திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர்.

1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.

திப்பு சுல்தான்
Tippu Sultan
மைசூர் மன்னன்
திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் உருவப்படம் (1792)
ஆட்சி1782–1799
முன்னிருந்தவர்ஹைதர் அலி
தந்தைஹைதர் அலி
தாய்பாக்ர்-உன்-நிசா
தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்
பாண்டிய சுல்தான்கள்
சையித் இப்ராகிம் கி.பி. 1142 - 1207
செய்யிது சமாலுதீன் கி.பி. 1293 -1306
தில்லி சுல்தானகம்
முகமது பின் துக்ளக் கி.பி. 1323-1335
மதுரை சுல்தான்கள்
ஜமாலுத்தீன் ஹஸன்ஷா
அல்லாவுடீன் உடான்றி
குட்புதீன்
நாசிருதீன்
அடில்ஷா
பஃருடீன் முபாரக் ஷா
அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா
ஆற்காடு நவாப்புகள்
நவாப் சுல்பிகர் அலி கான் கி.பி. 1692 - 1703
நவாப் தாவுத் கான் கி.பி. 1703 - 1710
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் I கி.பி. 1710 - 1732
நவாப் தோஸ்த் அலி கான் கி.பி. 1732 - 1740
நவாப் ஸஃப்தார் அலி கான் கி.பி. 1740 - 1742
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் II கி.பி. 1742 - 1744
நவாப் அன்வர்தீன் முகம்மது கான் கி.பி. 1744 - 1749
நவாப் சந்தா சாகிப் கி.பி. 1749 - 1752
நவாப் முகம்மது அலி கான் வாலாஜா கி.பி. 1749 - 1795
நவாப் உத்தாத் உல் உம்ரா கி.பி. 1795 - 1801
நவாப் ஆசிமுத்துல்லா கி.பி. 1801 - 1819
நவாப் ஆசம் ஜா கி.பி. 1819 - 1825
நவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் கி.பி. 1825 - 1855
மற்றவர்கள்
முகம்மது யூசுப்கான் கி.பி. 1759 - 1764
திப்பு சுல்தான் கி.பி. 1782- 1799
edit

இளமைக்காலம்

திப்பு சுல்தான் பெங்களூர் நகருக்கு வடக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவன அள்ளியில் 1750-ஆம் ஆண்டு நவம்பர் இருபதாம் நாள் பிறந்தார். இவரது தந்தையான ஐதர் அலி மைசூர் அரசின் படையில் அதிகாரியாக இருந்தார். தாயார் கடப்பாக் கோட்டையின் ஆளுனரின் மகளான மீர் முயினுதீன் ஆவார். ஐதர் அலி முறையான கல்வி கற்றவர் அல்ல. இதனால் அவர் திப்புசுல்தானுக்கு ஆசிரியர்களை நியமித்து உருது, பெர்சியன், கன்னடம், அரபி மொழிகளும் குரான், குதிரையேற்றம், வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல், இசுலாமிய நீதிமுறை போன்றவற்றிலும் பயிற்சி பெற்றார். திப்பு சுல்தான் தனது 17-ஆம் வயதிலிருந்து அரசியல், போர் நடவடிக்கைகளைத் தலைமையேற்று நடத்தினார்.

மைசூர் அரசாட்சி

இறப்பு

வெல்லெஸ்லி பிரபு துணைப்படை திட்டத்தின் ஒரு பகுதியாக மைசூரில் ஆங்கிலேய படை ஒன்றை நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு திப்பு சுல்தான் உடன்படவில்லை. இதனால் ஆங்கிலேயர் போரை அறிவித்தனர். இது நான்காம் மைசூர் போர் என்று அழைக்கப்படுகிறது. இது 1799 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டிணத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஒரு ஐரோப்பிய படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நிர்வாகம்

"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் " திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.

"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்". என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லஸ்லி.[மேற்கோள் தேவை]

ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.[மேற்கோள் தேவை]

மைசூர் ஏவுகணைகள்

திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.

இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றைத் திருத்தியமைத்துப் பயன்படுத்தியதையும், மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடமிருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரித்தானிய விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.

கப்பற்படை

பொருளாதாரம்

வெளியுறவு

சமூக அமைப்பு

நீதி அமைப்பு

திப்பு சுல்தான் இந்து மற்றும் முஸ்லீம் குடிமக்களுக்காக இரு சமூகங்களிலிருந்தும் நீதிபதிகளை நியமித்தார். ஒவ்வொரு மாகாணத்திலும், முஸ்லிம்களுக்குக் காஜி மற்றும் இந்துக்களுக்கு பண்டிட் நியமிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றங்களும் இதே போன்ற அமைப்பைக்கொண்டிருந்தது.

ஒழுக்க அறம் நிர்வாகம்

அவரது நிர்வாகத்தில் மதுபானம் மற்றும் விபச்சாரம் கறாராகத் தடைசெய்யப்பட்டிருந்தது. கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் தடைசெய்யப்பட்டது.

கேரளாவில் பல கணவர் மனம் நடைமுறைகளை, திப்பு சுல்தானால் தடைசெய்யப்பட்டது. முந்தைய காலங்களில் முலை வரி பண்பாட்டால் கேரளாவில் அனைத்து பெண்களின் மார்பகங்களையும் மறைப்பது நடைமுறையில் இல்லாததினால், அனைத்து பெண்களும் மார்பகங்களை மறைக்கலாம் என்பதற்காக ஒரு ஆணையை நிறைவேற்றினார்.

