2017 திரைப்படம் மீசைய முறுக்கு

மீசைய முறுக்கு(Meesaya Murukku)ஒரு இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை கிப்கொப் தமிழா   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் விவேக் மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. 

மீசைய முறுக்கு
இயக்கம்கிப்கொப் தமிழாஆதி
தயாரிப்புசுந்தர் சி
குஷ்பு
(வழங்குபவர்)
கதைகிப்கொப் தமிழா
கதைசொல்லிகிப்கொப் தமிழா
இசைகிப்கொப் தமிழா
நடிப்புகிப்கொப் தமிழா
விவேக்
ஆத்மிகா
ஒளிப்பதிவுஉ. கே. செந்தில் குமார்
கிருத்தி வாசன்
படத்தொகுப்புஃபென்னி ஒலிவர்
கலையகம்அவ்னி மூவீஸ்
விநியோகம்ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்
வெளியீடு21 சூலை 2017
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்களம்

கோயம்புத்தூரைச் சார்ந்த ஆதி மற்றும் ஜீவா ஆகியோர் குழந்தைப் பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதியின் தந்தை இராமச்சந்திரன் ஆதியின் இசையார்வத்திற்கு ஆதரவளிப்பவராக உள்ளார். ஆதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் போது அவரது கல்லூரித் தோழி நிலாவைக் (பள்ளியிலிருந்தே குழந்தைப் பருவ நட்பிலிருந்தவர்) காதலிக்கிறார். நிலா செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பெற்றோர் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டோராவர். ஆதியின் பெற்றோரிடம் சென்று தம் மகளுடன் ஆதி பழகுவதை எதிர்த்து மிரட்டிவிட்டு வருகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நிலாவின் பெற்றோர்கள் அவளை ஆதியைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அறையில் வைத்து பூட்டி வீட்டுக் காவலில் வைக்கின்றனர்.

ஆதி தனது தமிழ் ராப் இசைப் பாடல்களுக்காக கல்லூரியில் மிகவும் பிரபலமாகிறார். அவர் யூடியூபில் கிப்கொப் தமிழா என்ற பெயரில் ஒரு பக்கத்தை சொந்தமாகத் தொடங்குகிறார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று தனித்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற தனது ஆசையைத் தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆதியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்குமாறும் அவ்வாறு தன்னால் வெற்றி பெற இயலாவிட்டால் தான் திரும்பி வந்து விடுவதாகவும் தெரிவித்து தந்தையை சமாதானம் செய்கிறார். ஆதி சென்னையை அடைந்து வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்கிறார். ஆனால், எல்லாம் வீணாகிறது. ஓராண்டு முடிந்த பிறகு கோவை திரும்ப முயற்சிக்கும் போது, கடைசி நாளில், ஆதி வானொலி தொகுப்பாளர்  மா கா பா ஆனந்தைச் சந்திக்கிறார். பண்பலை வானொலி நிலையமான ரேடியோ மிர்ச்சி அவருக்கு ”கிளப்புல மப்புல” என்ற பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆதி கோவை திரும்புகிறார்.

ஆதியின் தந்தையின் விருப்பத்தின் பேரில் ஆதி முதுகலை வணிக மேலாண்மை படிப்பிற்கு சென்னையில் விண்ணப்பிக்கிறார். திடீரென, ஆதி  "கிளப்புல மப்புல" பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுவதை அறிகிறார். ஆதியின் நம்பிக்கை புத்துயிர் பெறுகிறது. ஆதி இசைத்துறையில் தனது வாய்ப்பைத் தேடும் முயற்சியைத் தொடரப் போவதாகவும், அதே நேரத்தில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்து விடுவதாகவும் உறுதியளித்து சென்னை கிளம்புகிறார்.

நிலாவின் பெற்றோர் நிலாவின் திருமணத்தை உறுதி செய்ததை அறிந்து ஆதி அதிர்ச்சி அடைகிறார். ஆதி நிலாவைச்  சந்தித்து இன்னும் ஓராண்டு மட்டும் தனக்காகக் காத்திருக்கும்படி வேண்டுகிறார். இதற்கு நிலா ஏற்கெனவே தான் ஓராண்டு காலம் காத்திருந்து விட்டதாகவம், இனியும், தன்னால் காத்திருக்க இயலாதென்றும் தெரிவிக்கிறார். ஆதி மனமொடிந்து சென்னையை விட்டுத் திரும்புகிறார். நிலா தனது பெற்றோரின் விருப்பப்படி மணம் முடிக்கிறார். அதே நேரத்தில், ஆதி கிப்கொப் இசையில் புகழ்பெற்ற ஆளுமையாகிறார்.

நடிப்பு

  • ஆதித்யா(ஆதி)வாக கிப்கொப் தமிழா,
  • ஆதியின் தந்தை இராமச்சந்திரனாக விவேக்
  • ஆதியின் காதலி நிலாவாக ஆத்மிகா
  • ஆதியின் அம்மாவாக விஜயலெட்சுமி
  • ஆதியின் நண்பன் ஜீவாவாக 'ஸ்மைல் சேட்டை' ஆர். ஜே. விக்னேஷ்காந்த்
  • நிலாவின் மாமாவக கஜராஜ்
  • நிலாவின் தோழி மனீஷாவாக மாளவிகா
  • ரேடியோ ஜாக்கி மா கா பா ஆனந்தாக மா கா பா ஆனந்த் 
  • ராமாக ஃபென்னி ஒலிவியெர்
  • ஆதியின் தம்பி அஸ்வினாக ஆனந்த் ராம்
  • பாலாஜி/பிஜிலியாக 'கோயில் குரங்குகள்' ஷா ரா
  • அருணாக குகன் பிரகாஷ்
  • நிர்மலாக (மொட்ட) 'மெட்ராஸ் சென்ட்ரல்' முத்து
  • சஞ்சயாக 'ஸ்மைல் சேட்டை' அன்புதாசன்
  • விஷ்ணுவாக ஹரி ஹர கிருஷ்ணன்
  • 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி 
  • 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுந்தர் 
  • மார்சலாக பிரதீப் கே விஜயன்
  • ஷ்ரவணாக தமீம் அன்சாரி
  • சுதாகர் அண்ணாவாக வினோத் குமார்
  • மார்க்கண்டேயனாக பூவேந்தன்
  • ஆம்பள பட இசைத்தொகுப்புக் காட்சிகளில் சுந்தர் சி மற்றும் விஷால்

