விஜயரகுநாத தொண்டைமான்

இராஜா விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (Vijaya Raghunatha Tondaiman) (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை 1789 முதல் 1807 பெப்ரவரி முதல்தேதி வரை வரை ஆண்ட மன்னர் ஆவார்.

விஜயரகுநாத தொண்டைமான்
புதுக்கோட்டை அரசர்
ஆட்சிக்காலம்30 திசம்பர் 1789 – 1 பெப்ரவரி 1807
முன்னையவர்இராயரகுநாத தொண்டைமான்
பின்னையவர்இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான்
பிறப்புமே 1759
புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக்கோட்டை
இறப்பு1 பெப்ரவரி 1807 (வயது 47)
புதுக்கோட்டை
மரபுபுதுக்கோட்டை
தந்தைதிருமலைராய தொண்டைமான்

துவக்க வாழ்கை

விஜய ரகுநாத தொண்டைமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டைமான் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.

ஆட்சி

இராயரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார். விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடு நவாபான முகமது அலி கான் வாலாஜா இவருக்கு "ராஜா பகதூர்" என்ற பட்டத்தை வழங்கினார். பாளையக்காரர் போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை பிடிக்க பிரித்தானியருக்கு உதவியாக இருந்தார். இவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைப் பிரதேசத்தை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர்.

தஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. 1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர்.

குடும்பம்

விஜயரகுநாத தொண்டமான் முதலில் ராணி பிரயநாயகி ஆய் சாகீப்பை மணந்தர். பின்னர் ராணி ஆயிஅம்மாள் ஆயை மணந்தார். விஜயரகுநாத தொண்டமானுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர், அவர்களின் இரு மகன்களான விஜயரகுநாதராய தொண்டைமான் (1797-1825) மற்றும் ரகுநாத தொண்டைமான் (1798-1839) ஆகியோர் அவருக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர்.

இறப்பு

விஜய ரகுநாத தொண்டமான் 1807 பிப்ரவரி முதல் நாள் அன்று தன் 47 ஆம் வயதில் இறந்தார். இளைய ராணியாகிய ஆயிஅம்மாள் ஆய் உடன் கட்டை ஏறினார்.

மேற்கோள்கள்

Tags:

விஜயரகுநாத தொண்டைமான் துவக்க வாழ்கைவிஜயரகுநாத தொண்டைமான் ஆட்சிவிஜயரகுநாத தொண்டைமான் குடும்பம்விஜயரகுநாத தொண்டைமான் இறப்புவிஜயரகுநாத தொண்டைமான் மேற்கோள்கள்விஜயரகுநாத தொண்டைமான்புதுக்கோட்டை சமஸ்தானம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அங்குலம்திராவிட இயக்கம்சித்தர்கள் பட்டியல்இந்திய தேசியக் கொடிபகவத் கீதைஆசாரக்கோவைதேவயானி (நடிகை)சைவத் திருமுறைகள்இந்திய வரலாறுகருக்கலைப்புசப்தகன்னியர்தைராய்டு சுரப்புக் குறைமரகத நாணயம் (திரைப்படம்)சிலம்பரசன்இந்திய தேசிய சின்னங்கள்இராமலிங்க அடிகள்சிறுகதைதொழிலாளர் தினம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)புறப்பொருள் வெண்பாமாலைஅத்தி (தாவரம்)சட் யிபிடிஅறிவுசார் சொத்துரிமை நாள்புறநானூறுதிருவரங்கக் கலம்பகம்கீர்த்தி சுரேஷ்மயங்கொலிச் சொற்கள்சேக்கிழார்இந்து சமயம்பிரபஞ்சன்கொடைக்கானல்மு. க. முத்துவிவேகானந்தர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகவிதைசெஞ்சிக் கோட்டைநம்பி அகப்பொருள்யூடியூப்கிளைமொழிகள்பள்ளிக்கரணைஇயற்கை வளம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பனிக்குட நீர்உலா (இலக்கியம்)சோழர்நாடார்தமிழர் நிலத்திணைகள்பள்ளுகருப்பசாமிபிள்ளையார்சிந்துவெளி நாகரிகம்மனித வள மேலாண்மைபகிர்வுஇயேசு காவியம்முலாம் பழம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைரஜினி முருகன்திருத்தணி முருகன் கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்குண்டூர் காரம்பெருஞ்சீரகம்வாகைத் திணைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பத்துப்பாட்டுபெரும்பாணாற்றுப்படைகங்கைகொண்ட சோழபுரம்பித்தப்பைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கள்ளழகர் கோயில், மதுரைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுய இன்பம்நெடுஞ்சாலை (திரைப்படம்)ஓ காதல் கண்மணிஔவையார் (சங்ககாலப் புலவர்)இரண்டாம் உலகம் (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)🡆 More