சாய்செவ்வகம்

இருபரிமாண வடிவவியலில் வழக்கமாக சாய்செவ்வகம் (rhomboid) என்பது சமமில்லா அடுத்துள்ள பக்கங்களையும் சாய்கோணங்களையும் கொண்ட ஒரு இணைகரமாகும்.

சாய்செவ்வகம்
சாய்செவ்வக வடிவங்கள்

ஒரு இணைகரத்தின் நான்கு பக்கங்களும் சமமாக இருந்தால் அது ஒரு சாய்சதுரம், ஆனால் சாய்செவ்வகம் அல்ல.

செங்கோண மூலைகள் கொண்ட இணைகரம் ஒரு செவ்வகம், ஆனால் சாய்செவ்வகம் அல்ல.

பெரும்பாலும் ராம்பாய்ட் என்ற சொல் இணைகரத்திண்மத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சில படிகங்கள் முப்பரிமாண சாய்செவ்வக வடிவில் உள்ளன. இவை சாய்சதுர பட்டகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அறிவியலில், சாய்செவ்வகம் என்ற வார்த்தை இரு மற்றும் முப்பரிமாண பயன்பாடு கொண்டுள்ளது.

யூக்ளிடு, அவரது எலிமெண்ட்ஸ் புத்தகம் I, வரையறை 22 -ல் இச்சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாற்கர வடிவங்களில் சமபக்கங்களுடனும் செங்கோணங்களுடனும் அமைவது சதுரம்; செவ்வகம் செங்கோணங்களிடையது ஆனால் சமபக்கங்களுடையதல்ல; சாய்சதுரம் சமபக்கங்களுடையது ஆனால் செங்கோணங்களுடையது அல்ல; சாய்செவ்வகத்தின் எதிரெதிர் பக்கங்கள் சமமானவை, எதிரெதிர் கோணங்கள் சமம். ஆனால் சமபக்கங்களோ அல்லது செங்கோணங்களோ கொணடது அல்ல. இவையல்லாத ஏனைய நாற்கரங்கள் ஒழுங்கற்ற நாற்கரங்கள் (trapezia) என அழைக்கப்படலாம்

யூக்ளிட் சாய்செவ்வகத்தின் வரையறையைப் பின்பு வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தவில்லை. புத்தகம் I, கூற்று 31 -ல் இணைகரம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்; " இணைகரப் பரப்புகளில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் எதிர் கோணங்கள் சமமாகவும் அமையும்; மற்றும் விட்டம் பரப்பை இருசமக்கூறிடும்." ஹீத்தின் கருத்தின்படி சாய்செவ்வகம் என்பது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு பழமையான சொல்.

சமச்சீர்கள்

சாய்செவ்வகத்திற்கு சமச்சீர் அச்சுக்கோடுகள் கிடையாது. ஆனால் வரிசை 2 கொண்ட சுழற்சி சமச்சீர் உண்டு.

உயிரியலில்

உயிரியலில், சாய்செவ்வக வடிவ தசைகள், இலைகளில் அல்லது தலைக்காலிகளில் காணப்படும் இருபக்க சமச்சீர்மை கொண்ட பட்டவடிவ அல்லது சாய்சதுர வடிவ சுற்றுக்கோடு ஆகியவற்றை விளக்க சாய்செவ்வக வடிவ கருத்து பயன்படுகிறது.

வெளி இணைப்புகள்

Tags:

இணைகரம்வடிவவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இனியவை நாற்பதுவிபுலாநந்தர்எங்கேயும் காதல்டி. எம். கிருஷ்ணாமனித உரிமைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நுரையீரல் அழற்சிநவக்கிரகம்இயேசுவின் இறுதி இராவுணவுஅதிமதுரம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மரபுச்சொற்கள்ஆரணி மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஅறுபது ஆண்டுகள்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்செங்குந்தர்நீரிழிவு நோய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கோயம்புத்தூர்மட்பாண்டம்உ. வே. சாமிநாதையர்இயற்கை வளம்மு. க. ஸ்டாலின்பாரத ரத்னாவெள்ளியங்கிரி மலைதிராவிட இயக்கம்இராவண காவியம்புற்றுநோய்சிற்பி பாலசுப்ரமணியம்ராம் சரண்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)புதுமைப்பித்தன்மரகத நாணயம் (திரைப்படம்)குமரிக்கண்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்முத்துராமலிங்கத் தேவர்கருணாநிதி குடும்பம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அக்கி அம்மைசெரால்டு கோட்சீசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மஞ்சும்மல் பாய்ஸ்எட்டுத்தொகை தொகுப்புமு. கருணாநிதிபித்தப்பைஞானபீட விருதுதொல்லியல்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பனிக்குட நீர்சாரைப்பாம்புதிருமுருகாற்றுப்படைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நிர்மலா சீதாராமன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பங்குனி உத்தரம்இந்திபாசிசம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளிபிரீதி (யோகம்)தாஜ் மகால்அவிட்டம் (பஞ்சாங்கம்)நாம் தமிழர் கட்சிஉலக நாடக அரங்க நாள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஉன்னை நினைத்துபெரியாழ்வார்செயற்கை நுண்ணறிவுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅகழ்வாய்வுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வெ. இராமலிங்கம் பிள்ளைஎல். முருகன்🡆 More