மோல்

மோல் அல்லது மூல் (Mole) என்பது இரசாயனவியலில் ஒரு பொருள் எவ்வளவு உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு.

இது அடிப்படையாகக் கருதப்படும் அனைத்துலக முறை அலகுகளில் ஒன்று. தமிழில் மோல் அல்லது மூல் என்றும் உரோமன்/இலத்தீன் எழுத்தில் mol என்றும் குறிக்கப்பெறுகின்றது. மோல் என்னும் பெயர் 1893இல் இடாய்ச்சுலாந்து வேதியியலாளர் வில்ஹெம் ஆஸ்ட்வால்டு (Wilhelm Ostwald) என்பார் Molekül என்னும் இடாய்ச்சு மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கி 1897இல் அறிமுகப்படுத்தியது.

மோல்
அலகு முறைமைசர்வதேச நியம அலகு
அலகு பயன்படும் இடம்பொருட்களின் அளவு
குறியீடுmol

வரையறை

ஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படைக் கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும்பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய 12C மிகச்சரியாக 12 கிராம் இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை அவோகாடரோ எண் (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், 6.02214179(30)×1023 மோல்−1. ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x1023 (மோல்)−1 என்று அண்ணுப்படுத்தலாம்.

கரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற ஓரிடத்தான்கள் இருக்கக்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் கீழ்க்காணுமாறு ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்:

  • 1 மோல் 12C = 6.02214 x1023 12C அணுக்கள் = 12 கிராம்
  • 1 மோல் 16O = 6.02214 x1023 16O அணுக்கள் = 15.9949 கிராம்

மோல் என்பது அனைத்துலக முறை அலகில் பொருளொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பொருளொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 மோல் எனப்படும். இதன் குறியீடு mol.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

18931897அனைத்துலக முறை அலகுகள்வில்ஹெம் ஆஸ்ட்வால்டுவேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவபெருமானின் பெயர் பட்டியல்சீவக சிந்தாமணிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சித்திரகுப்தர் கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்ஜீரோ (2016 திரைப்படம்)சித்திரை (பஞ்சாங்கம்)நீதிக் கட்சிகாரைக்கால் அம்மையார்மறைமலை அடிகள்விரை வீக்கம்இந்திய தேசிய காங்கிரசுபுவிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாடு சட்டப் பேரவைஐங்குறுநூறுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சூல்பை நீர்க்கட்டிகன்னியாகுமரி மாவட்டம்லால் சலாம் (2024 திரைப்படம்)முக்கூடற் பள்ளுபுறநானூறுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பெண்ணியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமருதமலை முருகன் கோயில்ஆண்டாள்திருப்பதிமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)செவ்வாய் (கோள்)திருமுருகாற்றுப்படைலீலாவதிமெய்இசுலாம்நீக்ரோவிஷ்ணுவிருமாண்டிமணிமேகலை (காப்பியம்)பங்குச்சந்தைதிருப்பாவைசேக்கிழார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்யூடியூப்திணை விளக்கம்இந்திய விடுதலை இயக்கம்திரிசாதமிழர் கலைகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தரங்கம்பாடிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைராஜேஸ் தாஸ்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மனித உரிமைதேசிய அடையாள அட்டை (இலங்கை)சீர் (யாப்பிலக்கணம்)காளமேகம்ஐம்பெருங் காப்பியங்கள்ஸ்ரீலீலாபயில்வான் ரங்கநாதன்வானிலைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கந்தர் அலங்காரம் (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைவேற்றுமையுருபுபழனி முருகன் கோவில்ஆறுமுக நாவலர்பனைகண்ணனின் 108 பெயர் பட்டியல்முன்னின்பம்கல்லுக்குள் ஈரம்பொன்னுக்கு வீங்கிதிருத்தணி முருகன் கோயில்மனித மூளைமுகம்மது நபிகிருட்டிணன்இரட்சணிய யாத்திரிகம்ஈரோடு தமிழன்பன்🡆 More