பஞ்சாங்கம் பூரம்

பூரம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 11 ஆவது பிரிவு ஆகும்.

சிங்கராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூர நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூரம் ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினோராவது நட்சத்திரமாகிய பூரம் 133° 20'க்கும் 146° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன.

பெயரும் அடையாளக் குறியீடும்

பஞ்சாங்கம் பூரம் 
லியோ விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமசுக்கிருதப் பெயரான பூர்வ பால்குனி (Purva Phalguni) என்பது "முந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்" ஆகும்.

சோதிடத்தில் பூரம்

இயல்புகள்

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூர நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:

கோள் வெள்ளி
தேவதை பாக்கியா
தன்மை உக்கிரம்
சாதி பஞ்சம சாதி
கோத்திரம் வசிட்டர்
பால் பெண்
குணம் மனித குணம்
இயற்கை மூலம் நீர்
விலங்கு பெண் எலி
பறவை பெண் கழுகு
மரம் பலாசு
நாடி சுழுமுனை

குறிப்புக்கள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Tags:

பஞ்சாங்கம் பூரம் பெயரும் அடையாளக் குறியீடும்பஞ்சாங்கம் பூரம் சோதிடத்தில் பூரம்பஞ்சாங்கம் பூரம் குறிப்புக்கள்பஞ்சாங்கம் பூரம் உசாத்துணைகள்பஞ்சாங்கம் பூரம் இவற்றையும் பார்க்கவும்பஞ்சாங்கம் பூரம் வெளியிணைப்புக்கள்பஞ்சாங்கம் பூரம்இந்தியாஇராசிச் சக்கரம்சிங்கம் (இராசி)நட்சத்திரம் (பஞ்சாங்கம்)பஞ்சாங்கம்வானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைரமுத்துஉப்புச் சத்தியாகிரகம்இந்தியத் தலைமை நீதிபதிபெரும்பாணாற்றுப்படைசிவனின் 108 திருநாமங்கள்முன்னின்பம்நிணநீர்க்கணுநெல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅகத்திணைதமிழர் விளையாட்டுகள்பழைய ஏற்பாடுமத்தி (மீன்)எஸ். ஜானகிகுண்டலகேசிதிருப்பாவைவன்னியர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இராவண காவியம்மீன்முகம்மது நபிகண்டி மணிக்கூட்டுக் கோபுரம்முகலாயப் பேரரசுசீரகம்உழைப்பாளர் சிலைதேவாரம்ஆந்திரப் பிரதேசம்தினமலர்கன்னத்தில் முத்தமிட்டால்கட்டபொம்மன்நாடகம்திராவிட மொழிக் குடும்பம்கருச்சிதைவுபில்லா (2007 திரைப்படம்)குருதிச் சிறுதட்டுக்கள்மாப்பிள்ளை லெப்பை ஆலிம்புனர்பூசம் (நட்சத்திரம்)களத்தில் சந்திப்போம்சங்க காலப் புலவர்கள்ஹரிணிசென்னை உயர் நீதிமன்றம்கிராம நத்தம் (நிலம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஆரோக்கியசாமி வேலுமணிஅகரவரிசைபூனா ஒப்பந்தம்தமிழர் அணிகலன்கள்நம்ம வீட்டு பிள்ளைதில்லி சுல்தானகம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்நாம் தமிழர் கட்சிஐந்திணைகளும் உரிப்பொருளும்ம. கோ. இராமச்சந்திரன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆனைக்கொய்யாநெசவுத் தொழில்நுட்பம்ஜெயகாந்தன்கொங்கு வேளாளர்இலங்கைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தாராபாரதிஉரைநடைராதிகா குமாரசாமிஇளங்கோவடிகள்கார்ல் மார்க்சுசமசுகிருதம்பெயர்ச்சொல்ஆற்றுப்படைசுந்தரமூர்த்தி நாயனார்வீரமாமுனிவர்உயிர்மெய் எழுத்துகள்வட்டாட்சியர்விஜய் (நடிகர்)மகேந்திரசிங் தோனிஆழ்வார்கள்திருமலை (திரைப்படம்)வியாழன் (கோள்)🡆 More