பசிபிக் தீவுகள்

பசிபிக் தீவுகள் (Pacific Islands) எனப்படுபவை பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 20,000 முதல் 30,000 தீவுகளைக் குறிக்கும்.

ஆஸ்திரேலியா தவிர்ந்த மற்றையவை பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. அவை: மெலனேசீயா, மைக்குரொனேசியா, பொலினேசியா என்பவை. இங்கு வாழும் மக்கள் பசிபிக் தீவு மக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

பசிபிக் தீவுகள்
துவமோட்டு, பிரெஞ்சுப் பொலினேசியா

பசிபிக் தீவுகள் சில நேரங்களில் கூட்டாக ஓசியானியா என அழைக்கப்படுகின்றன.

மெலெனேசியா என்பது கருப்புத் தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூ கினி, நியூ கலிடோனியா, செனாட் கெஸ் (டொரெஸ் நீரிணைத் தீவுகள்), வனுவாட்டு, பிஜி, மற்றும் சொலமன் தீவுகள் ஆகும்.

மைக்குரொனேசியா என்பது சிறிய தீவுகள் எனப் பொருள்படும். இவை மரியானாஸ், குவாம், வேக் தீவு, பலாவு, மார்சல் தீவுகள், கிரிபட்டி, நவூரு, மற்றும் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் என்பனவாகும். இவற்றின் பெரும்பாலானவை நிலநடுக் கோட்டின் வடக்கே காணப்படுகின்றன.

பொலினேசியா என்பது பல தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூசிலாந்து, ஹவாய் தீவுகள், ரொட்டுமா, மிட்வே தீவுகள், சமோவா, அமெரிக்க சமோவா, தொங்கா, துவாலு, குக் தீவுகள், பிரெஞ்சுப் பொலினேசியா, ஈஸ்டர் தீவு ஆகியனவாகும். மூன்று வலயங்களிலும் இவையே மிகப் பெரியதாகும்.

இந்தப் பிராந்தியத்தின் தீவுகள் உயர் தீவுகள் மற்றும் தாழ் தீவுகள் என இரண்டு வலயங்களாக வகுக்கப்பட்டுள்ளன. எரிமலைகள் உயர் தீவூகளை அமைத்துள்ளன. இவை பொதுவாக கூடியளவு மக்களைக் கொள்ளக்கூடியது, மேலும் இவை வளம் மிக்க மண்ணைக் கொண்டுள்ளன. தாழ் தீவுகள் பொதுவாக கற்பாறைகளையும், பவழக் கற்பாறைகளையும் கொண்டுள்ளன. இவற்றின் மணல் பொதுவாக வளமற்றவை. மூன்று பிரிவுகளிலும் மெலனேசியா தீவுகளி பெரும்பாலானவை உயர் வலயத்தில் அமைந்துள்ளன. மற்றைய இரண்டு பிரிவு தீவுகள் தாழ் வலயத்தில் உள்ளன.

இவற்றை விட வேறு பல தீவுகளும் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளன. ஆனால் இவை ஓசியானியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கவில்லை. இவை எக்குவடோரின் கலாபகசுத் தீவுகள்; அலாஸ்காவின் அலூசியன் தீவுகள்; ரஷ்யாவின் சக்காலின், கூரில் தீவுகள்; தாய்வான்; பிலிப்பீன்ஸ்; தென் சீனக் கடல் தீவுகள்; இந்தோனீசியாவின் பெரும்பாலான தீவுகள்; மற்றும் ஜப்பான் ஆகியவை.

அடிக்குறிப்புகள்


Tags:

ஆஸ்திரேலியாதீவுபசிபிக் பெருங்கடல்பொலினேசியாமெலனேசீயாமைக்குரொனேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண்டு வட்டம் அட்டவணைபிரெஞ்சுப் புரட்சிதமிழர் பருவ காலங்கள்பாரத ரத்னாஇந்தியாசிறுநீரகம்வேளாண்மைதிருத்தணி முருகன் கோயில்வாதுமைக் கொட்டைஅயோத்தி தாசர்தேவநேயப் பாவாணர்மயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்எஸ். ஜெகத்ரட்சகன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடு அமைச்சரவைதுரை வையாபுரிசோழர்மக்களவை (இந்தியா)இந்து சமயம்ஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய வரலாறுதிருக்குர்ஆன்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிலம்பரசன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நபிவேலூர் மக்களவைத் தொகுதிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇலக்கியம்மாணிக்கவாசகர்மதயானைக் கூட்டம்பெயர்ச்சொல்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்செம்பருத்திநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மொரோக்கோகொங்கு வேளாளர்திருப்போரூர் கந்தசாமி கோயில்கருக்கலைப்புஅரபு மொழிகோத்திரம்இந்திரா காந்திதிருக்குறள்நெல்எம். கே. விஷ்ணு பிரசாத்வாழைப்பழம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஇசுலாம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பண்பாடுகீர்த்தி சுரேஷ்கரிகால் சோழன்காம சூத்திரம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மதீனாநயினார் நாகேந்திரன்மாலைத்தீவுகள்பிரீதி (யோகம்)அருந்ததியர்மலக்குகள்சவ்வாது மலைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமுதுமலை தேசியப் பூங்காஎஸ். ஜானகிஉமாபதி சிவாசாரியர்நஞ்சுக்கொடி தகர்வுபெண் தமிழ்ப் பெயர்கள்உஹத் யுத்தம்அத்தி (தாவரம்)பண்ணாரி மாரியம்மன் கோயில்திருநங்கைவிஷ்ணு🡆 More