ஆணை பின்வருமாறு:

பாலகாட்டின் முழு பிரதேசங்களிலும் (அதாவது, மலை காடுகளின் கீழே உள்ள நாட்டில்) பெரும்பாலான இந்துப் பெண்கள் தங்கள் மார்பகங்களையும் மறைக்காமல், தலைவிரித்து அவிழ்த்துக் கொண்டு செல்கிறார்கள். இது விலங்குகளைப் போன்று நடத்துவதாகும். இந்தப் பெண்களில் யாரும் இனி ஒரு முழுமையான அங்கி (மார்பகங்களை மறைக்க), மற்றும் முக்காடு இல்லாமல் வெளியே செல்லக் கூடாது.

சமயக் கொள்களைகள்

இந்துக்களுடனான உறவுகள்

இந்து அதிகாரிகள்

திப்பு சுல்தானின் பொருளாளராகக் கிருஷ்ணா ராவ் என்பவரும், ஷாமையா ஐயங்கார் அவரது தபால் மற்றும் காவல்துறை அமைச்சராகவும், அவரது சகோதரர் ரங்கா ஐயங்கார் ஒரு அதிகாரியாகவும், பூர்ணையா என்பவர் "மிர் அசாஃப்" எனும் மிக முக்கியமான பதவியையும் வகித்தார். முகலாய அரசவையில், மூல்சந்த் மற்றும் சுஜன் ராய் அவரது தலைமை முகவர்களாக இருந்தனர், மேலும் அவரது "பெஷ்கர்" தலைவரான சுபா ராவும் என்பவரும் ஒரு இந்துவாக இருந்தார்.

கைதிகளை நடத்தியவிதம்

ஆட்சியின் சிறப்பு

  • அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.[சான்று தேவை]
  • கப்பல் கட்டும் தளம் அமைத்தார்[சான்று தேவை]
  • இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.[சான்று தேவை]
  • கிராமங்களும் நகரங்களுக்குச் சமமான வளர்ச்சியை அடைந்தன.[சான்று தேவை]
  • போரில் ராக்கெட் தாக்குதல்களைப் பயன்படுத்தினார். இதற்குச் சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர்மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.

காரன் வாலீஸின் சிலை

திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காகத் திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

ஏலம்

2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

திப்பு சுல்தான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tipu Sultan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

திப்பு சுல்தான் இளமைக்காலம்திப்பு சுல்தான் மைசூர் அரசாட்சிதிப்பு சுல்தான் இறப்புதிப்பு சுல்தான் நிர்வாகம்திப்பு சுல்தான் ஆட்சியின் சிறப்புதிப்பு சுல்தான் காரன் வாலீஸின் சிலைதிப்பு சுல்தான் ஏலம்திப்பு சுல்தான் மேற்கோள்கள்திப்பு சுல்தான் வெளி இணைப்புதிப்பு சுல்தான்17501799இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போர்நவம்பர் 20மூன்றாம் ஆங்கில-மைசூர்ப் போர்மே 4மைசூர் அரசுஸ்ரீரங்கப்பட்டணம்ஹைதர் அலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாதுளைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பஞ்சபூதத் தலங்கள்மனித மூளைமுல்லை (திணை)தபூக் போர்நீர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)கடல்எஸ். ஜானகிசெயற்கை அறிவுத்திறன்நபிசுற்றுலாகாய்ச்சல்சிங்கம்மலேசியாஏலாதிஆகு பெயர்அம்லோடிபின்அண்டர் தி டோம்முப்பரிமாணத் திரைப்படம்சங்க காலம்போயர்ஆண்டு வட்டம் அட்டவணைவேதாத்திரி மகரிசிமிருதன் (திரைப்படம்)குருத்து ஞாயிறுயூடியூப்தமிழ்நாடு அமைச்சரவைமுதலுதவிஅன்புமணி ராமதாஸ்ஆழ்வார்கள்வே. செந்தில்பாலாஜிவிடுதலை பகுதி 1மைக்கல் ஜாக்சன்டி. எம். சௌந்தரராஜன்பண்டமாற்றுபஞ்சாபி மொழிகுறிஞ்சிப் பாட்டுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857மொழிவரலாறுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்எஸ். சத்தியமூர்த்திவைரமுத்துவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்நான்மணிக்கடிகைசுந்தர காண்டம்இந்து சமய அறநிலையத் துறைஎச்.ஐ.விநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பனைசிங்கப்பூர்சிதம்பரம் நடராசர் கோயில்கோயம்புத்தூர் மாவட்டம்நடுக்குவாதம்பழமுதிர்சோலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கொச்சி கப்பல் கட்டும் தளம்இயேசுமுனியர் சவுத்ரிபாண்டியர்ஆண்குறிதாஜ் மகால்களவழி நாற்பதுவிருத்தாச்சலம்ஏ. வி. எம். ராஜன்வன்னியர்வேதநாயகம் பிள்ளைஅல்லாஹ்லக்ன பொருத்தம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சுருட்டைவிரியன்சுரைக்காய்கோயம்புத்தூர்பதுருப் போர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஉணவு🡆 More