சங்ககிரி மலைக்கோட்டை

சங்ககிரி மலைக்கோட்டை (Sankagiri hill) சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் 'சங்கரி துர்க்கம்' என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும்.

இது சேலத்திலிருந்து 35 கிமீ மேற்கில் அமைந்துள்ளது.

சங்ககிரி மலைக்கோட்டை
பகுதி: தமிழ்நாடு
சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
சங்ககிரி மலைக்கோட்டை
நுழைவுவாயில்
சங்ககிரி மலைக்கோட்டை is located in தமிழ் நாடு
சங்ககிரி மலைக்கோட்டை
சங்ககிரி மலைக்கோட்டை
வகை கோட்டைகள்
இடத் தகவல்
உரிமையாளர் தமிழ்நாடு அரசு
கட்டுப்படுத்துவது விஜயநகரப் பேரரசு
மைசூர் அரசு
ஐக்கிய இராச்சியம்

இந்திய அரசு (1947-)

நிலைமை இடிந்த நிலை

பெயர்க்காரணம்

  • இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதாலும்,கிரி என்றால் மலை என்று அர்த்தம் என்பதாலும் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வரலாறு

வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும்.

மலையின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் இக்கோட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என அறியப்படுகிறது. 9வது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஆங்கிலேயர்களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.

சங்ககிரி மலைக்கோட்டை 
மலை உச்சியில்
சங்ககிரி மலைக்கோட்டை 
மலையிலிருந்து சங்ககிரி நகரின் தோற்றம்

கோட்டையின் மூன்றாவது வாயிலில் வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. 5ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5ஆம் 6ஆம் வாயில்களுக்கிடையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேசுவரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தி பாதுகாப்பில் உள்ளது.

கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தளங்கள்

  1. கீழ் அரணில் சிவன் கோவில்
  2. வரதராசப் பெருமாள் கோவில்
  3. சென்ன கேசவப் பெருமாள் கோவில்
  4. தஸ்தகீர் மகான் தர்கா
  5. கெய்த் பீர் பள்ளிவாசல்

தீரன் சின்னமலை

இக்கோட்டையில் தீரன் சின்னமலையை ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள்.

மேற்கோள்கள்

Tags:

சங்ககிரி மலைக்கோட்டை பெயர்க்காரணம்சங்ககிரி மலைக்கோட்டை வரலாறுசங்ககிரி மலைக்கோட்டை கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தளங்கள்சங்ககிரி மலைக்கோட்டை தீரன் சின்னமலைசங்ககிரி மலைக்கோட்டை மேற்கோள்கள்சங்ககிரி மலைக்கோட்டைசங்ககிரிசேலம் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்நீர்திரு. வி. கலியாணசுந்தரனார்நாயன்மார்சுந்தர் சி.சிறுத்தொண்ட நாயனார்மும்பை இந்தியன்ஸ்காடழிப்புநஞ்சுக்கொடி தகர்வுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இயற்கை வளம்மறவர் (இனக் குழுமம்)பர்த்தலோமேயு சீகன்பால்க்தமிழர் விளையாட்டுகள்கண்ணகிஜி. யு. போப்புரோஜெஸ்டிரோன்தணிக்கைஇரகுநாத கிழவன்தாஜ் மகால்சூரரைப் போற்று (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்வெள்ளி (கோள்)நீதித்துறைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்குதிரைவாலிஔவையார் (சங்ககாலப் புலவர்)மஞ்சும்மல் பாய்ஸ்ஆளி (செடி)மு. க. ஸ்டாலின்மதுரை நாயக்கர்மாணவர்கம்பராமாயணம்சிவபெருமானின் பெயர் பட்டியல்திருமலை நாயக்கர் அரண்மனைகர்நாடகப் போர்கள்கில்லி (திரைப்படம்)தஞ்சாவூர்கண்ணாடி விரியன்தினத்தந்திதமன்னா பாட்டியாதேவநேயப் பாவாணர்சிறுபஞ்சமூலம்வெப்பநிலைதமிழர் சிற்பக்கலைதமிழர் நிலத்திணைகள்மே 6பட்டினப் பாலைபெருஞ்சீரகம்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிபெயர்ச்சொல்ஆறுமுக நாவலர்வே. செந்தில்பாலாஜிகடையெழு வள்ளல்கள்முதற் பக்கம்காதல் தேசம்இசைபெண்கட்டடக்கலைதக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)சாரைப்பாம்புசங்ககாலப் போர்முறைமருது பாண்டியர்நீர் மாசுபாடுஆண்டாள்ஸ்ரீலீலாபிரசாந்த்உ. வே. சாமிநாதையர்அளபெடைநிதி ஆயோக்தமிழர்கன்னி (சோதிடம்)இயேசு காவியம்மு. வரதராசன்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)கூகுள்அய்யா வைகுண்டர்கினோவா🡆 More