தயாரிப்பு

வளர்ச்சி

ஆகத்து 2013 இல் ஆதி கிப்கோப் தமிழா ஒரு முழுநீளத் திரைப்படம் தயாரிப்பதற்கு தனது கதையை ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டார். இதனடிப்படையில் உருவாக உள்ள திரைப்படம் 2014 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை வேண்டப்படாத திரைக்கதையை இயக்குவதற்கு தகுந்ததொரு இயக்குநரையும் தேடியதாகக் கூறியுள்ளார். ஒரு சுருக்கமான எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலைக்குப் பிறகு, அக்டோபர் 2016 இல், 90–வினாடி விளம்பரப்படம் ஒன்று கிப்கொப் தமிழாவின் யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்டது இத்திரைப்படமானது "மீசைய முறுக்கு" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், என். ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோரால் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாக செய்தி வெளியானது. ஜல்லிக்கட்டு குறித்த ஆதியின் டக்கரு டக்கரு பாடலால் ஈர்க்கப்பட்ட தேனாண்டாள் நிறுவனத்தார் ஆதி கதையை விவரித்த விதத்தைப் பார்த்து அவரையே கதாநாயகனாக நடிக்கக் கேட்டுக் கொண்டு ஐந்து நிமிட நேரத்தில் ஆதியின் கனவு நனவாக பச்சைக்கொடி காட்டினர். படம் முழுக்க வருகின்ற கதையின் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பதையும் தவிர்த்து, ஆதி இத்திரைப்படத்தின் எழுத்தையும், இயக்கத்தையும் கவனித்துக் கொண்டார். மேலும், அவர் இத்திரைப்படத்திற்கு இசை மற்றும் பாடல் வரிகள் எழுதுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டார். செய்தியாளர் சந்திப்பில் சுந்தர் சி இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன் இத்திரைப்படம் ஆதியின் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கூறும் படம் என்பதையும் உறுதிப்படுத்தினார். இத்திரைப்படத்தின் தலைப்பானது ஆதியின் தந்தை ஆதியிடம் அடிக்கடி பேசக்கூடிய "தோற்றாலும், ஜெயித்தாலும், மீசைய முறுக்கு" என்ற வசனத்தில் இருந்து வருவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

2017 திரைப்படம் மீசைய முறுக்கு கதைக்களம்2017 திரைப்படம் மீசைய முறுக்கு நடிப்பு2017 திரைப்படம் மீசைய முறுக்கு தயாரிப்பு2017 திரைப்படம் மீசைய முறுக்கு மேற்கோள்கள்2017 திரைப்படம் மீசைய முறுக்குகாதல் திரைப்படம்கிப்கொப் தமிழாதமிழ் மொழிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017விவேக் (நகைச்சுவை நடிகர்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐஞ்சிறு காப்பியங்கள்பெரியாழ்வார்தமிழில் சிற்றிலக்கியங்கள்கம்பராமாயணம்அகரவரிசைஇந்தியாவில் இட ஒதுக்கீடுபெரும்பாணாற்றுப்படைவிந்துமூலம் (நோய்)இந்திய வரலாறுபிரசாந்த்பொன்னுக்கு வீங்கிவேளாண்மைவிருத்தாச்சலம்திருத்தணி முருகன் கோயில்நேர்பாலீர்ப்பு பெண்பாண்டியர்நாம் தமிழர் கட்சிஆய்த எழுத்துஅறுபது ஆண்டுகள்பெண்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅஸ்ஸலாமு அலைக்கும்காச நோய்புற்றுநோய்விராட் கோலியுகம்கள்ளழகர் கோயில், மதுரைபதினெண் கீழ்க்கணக்குநாயன்மார்திருப்பாவைதமிழ் எழுத்து முறைகன்னத்தில் முத்தமிட்டால்காம சூத்திரம்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாண்டவர்ஸ்ரீலீலாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அமலாக்க இயக்குனரகம்மீனா (நடிகை)சிறுபாணாற்றுப்படைஅளபெடைகாவிரி ஆறுபெருங்கதைஉயிர்மெய் எழுத்துகள்சங்க காலம்மூலிகைகள் பட்டியல்திருமந்திரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மார்கழி நோன்புமொழிபெயர்ப்புஎஸ். ஜானகிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நீர்கிராம ஊராட்சிஇராமாயணம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பாசிப் பயறுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சுற்றுச்சூழல்தமிழர் அளவை முறைகள்மரம்சுபாஷ் சந்திர போஸ்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஜன கண மனடிரைகிளிசரைடுமுலாம் பழம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விடுதலை பகுதி 1முல்லைக்கலிகாளமேகம்69 (பாலியல் நிலை)தசாவதாரம் (இந்து சமயம்)விசயகாந்து🡆 More