்களையும் தயாரிக்க அறிவுறுத்தியது. இவர்கள் அரசாங்கம் அளித்த உத்தரவினாலும், ஆதரவினாலும் பெருமளவில் பயனடைந்தனர். 1933இல் மசோகா ஜப்பானின் முதல் அசைவூட்டப் பேசும்படம், சிகாரா தோ ஒன்னா யோ நோ நாகாவைத் (Chikara to Onna no Yo no Naka) தயாரித்து வெளியிட்டார். 1940 வாக்கில், ஷின் மகாஹா ஷுடன் (Shin Mangaha Shudan) மற்றும் ஷின் நிப்பான் மாங்ககா (Shin Nippon Mangaka) உட்பட பல அசைவூட்டப்படக் கலைஞர்களின் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. 1944 ஆம் ஆண்டில், முதல் முழுநீள அசைவூட்டத் திரைப்படம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர், "மமோடரோவின் (Momotaro) தெய்வீக கடல் போர் வீரர்கள்." இப்படமானது பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் கடற்படையின் ஆதரிப்பு விளம்பரப் பொருள் ஆதரவுடன் சீயோவால் (Seo) இயக்கப்பட்டது. இப்படம் அதிக அளவு வசூல் சாதனை செய்தது.

1937 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி (Walt Disney) கம்பெனியால் வெளியிடப்பட்ட "வெண்பனியும் ஏழு குள்ளர்களும் (Snow White and the Seven Dwarfs)" என்ற திரைப்படம் பெருத்த வெற்றி பெற்றது. இவ்வெற்றி பல ஜப்பானிய அசைவூட்டப் படத்தயாரிப்பாளர்களிடையே செல்வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

1960 களில், மங்கா கலைஞரும், அசைவூட்டப் பணியாளருமான ஒஸாமு தேஸுகா (Osamu Tezuka) டிஸ்னியின் அசைவூட்ட நுட்பங்களைத் தழுவி புதிய நுட்பத்தை ஏற்படுத்தினார். இதனால் நொடிக்கு இருபத்திநான்கு சட்டகம் என கேமரா பதிவு செய்யும் நிலைத்த பட சட்டகங்களின் எண்ணிக்கையும், செலவுகளும் குறைவடைந்தன. தயாரிப்பு செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த பல அசைவூட்டப் பணியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். குறைவான கால எல்லைக்குள் சிக்கனமான பொருள் செலவில் அசைவூட்டப் படங்களைத் தயாரிக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று அவர் எண்ணினார்.

"மூன்று கதைகள்" எனும் முதல் அசைவூட்டத் திரைப்படம், 1960 இல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

"உடனடி வரலாறு" எனும் ப்பொருளில் "ஓட்டோகி மங்கா நாட்காட்டி (Otogi Manga Calendar)" எனும் முதல் அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடர், 1961 முதல் 1964 வரை ஒளிபரப்பப்பட்டது.

ஒஸாமு தேஸுகாவின் அசைவூட்டக் கலை வெளிப்பாடுகள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இவர் "அசைவூட்டத் திரைப்படங்களின் வரலாற்று சாதனையாளர்" என்றும், "அசைவூட்டத் திரைப்படங்களின் அறிவுத் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Tags:

அனிமே வரையறை மற்றும் பயன்பாடுஅனிமே வடிவம்அனிமே வரலாறுஅனிமே மேற்கோள்கள்அனிமே உசாத்துணைகள்அனிமே வெளியிணைப்புகள்அனிமேஇயங்குபடம்சப்பான்தொலைக்காட்சிமங்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வரலாறுபாரதிய ஜனதா கட்சிநிறைவுப் போட்டி (பொருளியல்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பறையர்கூத்தாண்டவர் திருவிழாதமிழ் எழுத்து முறைதிருநெல்வேலிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்சிவம் துபேகாயத்ரி மந்திரம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)வினோத் காம்ப்ளிமக்களவை (இந்தியா)யோனிமதுரைக் காஞ்சிஅணி இலக்கணம்எங்கேயும் காதல்அருந்ததியர்நவரத்தினங்கள்இந்திய நிதி ஆணையம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பள்ளுதலைவி (திரைப்படம்)தமிழ் மாதங்கள்புணர்ச்சி (இலக்கணம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்சேமிப்புதமிழ்ப் புத்தாண்டுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சிட்டுக்குருவிடுவிட்டர்ராஜேஸ் தாஸ்செக்ஸ் டேப்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பாசிப் பயறுதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஆக்‌ஷன்விஷால்மகாபாரதம்அபினிஇந்திய ரூபாய்முதுமொழிக்காஞ்சி (நூல்)செண்டிமீட்டர்இணையத்தின் வரலாறுதற்கொலை முறைகள்நஞ்சுக்கொடி தகர்வுஇலங்கையின் மாவட்டங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்முல்லைக்கலிமாத்திரை (தமிழ் இலக்கணம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்திய தேசிய காங்கிரசுஈ. வெ. இராமசாமிமருதம் (திணை)சீனாமக்களாட்சிகள்ளழகர் கோயில், மதுரைதமிழ் இணைய மாநாடுகள்காற்றுஇலங்கைமுத்துலட்சுமி ரெட்டிசைவ சமயம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ர. பிரக்ஞானந்தாசுபாஷ் சந்திர போஸ்திருமூலர்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்நரேந்திர மோதிகருச்சிதைவுமாடுபீப்பாய்தமிழர் கப்பற்கலைமதுரைக்காஞ்சிவாட்சப்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செவ்வாய் (கோள்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்🡆 More